Tuesday, 29 December 2009

Mechnocrats '08 - 4

7 comments:
முந்தய பகுதிகளின் தொடர்பு..

ஐந்து

பாலைவனச்சோலை போல் இருந்தது அந்த இடம். கல்லூரியின் மத்தியப்பகுதியில், எந்த ஒரு இடையூறும் இல்லாமல் அமைதியான ஒரு இடம். பம்ப் ஹௌஸ் என்று அழைக்கப்பட்டாலும், பம்ப் இருந்ததென்னவோ ஒரு சிறிய பூட்டிய அறையில் தான். மற்ற பகுதிகள் அனைத்தும் மாணவர்களின் சுற்றுலா தளமாக விளங்குகிறது. செகூரிடி உடன் கூடிய சுற்றுலா தளம்.

“என்னடா கிளாச விட இங்க கூட்டம் அதிகமா இருக்கு?” சரவணன் வியந்தான்.

“ஏதாவது ரிகார்ட் எழுதணும்னா, அப்சர்வேஷன் எழுதணும்னா, ஏன் அசைன்மென்ட் எழுதனும்னாலும் இங்க வந்திருவான்கலாம். அண்ணன் சொன்னாரு” கணேஷ்.

“அவங்க ரெண்டு பேரையும் பார்த்தா எதுவும் எழுத வந்த மாறி தெரியலயே..” தூரத்தில் சிலை போல் ஒருவரை ஒருவர் பார்த்து அமர்ந்திருந்த ஜோடியை காண்பித்து கேட்டான் சரவணன்.

“ஹீ ஹீ... அப்டினாலும் இங்க வந்துருவான்கலாம்..” சிரித்தான் கணேஷ்.

அந்த இடம் முழுவதும் ஆங்காங்கே, சீரிய இடைவெளிகளில் சிமிண்ட் திட்டுகள் போடப்பட்டிருந்தன. மாணவர்கள் அங்கும் இங்கும் அமர்ந்து அவர்தம் வேளைகளில் முனைப்புடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

“சரி நாம இங்க என்ன பண்றது? “ சரவணன்.

“என்ன கேள்வி இது? ஆயிரம் பண்லாம்? உன்னையெல்லாம் ராகிங் பண்ணலையா?” கணேஷ்.

“பண்ணாங்க.. பண்றாங்க.. பண்ணுவாங்க போல..” தன நிலையை நொந்து கொண்டான் சரவணன்.

“அப்டினா அசைன்மென்ட் ஏதாவது எழுத சொல்லி குடுத்திருப்பாங்களே?”

“ஆங் ஆங்.. இருக்கு.. பேசாம அத எழுதுன்றயா...”

“அது உன் இஷ்டம். நான் எழுதிக்கிட்டே ஏதாவது நல்ல பிகர் போகுதாணு பார்கப்போரேன்..”

“போன வருஷம் ஸ்கூல்ல பண்ணண்டாவது. அங்க ராஜா மாறி இருந்தேன். “

“விடு. அடுத்த வருஷம் நம்ம சீனியரு. நமக்கு எவனாவது மாட்டாமல போயிருவான்.” ராகிங்கின் அடிப்படை கோட்பாடை விவரித்தான் கணேஷ்.

அப்பொழுது பின்னாலிருந்து ஒரு மெல்லிய குரல் அவர்களை விளித்தது “எக்ஸ்க்யூஸ் மி..”.

சரவணன் திரும்பினான். அங்கே பழுப்பு நிற சட்டையும், கரு நீலத்தில் கால் சட்டையும் (சீருடை.. இல்லாட்டி இந்த கேவலமான கலர்ல யாரு டிரெஸ் எடுப்பா?) அணிந்தபடி ஒரு யுவதி நின்று கொண்டிருந்தாள்.



ஆறு

“நீங்க பர்ஸ்ட் இயர் தானே?” சீனியர் போல் கேட்டால் அப்பெண்.

“ஆ.. ஆமாம்.. நீ.. நீங்க..” வார்த்தைகள் தடுமாறின சரவணனுக்கு. (இந்த காலேஜ்ல சீனியர் பொண்ணுங்க கூட வந்து ராகிங் பண்ணும போல!)

“நானும் பர்ஸ்ட் இயர் தான். உங்கள பர்ஸ்ட் டே இனாகுரேசன் ல பார்த்த மாதிரி இருந்தது அதான் கேட்டேன். “

“சரி இங்க என்ன பண்ற?” கணேஷ்.

