Saturday, 22 May 2010

தமிழ்..

தமிழ்.. - சமீபத்தில் ரசித்த சில தமிழ் படைப்புகள்..

கவிதை (விகடனில் பிரசுரமானது):

பெண்கள் நகை அணிந்திருந்தால்
ஜன்னல் ஓரம் உட்காராதீர்கள்

தூங்குவதற்கு முன்னால்
ஜன்னலை இழுத்து மூடிவிடுங்கள்.

செல்போன் லேப்டாப் போன்ற
விலை உயர்ந்த பொருட்களை
பெட்டியில் பூட்டிவையுங்கள்.

பூட்டப்பட்ட பெட்டியை
இருக்கையோடு
இணைத்துவையுங்கள்.

அறிமுகமற்றவர் தரும்
எந்த உணவுப்பண்டங்களையும்
உண்ணாதீர்கள்...

ரயில் நிலைய ஒலிபெருக்கியில்
அறிவித்துகொண்டிருந்தார்கள்.

எல்லாவற்றையும் கவனமாகக்
கேட்டுக்கொண்டான் திருடன்!

ராவணன் பாடல் வரிகள்:


சீயான் காட்டதோண்டி பார்த்த செம்மண் ஊத்து அர்த்தந்தான்...

ஊரான் வீட்டு சட்டத்துக்கு
ஊரு நாடு மசியாது..

மேகம் வந்து சத்தம் போட்டா
ஆகாயம் தான் கேக்காதே..

பாம்பக்கூட பழகி
பசும்பால ஊத்தும் சாதி..
தப்பு தண்டா செய்ஞ்சா
அட அப்ப தெரியும் சேதி..

செத்த கெழவன் எழுதி வெச்சான் ஒத்த சொத்து வீரமடா..

வத்தி போன உசுரோட வாழ்வானே சம்சாரி..
ஒரு சப்பாத்தி கள்ளி வாழ வேணாமே மும்மாரி..

No comments:

Post a Comment