முந்தய பகுதிகளின் தொடர்பு..
ஐந்து
பாலைவனச்சோலை போல் இருந்தது அந்த இடம். கல்லூரியின் மத்தியப்பகுதியில், எந்த ஒரு இடையூறும் இல்லாமல் அமைதியான ஒரு இடம். பம்ப் ஹௌஸ் என்று அழைக்கப்பட்டாலும், பம்ப் இருந்ததென்னவோ ஒரு சிறிய பூட்டிய அறையில் தான். மற்ற பகுதிகள் அனைத்தும் மாணவர்களின் சுற்றுலா தளமாக விளங்குகிறது. செகூரிடி உடன் கூடிய சுற்றுலா தளம்.
“என்னடா கிளாச விட இங்க கூட்டம் அதிகமா இருக்கு?” சரவணன் வியந்தான்.
“ஏதாவது ரிகார்ட் எழுதணும்னா, அப்சர்வேஷன் எழுதணும்னா, ஏன் அசைன்மென்ட் எழுதனும்னாலும் இங்க வந்திருவான்கலாம். அண்ணன் சொன்னாரு” கணேஷ்.
“அவங்க ரெண்டு பேரையும் பார்த்தா எதுவும் எழுத வந்த மாறி தெரியலயே..” தூரத்தில் சிலை போல் ஒருவரை ஒருவர் பார்த்து அமர்ந்திருந்த ஜோடியை காண்பித்து கேட்டான் சரவணன்.
“ஹீ ஹீ... அப்டினாலும் இங்க வந்துருவான்கலாம்..” சிரித்தான் கணேஷ்.
அந்த இடம் முழுவதும் ஆங்காங்கே, சீரிய இடைவெளிகளில் சிமிண்ட் திட்டுகள் போடப்பட்டிருந்தன. மாணவர்கள் அங்கும் இங்கும் அமர்ந்து அவர்தம் வேளைகளில் முனைப்புடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
“சரி நாம இங்க என்ன பண்றது? “ சரவணன்.
“என்ன கேள்வி இது? ஆயிரம் பண்லாம்? உன்னையெல்லாம் ராகிங் பண்ணலையா?” கணேஷ்.
“பண்ணாங்க.. பண்றாங்க.. பண்ணுவாங்க போல..” தன நிலையை நொந்து கொண்டான் சரவணன்.
“அப்டினா அசைன்மென்ட் ஏதாவது எழுத சொல்லி குடுத்திருப்பாங்களே?”
“ஆங் ஆங்.. இருக்கு.. பேசாம அத எழுதுன்றயா...”
“அது உன் இஷ்டம். நான் எழுதிக்கிட்டே ஏதாவது நல்ல பிகர் போகுதாணு பார்கப்போரேன்..”
“போன வருஷம் ஸ்கூல்ல பண்ணண்டாவது. அங்க ராஜா மாறி இருந்தேன். “
“விடு. அடுத்த வருஷம் நம்ம சீனியரு. நமக்கு எவனாவது மாட்டாமல போயிருவான்.” ராகிங்கின் அடிப்படை கோட்பாடை விவரித்தான் கணேஷ்.
அப்பொழுது பின்னாலிருந்து ஒரு மெல்லிய குரல் அவர்களை விளித்தது “எக்ஸ்க்யூஸ் மி..”.
சரவணன் திரும்பினான். அங்கே பழுப்பு நிற சட்டையும், கரு நீலத்தில் கால் சட்டையும் (சீருடை.. இல்லாட்டி இந்த கேவலமான கலர்ல யாரு டிரெஸ் எடுப்பா?) அணிந்தபடி ஒரு யுவதி நின்று கொண்டிருந்தாள்.
ஆறு
“நீங்க பர்ஸ்ட் இயர் தானே?” சீனியர் போல் கேட்டால் அப்பெண்.
“ஆ.. ஆமாம்.. நீ.. நீங்க..” வார்த்தைகள் தடுமாறின சரவணனுக்கு. (இந்த காலேஜ்ல சீனியர் பொண்ணுங்க கூட வந்து ராகிங் பண்ணும போல!)
“நானும் பர்ஸ்ட் இயர் தான். உங்கள பர்ஸ்ட் டே இனாகுரேசன் ல பார்த்த மாதிரி இருந்தது அதான் கேட்டேன். “
“சரி இங்க என்ன பண்ற?” கணேஷ்.
“கிளாஸ் வர லேட்டாயிருச்சு. அதான்...”
“மணி ஒன்போது நாப்பது தான ஆகுது. இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கே.”
“ஒன்போது நாப்பதா??? மணி பத்து பத்து. உங்க வாட்சு ஓட்டையா இருக்கு.” நக்கலாக சொன்னாள் அந்த பெண்.
முறைத்தான் கணேஷ். “எங்க வாட்செல்லாம் சரியாதான் இருக்கு. கிளாஸ் முடிஞ்சிருந்தா தான் மணி அடிச்சிருப்பைங்கல்ல.”
“அதான் இன்னைக்கு கரண்ட் இல்லையே. பேப்பர் லாம் படிக்க மாட்டிங்களா?” மறுபடியும் நக்கல்.
“அப்பா பேசிக் எலக்ட்ரிகலும் அவுட்டா? “ சரவணன் அதிர்ந்தான்.
“சரி விடு மச்சி.. ஒரு கிளாஸ் நால ஒன்னும் குடி மூழ்கி போயிராது.”
“இப்டி தாண்டா போன கிளாஸ் கும் சொன்ன..”
“சரி இபா போன மட்டும் உள்ள விட்டுடுவான்களா?”
“ட்ரை பண்ணி பாப்போம்.” நம்பிக்கையாய் சொன்னான் சரவணன்.
“யாரு உங்களுக்கு பேசிக் எலெக்ட்ரிகல்?” மறுபடியும் யுவதி.
“ஜெயந்தி மேம். ஏன்?” சரவணன்.
“அவங்க பைவ் மினிட்ஸ் லேட்டா போனாலும் உள்ள விட மாட்டங்கலாம்.”
“எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கே நீ என்ன ப்ரொபசர் கதிரேசன் பொண்ணா?”
“அவர் இன்னும் ப்ரொபசர் ஆகல. இன்னும் லெக்சரர் தான். நான் பிரின்சிபால் அபய் குமார் பொண்ணு. கிருத்திகா.”
“பிரின்சிபால் பொண்ணா.. நீயே கட்டடிக்குற?”
“நானா கட்டடிச்ச்சேன். போனா விட மாற்றாங்க. நான் என்ன பண்றது.”
அதுவும் சரிதான் என நினைத்து கொண்டான் சரவணன்.
“ ஒகே. எனக்கு பசிக்குது நான் கேண்டீன் போறேன். யாராச்சும் வரீங்களா?” கூலாக கேட்டால் கிருத்திகா.
“தலை எழுத்து. இங்க இருக்கறதுக்கு அங்கயே போவோம். வாடா.. “ கணேஷையும் அழைத்தான் சரவணன்.
மூவரும் கிளம்ப எத்தனித்த பொழுது எதிரில் அபய் குமார்.
nice moving..
ReplyDeleteThanks Sudharshan.. Actually am unable to decide the flow :)
ReplyDeleteWho is Kirthika? Is she real or reel?
ReplyDeleteDeepanku vantha athe ques than enakum :P
ReplyDeleteanyway hats off balaji... moving nicely :)
thambi. eppo pa micham elutha pora.
ReplyDeleteAm not having net connection ra.. Trying hard..
ReplyDeleteconnection vandhuduchu pola ? ezhudhu machi ...
ReplyDelete