இடைத்தரகம்.. - இடைத்தரகம், ஆங்கிலத்தில் புரோக்கரேஜ். எனக்கு தெரிந்து நம்மில் பலர் உபயோகிக்கத்தயங்காத ஊழல் இது. வீடு பிடிப்பது, நிலம் பதிவது, ஓட்டுனர் உரிமம் வாங்குவது, திருமணம் பதிவு செய்வது (குறிப்பாக காதல் திருமணம்), எல்லாவற்றிற்கும் காரணம் சோம்பேறித்தனம், அறியாமை மற்றும் நம் அரசின் கடினமான, குழப்பமான ஆனால் சரியான வழிமுறைகள். சமீபத்தில் நிலம் பதிவு செய்ய பதிவு அலுவலகம் சென்றிருந்தேன். அப்பாவுடன். எனக்கு நிலத்தை விற்பவர் ஒருவர், வாங்கி வீட்டை கட்டி தருபவர் ஒருவர், பதிவு பத்திரம் தயார் செய்தவர் ஒருவர்.
பத்திரத்தில் இங்க ஒரு கையெழுத்து, அப்றோம் இங்க ஒன்னு, என வடிவேலு போல் கையெழுத்து வாங்கினர். பதினைந்து நிமிடங்களில் பதிவரை பார்த்து குசலம் விசாரித்து விட்டு, கட்டை விரலை அழுத்தி விட்டு, வீட்டு பத்திரத்தை வங்கிக்கடனுக்கு வைத்து விட்டு வீடு வந்து சேர்ந்தேன்.
இதே நானும், விற்பவரும் அங்கே சென்று வேலையை ஆரம்பித்து இருந்தால் லாஸ் ஆப் பேயில் தான் பதிவு நடந்திருக்கும். காரணம் நமக்கு அதில் பழக்கம் இல்லாமை. அதற்காகவே இருப்பவர்கள், நன்கு தெரிந்தவர்கள் செய்தால், எங்கு என்ன பதிவும் எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என அனைத்தும் தெரியும்.
என் ஓட்டுனர் உரிமத்துக்கும் கையெழுத்தும், திருமங்கலம் ரோட்டில் ஓட்டிய கால் கிலோமீட்டர் பயணமும் தான் நானாக செய்தவை. இடைத்தரகம் ஒருவகையில் சௌகரியமாக இருந்தாலும், போலிகளினால் பயங்கர விளைவை உருவாக்கக்கூடியவை.
இனிமேல் இடைத்தரகம் இருந்தாலும் நானும் அதன் வழிமுறைகளை அறிந்து கொண்டு செய்ய வேண்டும் என நினைத்து கொண்டிருக்கிறேன். பாப்போம்..
No comments:
Post a Comment