வானம்.. - கவனத்தை ஈர்க்கிறது.. சிம்பு இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். பரத் முதலில் அற்புதமாக நடிப்பது போல் இருந்து கடைசியில் புஸ் ஆகிறார். அனுஷ்கா இடஞ்சுட்டி பொருள் விளக்குகிறார், சில காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார். பிரகாஷ் ராஜ் சில காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார், சில சமயம், அத நான் சொல்ல கூடாது. தியேட்டரில் வரும் எல்லா காட்சிகளிலும் கை தட்டல் பெரும் ஒரே ஆசாமி சந்தானம் தான். "பாஸ் என்கிற பாஸ்கரன்" க்கு பிறகு நல்ல நகைச்சுவை. சிம்புவின் தனி ஆவர்த்தனையை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். தனியாக குறிப்பிடப்பட வேண்டியவர் சரண்யா. அவர் சோகமாக இருக்கும் காட்சிகளில் என்னால் அசட்டை செய்ய முடியவில்லை. அவருடன் வரும் பெரியவரை யாரவது துன்புறுத்தினால் "விடுங்கடா வி.ம களா" என கத்த தோன்றுகிறது. சரண்யாவிற்கு அறுவை சிகச்சை நடக்கும் இடத்தை கூட "Vascular Surgery ward" என இனம் பிரித்ததற்கு இயக்குனர் கிருஷ்க்கு ஒரு சொட்டு. இதை தவிர பரத் கூட்டணி ராஜஸ்தான் வழியாக சென்னை வருவதும், சிம்பு இறந்தவுடன் (கிளைமாக்ஸ் சொன்னதிற்கு மன்னிக்கவும்) "கேபிள் ராஜா வாழ்க" என கோஷமிடுவதும், கடைசியில் வரும் சில காட்சிகளும் உட்டாலக்கடி Cliche க்கள். அனுஷ்கா வரும் பல காட்சிகளை ரீமேக் செய்ய பணம் இல்லையோ என்னமோ, வாய்கள் தெலுங்கும், சத்தம் தமிழிலும் வருகிறது. Malena, Babel வகையில் ஒரு படம் தர முயற்சித்திருக்கிறார். வானம் வானம் தொடவில்லை, அனால் பாதளம் செல்ல வில்லை. திரிசங்கு சொர்க்கம்.
nice review da... especially the last line :) oru thadava parkalam :)
ReplyDeleteThanks Sudharshan..
ReplyDelete