“கிளாஸ் வர லேட்டாயிருச்சு. அதான்...”

“மணி ஒன்போது நாப்பது தான ஆகுது. இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கே.”

“ஒன்போது நாப்பதா??? மணி பத்து பத்து. உங்க வாட்சு ஓட்டையா இருக்கு.” நக்கலாக சொன்னாள் அந்த பெண்.

முறைத்தான் கணேஷ். “எங்க வாட்செல்லாம் சரியாதான் இருக்கு. கிளாஸ் முடிஞ்சிருந்தா தான் மணி அடிச்சிருப்பைங்கல்ல.”

“அதான் இன்னைக்கு கரண்ட் இல்லையே. பேப்பர் லாம் படிக்க மாட்டிங்களா?” மறுபடியும் நக்கல்.

“அப்பா பேசிக் எலக்ட்ரிகலும் அவுட்டா? “ சரவணன் அதிர்ந்தான்.

“சரி விடு மச்சி.. ஒரு கிளாஸ் நால ஒன்னும் குடி மூழ்கி போயிராது.”

“இப்டி தாண்டா போன கிளாஸ் கும் சொன்ன..”

“சரி இபா போன மட்டும் உள்ள விட்டுடுவான்களா?”

“ட்ரை பண்ணி பாப்போம்.” நம்பிக்கையாய் சொன்னான் சரவணன்.

“யாரு உங்களுக்கு பேசிக் எலெக்ட்ரிகல்?” மறுபடியும் யுவதி.

“ஜெயந்தி மேம். ஏன்?” சரவணன்.

“அவங்க பைவ் மினிட்ஸ் லேட்டா போனாலும் உள்ள விட மாட்டங்கலாம்.”

“எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கே நீ என்ன ப்ரொபசர் கதிரேசன் பொண்ணா?”

“அவர் இன்னும் ப்ரொபசர் ஆகல. இன்னும் லெக்சரர் தான். நான் பிரின்சிபால் அபய் குமார் பொண்ணு. கிருத்திகா.”

“பிரின்சிபால் பொண்ணா.. நீயே கட்டடிக்குற?”

“நானா கட்டடிச்ச்சேன். போனா விட மாற்றாங்க. நான் என்ன பண்றது.”

அதுவும் சரிதான் என நினைத்து கொண்டான் சரவணன்.

“ ஒகே. எனக்கு பசிக்குது நான் கேண்டீன் போறேன். யாராச்சும் வரீங்களா?” கூலாக கேட்டால் கிருத்திகா.

“தலை எழுத்து. இங்க இருக்கறதுக்கு அங்கயே போவோம். வாடா.. “ கணேஷையும் அழைத்தான் சரவணன்.

மூவரும் கிளம்ப எத்தனித்த பொழுது எதிரில் அபய் குமார்.

Monday, 28 December 2009

Avatar..

2 comments:

Avatar.. - During the christmas weekend, I have decided to see a new movie.. that too in theatre.. I called my friend, we discussed on all possible choices. He rejected "3 Idiots" since its hindi (avan thi.ka lam illa.. Hindi puriyathu pavam..). So we were stuck with avatar and decided to go on Sat morning. As usual we got up later and pushed the plan to afternoon. After lunch we started and inquired in the Tea shop near the bus stop "When's the next bus?". It seemed to take more than an hour within which movie would have crossed 20 mins. So we again pushed to evening.

At last, in the evening, we boarded a bus by 4:45, reached the theatre by 5:30 because of Driver's supernatural driving. There was a big blow waiting. Ticket is One Hundred bucks.. We thought a second to go back. But the only reason we came all the way is to see this movie in 3D. That's happening only in that theatre in Maduari.  So we apologised the sinners and bought the ticket and also the black glass while entering.

Movie started by 6. Everybody started seeing through the black glass. The persons started appearing realistic.
My back seat was completely excited like kids ("macha sooper da.. Ellamae pakkathula theriyuidhu ra" ).

The plot of the movie is as simple as it. A vice versa of normal alien movies.

Normal Alien movies - Aliens are bad. Coming to destroy human kind. Humans protect themselves and hit back.

Avatar - Humans are bad. Going in search of a rare mineral in a land Pandora. Those aliens protect themselves with the help of a human turned avatar.

