ஏறக்குறைய நான்கு மாதங்களாக இவ்வலைப்பூ முடங்கியே கிடந்தது. சுருட்டி உள்ளே வைக்காமல் பாதுகாத்த பிளாக்கருக்கு நன்றி. நான்கு மதங்களில் கற்றுக்கொண்ட விஷயங்கள் நிறைய. படம் எடுப்பது எப்படி என்பதை விட, எப்படி எடுக்கக்கூடாது என்பது நிதர்சனமாக தெரிய வந்தது. சினிமா என்பது ஒருவர் மட்டும் செய்துவிடக்கூடிய சாகசம் அல்ல என்பது புரிந்தது. 'திரைக்கதை எழுதுவது எப்படி?', 'Foundations of screenwriting - Syd Field' இரண்டு புத்தகங்களும் மிக மோசமான படைப்பை கொடுத்துவிடாமல் காப்பாற்றின. சினிமாவிற்கு தயார்படுத்திக்கொள்ளுதல் மற்றும் ஒத்திகை எவ்வளவு அவசியமானவை என்பது புரிந்தது. இவை எல்லாவற்றையும் விட, படத்தை வெட்டி, ஒட்டி இசை சேர்க்க எவ்வளவு பொறுமை தேவை என்பது தெள்ளத்தெளிவாக புரிந்தது. ஆதரவளித்த நபர்கள், நலம்விரும்பிகள் அனைவருக்கும் நன்றி. 'ஒவ்வொரு Friendum தேவையா மச்சான்' என படம் எடுத்தாலும் 'ஒவ்வொரு friendum தேவை மச்சான்' என புரிய வைத்தது இப்படம்.
No comments:
Post a Comment