காதலில் சொதப்புவது எப்படி.. - வெகுவாக நான் எதிர்பார்த்த படம். கிட்ட தட்ட பாலாஜி (என் பேராக்கும்) ஜெயிக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினேன். முதல் நாள் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். முடியாமல் அடுத்த வார இறுதியில் ஆர்வத்துடன் தியேட்டரில் சென்று அமர்ந்தேன். டிக்கெட் சுலபமாக கிடைத்துவிட்டது. எந்திரனே இரண்டாம் வாரம் காற்றாடியது. சமீப காலங்களில் தியேட்டர் நிரம்பி வழிந்தது 'கோ' விற்கு மட்டும். இதையல்லாம் மனதிலிருந்து அகற்றி விட்டு நிமிர்ந்தேன் படம் ஆரம்பித்தது. முதல் காட்சி குறும்படத்தில் வந்த அதே 'நீ சொல்லு நீயே சொல்லு'. குறும்படத்தில் இன்னும் அழகாக கையாளப்பட்டிருந்ததாக தோன்றியது. சரி ஆரம்பம் தானே என்று படத்தை தொடர்ந்தேன்.
திரைக்கதையின் ஆதார விதியாக, 'மக்களைக்குழப்பாதீர்கள்' என்பதை சொல்வார்கள். இப்படம் அந்த இடத்தில் சறுக்குகிறது. தொட்டதுக்கெல்லாம் 'Flash back'. கதைக்குள் கதைக்குள் கதை. அடுத்த காட்சி எங்கே நடக்கிறது என்பதில் குழப்பம். தீர்க்க முடியாமல் தவிக்கிறார் பாலாஜி மோகன்.
படம் முழுக்க இதற்காகத்தான் இந்தக்காட்சி என விளக்கம் தரும் வசனங்கள் அலுப்படிக்கின்றன. குறும்படத்தில் இருந்த 'smartness' இல்லை. மக்கள் இயல்பாக இல்லை. வெகு சிலரே கவர்கிறார்கள். ஆண்கள் கடைக்குள் புகுந்து பெண்கள் உள்ளாடை பிரிவில் அசடு வழிகிறார் ராகவேந்தர். சொதப்பல். பாடல்கள் படத்தை நிறுத்துகின்றன (தூக்கி அல்ல). பாலாஜி (இயக்குனர் அல்லாத பாலாஜி) வரும் காட்சிகள், உச்ச் கொட்ட வைக்கின்றன.
கடைசி பதினைந்து நிமிடங்களில் படத்தை மீட்டெடுக்க நினைத்து பாதி ஜெயிக்கிறார். மீதிப்பாதி, மன்னிக்கவும் சொதப்பிவிட்டார் பாலாஜி (இது இயக்குனர் பாலாஜி).