What's so exiciting about the movie is its 3 dimensional visual treat. Simply superb and mind blowing. Gives you a completely different experience.

What's disappointing is the weak plot. At last, I am confused whether the motive is to get the minerals or to demolish Jake ( the human turned avatar who leads the Aliens ).

However even there are flaws in the plot, to appreciate a decent effort and to have a new digital experience, give this a shot. Never ever see this in 2D screens or DVDs. Go see in a 3D screen for the real experience..

Monday, 21 December 2009

சி(ரி)றப்பு தரிசனம்..

No comments:
சி(ரி)றப்பு தரிசனம்.. -  சென்ற வியாழக்கிழமை (Dec 17, 2009) என் பெரியப்பாவினுடைய அறுபதாவது பிறந்த நாள். சஷ்டியப்த பூர்த்தியாக கோயம்பத்தூரில் கொண்டாடினோம். வார இறுதியாக வந்ததால் வெள்ளிக்கிழமையும் விடுமுறை எடுத்துக்கொண்டு அங்கயே தங்கி விட்டேன். அந்த சனிக்கிழமை கோயம்பத்தூர் கோனியம்மன் கோவிலுக்கு செல்லலாம் என முடிவு செய்து மாலை ஆறு மணியளவில் சென்றடைந்தோம். அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது சில முன்னேற்பாடுகள் இருப்பது.

கோவிலின் தர்மாதிகாரி என் பெரியப்பாவின் நண்பரின் நண்பர். அதனால் எங்களுக்கு வரவேற்பு பலமாக இருந்தது. சிறுது நேரத்தில் அவரே எங்களை அழைத்துக்கொண்டு சன்னதி சென்றார். வழக்கமாக மக்கள் தரிசிக்க இருக்கும் வரிசையிலயே மிக முன்னால், சன்னதிக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தோம்.

சிறிது நேரத்தில் நடை திறந்தவுடன் எங்களை அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு மிக அருகில் சென்று நிற்க அனுமதித்தனர். அதுவே ஆங்கிலத்தில் சொல்லுவது போல் embarassing ஆக இருந்தது. தீவாரதனை சமயத்தில் எங்கள் எழுவரின் ஆக்கிரமிப்பால் அம்மன் தரிசனம் கிடைக்காத பக்தர் ஒருவர் "தள்ளி நில்லுங்க.. மறைக்குது" என்று கத்தி விட்டார்.  அம்மனுக்கு ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்க ஆடை சூட்டியதை தரிசிக்க முடியாத ஏக்கம் அவருக்கு.

இது போன்று பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் மற்றவர்களை அழுத்தி சிலரை முக்கியப்படுத்துவது சரியா? இது இன்று நேற்று நடப்பதாக தெரியவில்லை. அதே சமயம் இது போன்ற சிபாரிசுகள் இல்லாமல் போனால் கோயில்களில் கிடைக்கும் ட்ரீட்மேண்டே வேறு மாதிரி இருக்கிறது. நான் சொல்லுவது அதிகப்பிரசிங்கித்தனமாக சிலருக்கு பட்டாலும் இந்த தரிசனம் சிறப்பு தரிசனம் என்பதை விட சிரிப்பு தரிசனமாகவே ஆகி விட்டது..

Saturday, 12 December 2009

Mechnocrats '08 - 3

11 comments:
இரண்டாம் பகுதி... முதல் பகுதிக்கான தொடர்பு இரண்டில் உள்ளது..

மூன்று:


சரவணனும் ஜார்ஜும் சி 62 வை தேடி ஒவ்வொரு அறையாக சென்று கொண்டிருந்தனர். ஒவ்வொரு அறையிலும் வித விதமாக ராகிங் கூத்து நடந்துகொண்டிருந்தது. தூண்டிலில் மாட்டிய மீன் போல ஒவ்வொரு முதல் வருட மாணவனும் துடித்துக்கொண்டிருந்தான். சரவணன் ஒவ்வொரு அறையாக நோட்டம் விட்டுக்கொண்டே சென்றான். மூன்றாவது மாடியின் இடது கோடியில் இருந்தது சி 62 . சரவணனும் ஜார்ஜும் அறுபத்தி ஆறிலிருந்து பின்னோக்கி சென்றனர்.

