Tuesday, 29 June 2010

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..

10 comments:
 செம்மொழி மாநாடு கோயம்பத்தூரில் நடந்தேறியுள்ளது. அதற்கும் இந்த பதிப்பிற்கும் சம்பந்தம் உள்ளது. ஆனால் மாநாட்டை பற்றியது அல்ல இந்த வலைப்பூ. தமிழ் மட்டும் செம்மொழியாகி தமிழர்கள் இழந்த மற்றவற்றை பற்றியது. எப்பொழுது ரயில் பயணம் செய்தாலும் ஏற்படும் அனுபவம் வித்தியாசமானதாக உள்ளது. சென்ற முறை ஆங்கிலம். இம்முறை ஹிந்தி. என்னுடைய இடம் WL18 இல் இருந்து S3,65 என்று ஆகியிருந்தது. மதுரையிலிருந்து இரவு 23:45 மணிக்கு சம்பக்ரந்தி விரைவு வண்டி. 


ஏறி அமர்ந்த ஐந்து நிமடங்களில் நான் எதிர்பார்த்தது போலவே 65 மட்டும் அல்லாமல் 61,62,64,66,67 ஆகியவற்றை துரதிர்ஷ்டவசமாக பதிவு செய்திருந்தவர்கள் என்னிடம் தயங்கி தயங்கி கேட்டனர். 
"Bhaiya ஆப்கா சீட் நம்பர் கயா ஹேய் ?". எனக்கு அவர் கேட்டது புரிந்தாலும் ஹிந்தியில் பதில் சொல்ல இயலவில்லை. "Sorry I don't know hindi. Better you can speak in English" என்றேன். அவர்களுக்குள் தெலுங்கில் பேசிக்கொண்டு என்னிடம் ஆங்கிலத்தில் 53 க்கு செல்ல முடியுமா என்றனர்.


53 இலும் கிட்ட தட்ட மற்ற அனைத்து அமர்வுகளையும் பதிவ செய்த முசல்மான்கள். என்னை மேலே படுத்து கொள்ளுமாறு பணித்தனர். பணிந்தேன். அந்த சமயத்தில் ஒரு வாடா இந்தியர் முசல்மான்களிடம் அதே 53 65 கதையை ஹிந்தியில் கேட்டார். முசல்மான்களும் ஹிந்தியில் சரளமாக பதில் அழித்தனர். அந்த உரையாடலிலும் எனக்கு புரிந்த வார்த்தைகள் உண்டெனினும் என்னால் பதில் அளிக்க முடியாது. 


தமிழர்களாகிய நாம் வெட்கி தலை குனிய வேண்டிய விஷயம். தமிழைத்தவிர வேறு எந்த மொழியும் கல்லாதது. ஆந்த்ராவிலும், கர்நாடகத்திலும், கேரளாவிலும் அனைவரும் ஹிந்தி பேச முடியும் பொழுது, நம் செம்மொழி மட்டும் வளர்ந்து கருந்தமிழர்கள் இன்னும் மூடர்களாக ஊனர்களாக இருக்கும் பொழுது தோன்றும் மொழி 


"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" - அது மொழிகளுக்கும் பொருந்தும்..

Saturday, 19 June 2010

ராவணன்..

5 comments:
ராவணன்.. - மணிரத்தினத்தின் சமீபத்திய வெளியீடு. இப்பொழுது தான் திருவான்மியூர் தியகராஜாவில் ஈவினிங் ஷோ முடித்துவிட்டு வருகிறேன். ரோஜாவை போன்ற கதைக்களம். மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியீடு. விக்ரம், அபிஷேக், ஐஸ்வர்யா போன்ற நட்சத்திர குவியல். இவ்வளவு இருந்து படம், தெலுங்கில் என் நண்பர்கள் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு சொற்றொடர் போல் "அன்த சீன லேது லே..".


விக்ரமின் தங்கையின் வாழ்கையை சீரழித்து, சீர்குலைத்த போலீஸ் அதிகாரியின் மனைவியை கடத்தி கொல்ல நினைத்து, மயங்கி, விடுவித்து, செத்துமடிவதே கதைச்சுருக்கம். 


அனுமன் போல் காத்திக் தூது செல்வதிலும், திரும்பி வந்த ஐஸ்வர்யாவை  ப்ரித்வி சந்தேகிப்பதிலும் ராமாயணம். கதையை தள்ளி வைத்து விட்டு ஒரு படைப்பாக பார்த்தல், பல விஷயங்களை பாராட்ட தான் வேண்டும். இந்தியாவில் இப்படி இடங்கள் உள்ளனவா என்று அதிசயிக்கும் வகையில் இட தேர்வு. ஊசி கூட நுழையாத இடத்திற்குள்ளும் நுழைந்த கேமரா. மலை வாழினரின் உடை, நடை பாவனை. பல காட்சிகள் எடுக்கப்பட்ட இடம் மற்றும் விதம். இவை அனைத்துமே தமிழ் சினிமாவிற்கு புதிது. 


இருந்தும் கதாபத்திர வடிவில் உள்ள குழப்பம் நம்மையும் கொல்கிறது. ரோஜாவில் இருந்த தெளிவு இல்லை. சில இடங்களில் "இருவர்" பின்னணி இசை பல்லை இளிக்கிறது.  


சென்ற வாரம் பார்த்த சிங்கத்தை விட இராவணன் மேல் என்றாலும், "ஏதோ மிஸ்ஸிங்" என சொல்ல, நினைக்க வைக்கிறது..

Saturday, 12 June 2010

Dog Day Afternoon..

1 comment:
Dog Day Afternoon.. - This movie, I downloaded long time back and got deleted. Some days back I remembered again and downloaded it again. And it's worth two downloads!

First of all we got Al Pacino here. And one more added advantage, its a Sidney Lumet (Directotr of "12 Angry Men")  picture. So yesterday night I started seeing and couldn't sleep without finishing it.

The movie is about a bank robbery in simple words. But it explains lotsa virtues in that small compact story. An unplanned attempt to rob a bank which turns out to be media festival and a lot more. Sal, Sonny and Steve plan to rob a bank on a hot sun afternoon. At the last moment Stevie gets pissed off and drops the plan. When Sonny burns the register papers of the bank, smoke emerges which in turn brings cops into picture. Consequently media starts concentrating on the incident which brings in FBI. Whether Sonny got what he demanded forms the rest of the story.

The story is a bank robbery but it explains the situation under which a man robs a bank. The pressure a man experiences when you do such a non sense. The way people react and entertain such idiotic acts when you are not on the gun point. This movie portraits lots of characters and emotions which is pictured in a more realistic manner. In total its a very good entertainer as well as a no commercial compromise film.

To end with, this is inspired from a real story... (I gotta doubt.. Where these hollywood directors get these many real stories when ours dint get even one!)