Friday, 4 September 2009

பிச்சைக்கார நாடு..

தலைப்பில் எந்த மிகையும் இல்லை. சென்ற வார இறுதியில் நானும் என் பெரியம்மா மகனும் சென்னை மயிலையில் உள்ள சங்கீதா உணவகத்திற்கு சென்றிருந்தோம். ஆங்கிலத்தில் "Ironically" என்று கூறுவது போல், உணவகத்திற்கு வெளியே நிறைய பிச்சைக்காரர்கள்.

என் அண்ணன் வண்டியை எடுக்க சென்ற பொழுது, எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வந்து பிச்சை கேட்டாள். என் அண்ணன் ஐம்பது காசுகள் கொடுத்து விட்டு நகர்ந்தார். நான் வண்டியில் ஏறி அமர்த்தும், என்னிடம் இன்னொரு சிறுவன் வந்து " ஐம்பது காசு கொடுங்க" என்றான். ஏன் சரியாக ஐம்பது காசு கேட்டான் என்று தெரியவில்லை. நான் ஐம்பது காசு எடுப்பதற்குள் வண்டி கிளம்பியது. அவன் என் கையை பிடித்துக்கொண்டு விடாமல் வந்தான். உடனே " கைய எடுரா, எடுரா கைய" என்று வார்த்தைகளை மாற்றிப்போட்டு அதட்டினார் என் உறவினர். " அம்பது காசுக்கு இது பண்றானுக.." என் கூறிவிட்டு நகர்ந்தான் அவன்.


முதலில் எனக்கும் அவன் கேட்ட ஐம்பது காசை கொடுத்திருக்கலாம் என்று தோன்றினாலும், என் அண்ணன் சொன்ன விளக்கம் யோசிக்க வைத்தது.

" முதல்ல அம்பது பைசா போட்டேனே அது இவங்க அக்கா. இவனுக்கும் போட்டா அடுத்து அம்மா வரும். தினமும் இப்டி தான் பண்ணுவாங்க".

இதே போல் என் நண்பர் ஒரு விஷயம் சொன்னார். அவர் எப்பொழுது தி.நகர் சென்றாலும், அங்கு ஒரு சிறுவன் பிணம் போல் கிடப்பன், அவனருகில் ஒரு பெண் இருப்பார். முதலில் என் நண்பர் பரிதாபப்பட்டு பத்து ரூபாய் கொடுத்திருக்கிறார். அடுத்த வாரம் சென்றால் அதே சிறுவன், அதே பெண்.

இப்படி பிச்சைக்காரர்களின் தேசமாக இந்தியா ஆனா காரணமென்ன?

1. அறியாமை.
2. படிப்பறிவின்மை.

மூன்றாவது மற்றும் முழு முதல் காரணம் சோம்பேறித்தனம்.

பிச்சை எடுப்பவர்களின் சோம்பேறித்தனம் அல்ல. எடுக்க வைப்பவர்களின் சோம்பேறித்தனம். உதாரணமாக, அந்த சிறுவன் விஷயத்தில் அவன் அம்மா. இன்னும் பலரின் பின்னால் உடல் பலம்மிக்க சோம்பேறிக்கூட்டம்.

"நீ அவன் பிச்சைக்காரன் ஆயிடக்கூடாதுன்னு நெனைக்கிற..
நான் அவன் திருடனாயிரக்கூடாதுனு நெனைக்கிற.."
என்று வசனம் பேசாமல், முடிந்தால் அவர்களை பிச்சை எடுக்க வைப்பவர்களின் பிடியிலிருந்து மீட்கப்பாருங்கள். பிச்சையிட்டு அவர்களின் அவலத்தை அதிகரிக்காதீர்கள்..

1 comment:

  1. rich get richer.. poor get poorer... :D
    I agree with those reasons you mentioned.

    I also feel that Indian politics should be blamed. don't konw why i brought it here but i hate it to the core.

    I have experienced few troubles from beggars. i thought of writing those in my blog. check it out....

    ReplyDelete