சி 66

தரையில் நீச்சலடித்து கொண்டிருந்தான் வெறும் உள்ளாடையுடன் எதிர்கால ஐன்ஸ்டீன்.

சி 65

இல்லாத விக்கட்டை நோக்கி ஓடி வந்து ரன் அவுட் ஆகிக்கொண்டிருந்தான் ஒருவன்.

"என்னடா ஒவுட்டானியா ரீச் பண்ணிட்டியா? "

"அவுட் ஆயிட்டேன் னேன்"

"நான் பாக்கலியே மச்சி"

"டேய் ரீப்ளே போடு"

சி 64

பூட்டி இருந்தது.

சி 63

புன்னகையை மட்டுமே ஆடையை அணிந்தபடி சீனியர்களிடம் இடம் சுட்டி பொருள் விளக்கிக்கொண்டிருந்தான் ஒருவன்.

சரவணனுக்கு இதயமே நின்று விட்டது. சி 62 ஐ நெருங்கும்போது. உள்ளே மூன்று பேர் உட்கார்ந்துகொண்டு இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைக்கோலாற்றினை விலாவரியாக அலசிக்கொண்டிருன்தனர்!

"அண்ணேன்" சரவணன் பாசத்தோடு அழைத்தான்.

"யார் ரா நீ?"

"நீங்க தன வரச்சொன்னேங்க.." சந்தேகமாக கேட்டன் சரவணன்.

"ஓஒ... அப்டியா.. வா வா வா...." பாசமாக அழைத்தான் சரவணன் வராவிட்டால் வாழ்வாதாரத்தை அறுத்துவிடுவதாக கூறியவன்.

சரவணனுக்கு தன் மேலே கோபமாக வந்தது. அவனே மறந்து தொலைத்தும், ஆர்வமாக தானே வந்து வலையில் சிக்கியதை எண்ணி நொந்து கொண்டான்.


"என்னடா யோசிக்கிற? தேவையில்லாம வந்து மாட்டிக்கிட்டோமே நா? "

அவன் சரியாக கேட்டது சரவணனின் கோபத்தை மேலும் அதிகப்படித்தியது.

"உங்கள வெத்தல பாக்கு வச்சு கூபுடனுமா. வாங்க சார் உள்ள." ஜார்ஜும் இழுத்து வரப்பட்டான் வலைக்குள்.

வெள்ளையாக, உயரமாக விஷாலுக்கு பெயின்ட் அடித்து கண்ணாடி மாட்டியது போல் இருந்த ஒருவன் கேட்டான்.

"உன் பேரென்ன ராஜா?"

"சரவணன்."

"நான் அவன கேட்டேன்"

"ஜார்ஜ் னேன்"

"ஏன் முதல் தடவ சொல்லல?"

"!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!" ஜார்ஜ்.

"சரி இப்ப நீ சொல்லு? என்னென்ன கிளாஸ் போயிருக்கு?" கஷ்டமான கேள்வியை கேட்டான் வெள்ளை விஷால்.

"இங்கிலீஷ், பேசிக் மெகானிகல், பேசிக் எலக்ட்ரிகல், அப்புறம் ...." சரவணன் யோசிப்பதற்குள் அடுத்த கேள்விக்கணையை தொடுத்தான்

கருப்பாக, ஒல்லியான தேகத்துடன் இருந்த மற்றொருவன்.

" வந்ததுலயே செம கட்ட யாரு?" சிரித்தபடி கேட்டான்.

"ஹி.. ஹி.. ஹீ... " இருவரும் சிரித்தனர்.

"டேய் அவன் என்ன தொறந்தா காட்டிக்கிட்டு இருக்கான்? பதில் சொல்றா.." கோபப்பட்டான் வெள்ளை மச்சான்.

சிரிப்பை நிறுத்தியபடி சரவணன் சொன்னான் " எலக்ட்ரிகல் மேம் செவப்பா சூப்பரா இருந்தாங்கன்னே"

"பேரென்னடா?" கேட்டான் கறுத்த மச்சான்.

"கண்ணம்மா னேன்..." சரவணன் சொல்லி முடித்த அடுத்த வினாடி கன்னத்தில் இடி விழுந்தது போல் இறங்கியது அந்த அரை.

இதுவரை வாயே திறக்காமல் இருந்த மூன்றாமவன் சரவணனின் கன்னத்தில் தன் கோபத்தை இறக்கி விட்டு வெளியேற சித்தமானான்.

