யுத்தம் செய்.. - இன்று தான் Facebook இல் "பிறர் வாடச் செய்கை பல செய்து - நரை கூடிக் கிழப் பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - இவ்வேடிக்கை மனிதர்கள் போல் - நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" என்று எழுதினேன். அந்த கூற்றை உருவகப்படுத்துவது போல் அமைந்தது "யுத்தம் செய்" திரைப்படம். தமிழ் சினிமாவிற்கு ஒரு புதுவித Thriller ஐ அறிமுகப்படுத்தியதற்கு மிஷ்கினுக்கு ஒரு ஷொட்டு.
தனித்தனியாக வெட்டப்பட்ட கைகள் பெட்டிகளில் கிடைக்கின்றன. முதல் காட்சியில் இரண்டு. போகப்போக ஒன்றொன்றாக. யார் வெட்டுகிறார்கள், எதற்காக என்பது மட்டும் கதை அல்ல நீங்கள் நினைப்பது போல். இதற்கு மேல் கதையை சொன்னால் மிஷ்கின் வருத்தப்படுவார்.
ஆரம்பம் முதல் முடிவு வரை கதையை தான் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் இருந்து, கதாப்பாத்திரங்கள் சொன்னபடி செய்ய வைப்பது வரை வெற்றி பெறுகிறார் மிஷ்கின். இவ்வளவு தொழில்நுட்ப விஷயங்களை எவ்வாறு பிடித்தார் என்பது ஆச்சரியப்படுத்துகிறது.
"அன்த கண்ணோட இமைகள் வெட்டப்பட்டிருக்கு. அது இந்த போலீஸ் ஸ்டேஷன் ல எதையோ பாத்துட்டே இருக்கு".
"இவ்வளவு சின்ன அறிவோட நீங்களே இவ்ளோ பண்ணும்போது எங்களுக்கு இருக்ற அறிவுக்கு நாங்க எவ்ளோ பண்ணனும்".
"ஓடி ஓடி களச்சுட்டோம். போக எடம் இல்ல. இனி நான் தொரத்துறேன். நீ ஊடு."
என்று ஆங்காங்கே பளிச்சிடும் சுருக் வசனங்கள் கை தட்டல் பெறுகின்றன.
வழக்கம் போல "வாள மீனுக்கு" பாணியில் ஒரு பாடல். மிஷ்கின் பட ஹீரோ என்றால் குனிந்த தலை பல நேரங்களில் நிமிர மாட்டேன் என்கிறது. இடைவேளை நேரத்தில் தேவை இல்லாமல் ஒரு சண்டைக்காட்சி. கடைசி காட்சிகளில் சேரன் கதவை திறக்கும் போது பிளாஸ்டிக் டப்பா உருண்டது போல் வரும் பின்னணி இசைக்கு அரங்கமே சிரிப்பதை தவிர்க்கமுடியவில்லை.
சிலபல cliche க்கள் இருந்தாலும், ஒரு முழுமையான Emotional Thriller என்ற வகையை தமிழுக்கு அறிமுகப்படுத்தி யுத்தத்தில் வென்றிருக்கிறார் மிஷ்கின்.. :)

epo da movie paatha? mishkin proved again huh? have to watch it then...
ReplyDeleteNethu nite.. Parthutu vantha udana review than.. :)
ReplyDelete