Tuesday, 22 September 2009

உன்னை போல் ஒருவன்..


உன்னை போல் ஒருவன் - கமலின் மர்மயோகி ரத்தாகி, அவர் "A Wednesday" வை தமிழ் பதிப்பு செய்வதாக கேள்விப்பட்டபொழுது சிறிது வருத்தமாகவே இருந்தது. ஏனென்றால் நான் ஹிந்தி பதிப்பை ஏற்கனவே பார்த்து விட்டேன். படம் அற்புதமாக இருந்தாலும் இரண்டாம் முறை பார்க்கும் பொழுது முதல் முறையின் சுவாரசியம் இருக்காது என ஒரு எண்ணம். அதை பொய் ஆக்கிவிட்டார் கமல்.
ஹிந்தி பதிப்பை விட அதிக சுவாரசியம். ஒரு வேளை தாய்மொழி என்பதால் இருக்கலாம்.
வெகு நாட்களுக்கு பிறகு கதை தெரிந்து, நூறு ரூபாய் அனுமதிச்சீட்டுடன், தரமான படங்களுக்கே உரிய அவல நிலையான, இரண்டாம் நாளே பாதி நிரம்பிய அரங்கத்தினுள் சென்று அமர்ந்தேன்.
படத்தின் பாடல்களை ஏற்கனவே கேட்டு அதை கமல் எப்படி கதையோட்டத்துடன் இணைக்க போகிறார் என்ற கவலைப்பட்டுக்கொண்டிருக்கும்போழுதே படம் துவங்கியது. "அல்லா ஜானே", பாடலுடன் எழுத்து போடப்பட்டது. பிறகு ஹிந்தி பதிப்பை போன்றே காட்சிகள் நகர்ந்தன. ஆனால் புதுப்பொலிவுடன், கமல் மற்றும் மோகன் லாலுடன்.
என்னுடைய பாடல் பயம் படத்தின் பாதியிலேயே விலகியது. ஆங்கிலப்படங்களைப்போல் படத்திற்கென பாடல்கள் செய்து அதை படத்தில் இணைக்காத யுத்தியை கமல் பயன்படுத்தியிருந்தார்.
நசுருதீன் ஷா வை கமலும், அனுபம் கெரை மோகன் லாலும் அற்புதமாக தமிழ் பதிப்பு செய்திருந்தார்கள்.மற்ற நடிகர்களின் நடிப்பில் சிறிது செயற்கைத்தனம் இருக்கத்தான் செய்தது. ஆனால் ஹிந்தியில் இல்லாத லக்ஷ்மியின் பாத்திரம் அற்புதமான படைப்பு.
எந்த வகையிலும் வணிக ரீதியான சமரசம் செய்து கொள்ளாத கலைஞன் கமல் ஹாசன் என்பது இந்த படத்திலும் உண்மையாகி இருக்கிறது. ஏற்கனவே "வசூல் ராஜா" படத்தின் மூலம் மறுபதிப்பு செய்ய வேண்டிய முறையை நிரூபித்த கமல் இந்த படத்திலும் அப்பணியை செவ்வனே செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் ராஜாக்களுக்கும், "ஜெயம்" ரவிகளுக்கும், எல்லா தலை, தறுதலை, தளபதிகளுக்கும் "Remake" என்பதின் உண்மையான அர்த்தத்தை உணர்த்தும் படைப்பு. இனிமேலாவாது இவர்களது அணுகுமுறை மாறுமா..
அல்லா ஜானே..

6 comments:

  1. Obviously Sudharsan.. More than it..

    ReplyDelete
  2. Noteworthy film unnai pol oruvan!

    1. Amazing acting by mohanlal
    2. Solanuma -- always kamal is perfect but nazrudeen shah is better than kamal in this role

    Padathoda speciala Ponam kaur dan! - after a long time I seen angel in this film !!!!!

    ReplyDelete
  3. Much Thanks Kapil.. Am pretty much happy you are following the blog and most importantly, recording ur comments..

    ReplyDelete