"டேய் மச்சி .. சும்மா டா.." சமாதானப்படுத்தினான் விஷால்.

"போங்கடா விலைமாதர் மகன்களா" அவர்களை விட்டு விட்டு அவர்கள் அம்மாக்களை ஏசிவிட்டு கோபமாக வெளியேறினான் மூன்றாமவன்.

அவன் முழுவதுமாக மறைந்த பிறகு, சரவணன் தையிரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டான்.

"ஏன்னேன் அடிச்சிட்டு போறாரு?"


"அவங்கக்காவ சூப்பர் பிகருன்னு சொன்ன அடிக்காம விட அவன் என்ன "கிரி" வடிவேலுவா? " சொல்லிவிட்டு பேய் போல் சிரித்தனர் விஷாலும் கருப்பனும்.

சரவணன் ஜார்ஜை பார்த்தான். ஜார்ஜும் சிரித்துக்கொண்டிருந்தான்..


நான்கு:

முன்தினம் அறைக்கு திரும்ப நேரமாகிவிட்டதால் சரவணன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். எட்டு மணி வரை. விறு விறுவென எழுந்து காலைக்கடன்களை செய்ய பாத்ரூமுக்கு ஓடினான். அவன் தளத்தில் நான்கு குளியலறைகளும், படியேறி அடுத்த தளத்திற்கும் அவன் தளத்திற்கும் செல்லும் இடைவெளியில் நான்கு கழிவறைகளும் இருந்தன. வழக்கம் போல் அன்றும் அனைத்தும் நோ வாகன்சியாக இருந்தன.

சரவணன் கண்ணில் இருந்து ஜலம் கொட்டாத குறையாக அடி வயிறு முட்டியது. கதவை பலமாக தட்டினான். அதிர்ஷ்டவசமாக ஒருவன் வெளியேறினான் கையில் பிரஷும், வாயில் நுரையுமாக.

"ஏங்கா உகிர் போற மாகி தற்ற.. சீக்லம் பொய் என்ன பங்க போற" என்றான் நறுமனும் வீசும் பேஸ்ட் வாயுடன்.

எதையும் காதில் வாங்காதவனாக சரவணன் காரியமே கருத்தாக கழிவறைக்குள் சென்று கதவை தாளிட்டு கொண்டான். பத்து நிமிடங்களுக்கு பிறகு மூச்சை இழுத்து விட்டபடி சந்தோசமாக வெளியே வந்தான். அடுத்து குளியலுக்கு அடிதடி. அடித்து பிடித்து குளிக்க இடம் பிடித்து, அரைகுறையாக குளித்து விட்டு எட்டு முப்பதிற்கு சிற்றுண்டிக்காக மெஸ்சுக்கு ஓடினான்.

மெஸ்ஸை இரண்டாக பிரித்திருந்தார்கள் - முதல் வருடம் மற்றும் நான்காம் வருட மாணவர்கள். இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்கள். சரவணன் முதல் வருட மாணவர்களுக்கான மெஸ்சுக்கு சென்று தட்டை கழுவ சென்றான். பல நான்காம் வருட மாணவர்களும் சில முதல் வருட மாணவர்களும் இருந்தனர். முதல் வருட மாணவர்கள் அனைவரும் சீக்கிரமே சாப்பிட்டு விட்டு சென்று விட்டனர். சரவணனும் சிலருமே பாக்கி. அன்று தோசையும், கிச்சடியும் மெனு. தோசை வரிசையில் சென்று நின்றான். வரிசை மிக மெதுவாக நகர்ந்தது.

சரவணனின் முறை வந்தது. தட்டை நீட்டும் சமயம், மற்றொரு தட்டு அவன் முன் நீண்டது. சரவணனை விட குள்ளமான அனால் தடிமனான நான்காம் வருட மாணவன் நின்று கொண்டிருந்தான்.

"அண்ணேன் என் டர்ன்.. கிளாசுக்கு வேற லேட்டாயிருச்சு.. " பயந்து கொண்டே சொன்னான் சரவணன்.

"அதுனால.." கோபமானான் அவன்.

"அதுனால பரவால்ல நீங்க சாப்பிடுங்க.. ஹீ.. ஹீ.." சமாளித்தான் சரவணன்.

