பயணம்.. -
ஒன் லைன் - பயணம் பணயம் ஆனால் என்னாகும் - உப்பிட்டவரை உள்ளளவுக்கு மேல் நினைக்கும் கதாநாயகன், வில்லனை பழிவாங்குவதே தலையாய கடமையாய் செயல்படும் கதாநாயகன் போன்ற ஒன் லைன்களுக்கு மத்தியில் பழக்கப்படதானாலும் வித்தியாசமான ஒன் லைனை எடுத்ததற்கு - 6/10.
திரைக்கதை - ஒன் லைனை பிடித்து விட்டு திரையில் கோட்டை விட்ட பேராண்மை போல் இல்லாமல், திரைக்கதையிலும் ஓரளவுக்கு முனைப்புடன் செயல்பட்டு, சில இடங்களில் நகைச்சுவையாய் தடுமாறி பின் ஒரு வழியாக தடத்தில் பயணிக்க வைத்ததற்கு - 5/10.
நடிப்பு - நடிப்பில் கொஞ்சம் கோட்டை தான். இயல்பாக வெகு சிலரே. சந்திரகாந்தின் ரசிகர், கடைசியாக சாகும் தீவிரவாதி, "பெண்ணை எத்துனை நாள் வீட்டில் வைத்திருக்க வேண்டும்" என தெரியாத யூசுப் கான், நாகர்ஜுனுடன் வரும் என்.எஸ்.ஜி கமாண்டர். சிறப்பாக செய்திருக்க வேண்டிய பலர் (பிரகாஷ் ராஜ், தலைவாசல் விஜய்) , சொல்ல கூடாது, பார்த்தல் சிரிப்பு தான் வருகிறது. அதனால் - 5/10.
ஒளிப்பதிவு - இயற்கையை காட்டி பேர் வாங்க பெரிய ஸ்கோப் இல்லாவிட்டாலும், படத்திற்கு தேவையானதை செவ்வனே காண்பித்திருக்கும் ஒளிப்பதிவிற்கு - 6/10.
பாடல்கள் - படத்திற்கு தேவை இல்லாததால், தவிர்த்திருந்ததால் - 8/10.
பின்னணி இசை - மிகவும் சொதப்பிய களம் இது. கண்டிப்பாக ஜீரணிக்க முடியவில்லை - 3/10.
வசனம் - பல இடங்களில் இயல்பான நகைச்சுவை.
"வாழத்தாரையும் வயசுப்பொன்னையும் வீட்ல வைக்க கூடாதுன்னு டயலாக். சத்தியாம எத்தன நாள்னு கூட எனக்கு தெரியாது சார்...."
"யாருன்னா யூசுப் கான் ?" "ஹ்ம்ம் பாகிஸ்தான் பௌலர்"
என பல இடங்களில் நச்சு தெறிக்கும் வசனங்கள். "பைபிள் படிக்கணும். முடியாதுனா உங்க குரான் குடுங்க எல்லாம் ஒன்னு தான்". இவ்வளவு இயல்பாக எழுதி விட்டு, கடைசி காட்சியில் "ரொம்ப குளோஸ் எஸ்கேப்" "உங்கள்ட்ட பி.ம பேசணும் நு சொல்றாரு" என காமடி செய்திருப்பது கொஞ்சம் நெருடல். எனினும் - 8/10.
நடிகர்கள் தேர்வு - வேறு வழியில்லாமல் பித்தது போல் இருந்தது பல நடிகர்களின் தேர்வு. குறிப்பாக தலைவாசல் விஜய். மன்னிக்கவும் - 4/10.
இயக்கம் - இவ்வளவு பெரிய விமானத்தை ஓட்டி, திகிலூட்டி, ஒரு உயிரை பலி குடுத்து, கடைசியில் சுபம் போட்டிருப்பதால் - 6/10.
ஒட்டு மொத்த படமாக - 6/10.
Cliche - ஏதோ கர்ணன் (படம் அல்ல இயக்குனர் பெயர்) படம் 'ஜம்பு' போல் கதாப்பாத்திரங்கள், திருப்பதியில் வரும் போகும் அனைவரும் தமிழ் அட்சர சுத்தமாக பேசுவது, போலீஸ் அல்ல என்பதை தோள்பட்டை நட்சத்திரத்தை வைத்து கண்டுபிடிப்பது, கடைசி காட்சியில் இந்தியன் தாத்தா போல் லாவகமாக தப்பிப்பது என பல. அதனால் - -12.
மொத்தமாக.. அதான் தலைப்புலயே போட்டனே..