திரைக்கதை எழுதுவது எப்படி.. - சத்தியமாக நன் சொல்லப்போவதில்லை. அமரர் சுஜாதாவின் பன்முகத்தில் சினிமாவைப்பற்றிய அவரின் புரிதலையும், எதையும் ஒரு நேர்த்தியுடனும், நவீனத்தனத்துடனும் அணுகும் அவரது லாவகத்தையும் எடுத்துரைக்கும் மற்றுமொறு படைப்பு. அதை படித்த பின் எனக்கு ஏற்பட்ட வியப்பை இங்கு பகிர்ந்து கொள்ள போகிறேன்.
பல நாட்களாக இணையம் இணக்கமாகததால் படித்த மறுநொடியே தோன்றிய எண்ணம் இப்பொழுது தான் நனவாகிறது. திரைக்கதை என்பதை நம் இயக்குனர்கள் (இங்கேது தனியாக திரைக்கதையாளர்கள்!) எவ்வளவு தூரம் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள் என காட்டுகிறார். திரைக்கதை என்பது எவ்வளவு சுருக்கமாக, நுணுக்கமாக இருக்க வேண்டும் என்பதை விவரிக்கிறார்.
வசனம் மட்டும் திரைக்கதை அல்ல. அதை வெளிப்படுத்தும் விதம், நேரம், காலம், இடம் அனைத்தையும் விவரிப்பதே திரைக்கதை என்பதையும், காமிரா கோணத்தையும், நடிகர்களின் ஆடை வடிவமைப்பும் திரைக்கதையாளனின் வேலை இல்லை என்பதினையும் தெளிவு படுத்துகிறார்.
சுருக்கமாக சொல்ல, நூற்றிருபது பக்கங்கள் எழுதுங்கள், முப்பது பக்கங்கள் முன் கதை, அடுத்த அறுபது பக்கங்கள் அதன் விளைவுகள், கடைசி முப்பது பக்கங்களில் முடிவை நோக்கிய பயணம். அனைத்து இயக்குனர்களும் இவரை பின்பற்றி விட்டால் தோல்வியே இருக்காது என சொல்லமுடியாவிட்டாலும், தோல்விகள் குறையும். நான் பின்பற்ற போகிறேன். :)
syd field oda "screenplay: foundations of screen writing" padi da... its a good second step.. nan recenta than padichen..
ReplyDeleteHmm.. Thanks for the suggestion..
ReplyDelete