தோசையை தட்டிலிருந்து வாயில் திணித்தவாரே சரவணனை முறைத்துக்கொண்டு சென்றான் அவன். கடைசியில் கிடைத்த கிச்சடியை தின்று விட்டு, பாதி வயிறை ரொப்பிக்கொண்டு ஒன்பது பத்திற்கு அங்கிருந்து கிளம்பினான் சரவணன்.

விடுதியில் இருந்து வெளியே வந்து, பிரதான வழியை கடந்து, சிவில் டிபார்ட்மென்ட் கீழ் தளத்தின் வழியாக தன் வகுப்பறை இருத்த பி பிளாக்கிற்கு சென்றான். அவன் வகுப்பறை முதல் தளத்தில் இடப்புரமிநின்று மூன்றாவதாக இருந்தது. வாசலை வந்தடைந்தான். உள்ளே எட்டி பார்த்தான் இயற்பியல் ஆசிரியை ராஜாத்தி நின்று கொண்டிருந்தார். தயங்கித்தயங்கி போய் நின்றான்.

"ஒய் ஆர் யு லேட்?"

"ஹாஸ்டல்ல லேட்டாயிருச்சு மேடம்.."

"டோன்ட் கிவ் மீ ரீசன்ஸ்." முந்தைய கேள்விக்கு முரணான பதிலை தந்தார் ராஜாத்தி.

இப்பொழுது என்ன சொல்வதென்று சரவணனுக்கு விளங்கவில்லை. தலை குனிந்த படி நின்றுகொண்டிருந்தான்.

"இந்த மாறி பிகேவியரெல்லாம் ஐ வோன்ட் என்கரேஜ். கெட் அவுட் ஆப் மை கிளாஸ்."

பள்ளி போல் இரண்டு நிமிடம் கழித்து அனுமதிப்பார்கள் என்று நின்று கொண்டிருந்தான் சரவணன். அந்த மாதிரி எதுவும் நிகழவில்லை. அப்பொழுது இடது பக்கத்திலிருந்து ஏதோ ஒலி கேட்டு திரும்பினான் சரவணன்.

"பிஸ்.. பிஸ்.. " அழைத்தான் கார்த்திக் கணேஷ்.

கண்களால் என்ன என்று கேட்டன் சரவணன். அவன் சரவணை அவன் அருகே அழைத்தான். சரவணனும் சென்றான்.

"என்ன சொல்லுது குண்டம்மா.." ராசாத்தியின் சற்றே பெரிய உடம்பை கிண்டலடித்தான் கார்த்திக்.

"உள்ள விடாதாம்.. கத்துது.." சரவணன் ராசாத்தியை அக்றிணையாகவே மாற்றி விட்டான்.

"அப்ப ஏன் நிக்கற வா போவோம். " கூப்பிட்டான் கார்த்திக்.

"எங்க?!" வியந்தான் சரவணன்.

"ஒரு சூப்பர் எடம் இருக்கு. சீனியர் அண்ணன் சொன்னாரு. காலேசுக்குள்ளயே. வா.."

"பரிச்ச ஏழுத விடலேனா" சரவணன் பயத்துடன் கேட்டன்.

"அதுக்கு சிக்ஸ்டி பர்சன்ட் அட்டெண்டன்ஸ் இருந்தா போதும். இந்த ஒரு கிளாஸ் நாலா ஒன்னும் ஆயிறாது வா.."

சரவணனுக்கு வேறு வழி தெரியாததால் அரை மனதாக கிளம்பினான்.

"எங்க போறோம்"

"பம்ப் ஹவுஸ்....."

Friday, 11 December 2009

King of comedy..

4 comments:
King of comedy – Athukku than comic sans font.. Ithu epdi irukku!!! Ok.. What’s King of comedy? No.. no not me..  Antha alavukku tharperuma pidicchavan naan illa.. Ok Coming back to the point.. “King of comedy” is a comedy celluloid from my favorite “Martin Scorcesse”. Yeah.. The same person who directed “The Aviator”, “The Departed” and more importantly “TAXI DRIVER”.

Man.. What can’t this guy do!!! He has once again proved that he’s a master of different tastes. Film stars Scorcesse’s old time favorite Robert De Niro (Ippo aala maatthittaru “De caprio”) along with real King of Comedy “Jerry Lewis”. But with  touch of Martin (Scorcesse naan apdi than sellama koopduvaen..).

