Tuesday 8 September, 2009

தமிழ்..


உங்களில் பலருக்கும் இருக்கும் இந்த சந்தேகம் இருக்கும் என நம்புகிறேன். தமிழில் மட்டும் தான் சொல் வடிவமும், வரி வடிவமும் (அதாவது பேச்சு வழக்கும், எழுத்தும்) வெவ்வேறா? அல்லது பிற மொழிகளிலும் உண்டா?
எனக்கு தினமும் பரிச்சியமான மொழிகள் இரண்டு. தெலுங்கு மற்றும் ஹிந்தி. ஏனெனில் என் அறை நண்பர் ஒரு தெலுங்கர் மற்றும் முசல்மான். அவரின் ஹிந்தி உருது கலந்திருந்தாலும் ஓரளவு புரியும்.
அவரிடம் இந்த கேள்வியை கேட்டேன். "நீங்கள் எழுதுவது போல் தான் பேசுவீர்களா?". முதலில் வினா புரியாமல் முழித்தார். விளக்கினேன்.
தமிழில் - "இருக்கிறேன்" சுருங்கி "இருக்கேன்"
"வருகிறேன்" சுருங்கி "வர்றேன்"
இது போல் அவர் அறிந்த ஹிந்தியிலோ தெலுங்கிலோ உண்டா என்றேன்.
சிறிது யோசித்துவிட்டு சொன்னார். இல்லை.
இன்று வரை தமிழில் "வர்றேன்", "இருக்கேன்" என்று தான் எழுதுவோம் என்று நினைத்துக்கொண்டு இருந்திருக்கிறார். தெலுங்கிலும், ஹிந்தியிலும் வட்டார வழக்கு மாறுபடுமே தவிர, எழுத்துக்கும், பேச்சுக்கும் பெரும் வித்தியாசமில்லை என்றார்.
இன்னும் எனக்கு தெரிந்த அலுவலக நண்பர்களையும் கேட்டேன். அவர்களும் அதே சொன்னார்கள்.
வியப்பாகத்தான் இருக்கிறது.. ஏன் தமிழ் சுருங்கியது. அல்லது அது பேச்சு வழக்கிற்கு கடினமான மொழியா? அத்துனை நீளமான வார்த்தைகளை பேசுவதன் விளைவாக விளைந்ததா?
எப்படியோ தமிழும் தமிழனும் - வித்தியாசமானவர்கள்.. கமல் போல்..

2 comments:

  1. இது தான் மரபு திரிதலோ ?

    ReplyDelete
  2. தலைவர் பனிரெண்டாவது தமிழ் இன்னும் ஞாபகம் வச்சிருக்கார்..

    ReplyDelete