ஆரண்ய காண்டம்.. - பல ரௌடிகள், ஒரு சப்பை, ஒரு அப்பாவியும் அவரை அப்பாவாக கொண்ட பையனும், ஒரு வப்பாட்டியும் ஒரே நாளில் தங்கள் வாழ்நாளின் முக்கிய திருப்பத்தை சந்திக்கிறார்கள். இதை ஒரு நாவல் போல் லாவகமாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.
முதல் படமாக இதை தெரிவு செய்ததற்கும், இப்படத்தை தயாரித்த சரணுக்கும் பாராட்டுக்கள். பல விதமான கதாப்பத்திரங்களை உலவ விட்டு, அவர்களை ஒரு சிறு புள்ளியில் இணைத்து, அதன் மூலம் ஏற்படும் திருப்பத்தை மிகையில்லாமல், இயல்பு மாறாமல், சரியான முறையில் கொடுத்திருக்கிறார்கள். பல இடங்களில் பளிச்சிடும் வசனங்கள். படத்தில் புரியாத ஒரே விஷயம் எதற்காக ஜாக்கி சேராப் நிர்வாணமாக ஒரு காட்சியில் உலா வருகிறார் என்பது தான்.
படத்தை படத்தில் வரும் மூன்று வசனங்களில் விளக்கி விடலாம்.
"அப்பா நா ரொம்ப புடிக்குமா?"
"அப்டியில்ல... ஆனா அவரு எங்கப்பா.."
"என்னைய பொறுத்த வரைக்கும் சப்பை கூட ஆம்பளதான்.."
"எல்லா ஆம்ப்ளைங்களுமே சப்ப தான்.."
"What's great about being a woman?.. Because it's a men's world"
இதுவரை தமிழில் இதுபோன்றதொரு படத்தை பார்த்ததில்லை என சொல்லமுடியவிடினும், இப்படியும் ஒரு படம் தமிழில் வருகிறது என பெருமிதம் கொள்ளலாம்.