Martin gives different flavors that is contradictory to their until now roles of De niro and Jerry. De niro is packed  with full of comic jelly and Jerry with a tight face (Bad ass..). Jerry stars as “Jerry” hosting a talk show. A famous talk show like “Tonight Show with Jay Leno” (athaan nammalu Yugi  Sethu copy adiccharae “Nayy..yyaaan..diii tharbaar.. nu). De niro also wants to be a stand up comedian and meets Jerry with the help of a girl who makes a mess by getting into the car of Jerry when he rushes out of studio.

Jerry, like treating all others, takes him light and gets the resume and never calls back (namma TCS.. CTS maari.. Intha paavam lam ungala summa vidaathu da.. Indian Manorama maari padikkanum). But De niro takes it as an insult and takes revenge. Not like Thiruppacchi revenge. Instead he kidnaps Jerry with the help of the gal who helped him in first scene. Whats his demand and whether it gets fulfilled forms the rest.

What makes this movie special?
1.     Jerry in serious role..
2.    De niro in comic role..
3.    Ofcourse Martin..
4.    The real time events that happens to whoever desires to be a celebrity

And many more… Am pretty much sure that you will feel this movie definitely comic enuf and moving..
Martin never fails (except “After Hours”) .. So do give it shot.. Of course torrent is available for free..

What say??

Friday, 4 December 2009

Mechnocrats'08 -2

9 comments:
முதல் வருடம்:

முதல் பகுதி (தவற விட்டவர்களுக்கு)..

ஒன்று.. 


அன்று தான் பன்னிரெண்டாம் வகுப்பு பரிட்சைகள் முடிந்து வினாத்தாளையும், புத்தகங்களையும் குறிப்பாக உரை நூல்களையும், துணைவர்களையும் (Guide) கிழித்து வானத்தில் எரிந்து விட்டு சந்தோசமாக வீட்டில் வந்து படுத்தது போல் இருந்தது. கண்மூடி கனவு கலைவதற்குள் பொறியியல் நுழைவுத்தேர்வு எழுதி, அதன் தேர்ச்சி விவரங்கள் வெளியாகி, நூறு நீதமன்ற வழுக்குகள் பதிவாகி, ஒற்றைச்சாளர முறையில் கல்லூரித்தேர்வு நடந்து அதில் சரவணனுக்கு மதுரை தியாகராயர் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் இடம் கிடைத்தும் விட்டது.



தியாகராயர் பொறியியல் கல்லூரி - இந்தியாவிலயே மிகச்சிறந்த பொறியியல் கல்லூரி ... என்று சொல்ல முடியாவிட்டாலும், தமிழ்நாட்டில் உள்ள இருநூற்று சொச்சம் பொறியியல் கல்லூரிகளில் முதல் பத்திற்குள் வந்து விட பிரயத்தனம் செய்யும் கல்லூரிகளுள் ஒன்று. 2004 வருடத்திற்கான மாணவர் சேர்க்கை முடிந்து,அந்த மாணவர்கள் தங்கள் கல்லூரி வாழ்கையை தொடங்க வந்திருந்தனர். ஆகஸ்ட் 30. அவர்கள் அனைவரும் பிரிவு பிரிவாக கே.எஸ். கருத்தரங்கிற்குள் அனுப்பப்பட்டு, மந்திரிக்கப்பட்டு பின் வெளியே வந்து கல்லூரி உலா சென்றனர்.


சரவணன் நான்காவது பிரிவு மாணவர்களுடன் உள்ளே சென்றான். உள்ளே பிரின்சிபால் மற்றும் அந்தந்த பிரிவு துறை தலைகளும் மாணவர்களை நூறு ரூபாய் காந்தி தாத்தா போல் சிரித்து வரவேற்றனர். அடுத்த சில நிமிடங்களில் பிரின்சிபால் அபய் குமார் பேசத்துவங்கினார்.

"இன்னைக்கு என்ன நாள்?" அண்ணாமலை ரஜினி போல் கேட்டார்.

முதல் நாளே எதிர்பாராத கேள்வியினால் மாணவர்கள் திக்குமுக்காடி போயினர். சரியான பதில் தெரிந்தாலும் சொன்னால் தப்பாகிவிடுமோ என்ற தமிழனுக்கே உரிய பயம்.

"ஹா.. ஹா.. ஹா.. உங்கள் வாழ்கையின் பொன்னாள்" தனது மில்லியன் டாலர் கேள்விக்கான பதிலை அம்பலப்படுத்தினார் பிரின்சிபால்.

பின் அரைமணி நேரத்திற்கு எப்பிடி தங்கள் கல்லூரியில் படிப்பை தவிர மற்றதிலும் ஊக்குவிக்கிறார்கள், எந்த பிரிவில் படித்தாலும் கடைசியில் ஒரு மென்பொருள் பிரிவில் வேலை கிடைப்பது திண்ணம், மற்றும் பல திக்குமுக்காடும் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

கடைசியாக..

"மாணவர்களும், பெற்றோர்களும் கல்லூரியை பற்றி அறிந்து கொள்வதற்காக ஒரு உலா ஏற்பாடு செய்திருக்கிறோம். தவறாமல் அனுபவிக்கவும்." என்றார்.

முந்தைய பிரிவு மாணவர்களைப்போல் இப்பிரிவு மாணவர்களும் மந்திரிக்கப்பட்டு வெளியே வந்தனர்.

அதன் பிறகு மாணவர்களையும் பெற்றோர்களையும் கல்லூரியின் ஒவ்வொரு இடமாக அழைத்து சென்றார் அதற்கென நியமிக்கிப்பட்டிருந்த ஆசிரியர். மாணவர்களின் மனதில் 'இந்த வருடம் சேரும் பெண்களில் 10 சதிவிகிதமாவது அழகாக இருக்க வேண்டும்' என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. மாணவிகள் மனதில்..... மாணவர்கள் போல் இல்லை. ஒவ்வொருத்தர் மனதிலும் ஒவ்வொன்று. அதுக்கு தனி கதையே எழுதணும். வேண்டாம். கடைசியாக இயந்திரவியல் வொர்க் ஷாப் முன் நின்றனர். அதன் பொறுப்பாளர் அறுபத்தைந்து வயது மிக்க அமிர்தலிங்கம் பேச ஆரம்பித்தார்.

"நான் இந்த வொர்க் ஷாப்பில 35 வருஷமா இருக்கேன். இருக்கற மிஷின் எல்லாம் பார்த்து பயப்பட வேணாம். உங்க பசங்களுக்கு ஒன்னும் ஆகாம நாங்க பார்த்துக்குவோம்".

"என் பொண்ணு கம்பியூட்டர் சயன்ஸ் குரூப்பு. அவளும் இதெல்லாம் பண்ணனுமா?" ஒரு அப்பா கேட்டார்.

"முதல் வருஷம் எல்லாரும் கண்டிப்பா கார்பெண்டரியும், பிட்டிங்கும் பண்ணனும்."

மாணவிகள் பேயறைந்த முகத்துடன் அந்த ராட்சத இயந்தரங்களை பார்த்து மிரண்டனர்.

"பொண்ணுங்கள்ள யாராவது மெகானிகல் இருக்கீங்களா?" கலவரத்தை அதிகப்படுத்தினார் அமிர்தலிங்கம்.

ஒரு பெண் தயங்கித்தயங்கி முன் வந்தாள்.

"உன் பேர் என்ன மா?" கேட்டார் அமிர்தலிங்கம்.

"மைத்ரேயி சார்."

"குட். ஆம் கிளாட் யு சோஸ் மெகானிகல். யு டோன்ட் வொர்ரி அபௌட் எனிதிங். வி வில் டேக் குட் கேர் ஆப் யு."

"எல்லாரும் சாப்டுட்டு மறுபடியும் ஆடிட்டோரியம் முன்னாடி அசம்பிள் ஆயிருங்க. அங்க இருந்து மதியம் கிளாசுக்கு போலாம்." அறிவித்து விட்டு பதில் எதிர்பார்க்காமல் கிளம்பினார் பொறுப்பு ஆசிரியர்.


இரண்டு.. 

கல்லூரி உணவகத்தில் கிடைத்ததை தின்று விட்டு, பாம்பாட்டியின் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல் பொறுப்பாசிரியரின் கட்டளைக்கு பணிந்து அரங்கத்தின் முன் ஆஜராயினர் மாணவர்களும் பெற்றோர்களும். பொறுப்பாசிரியர் கையில் ஒரு வெள்ளை காகிதத்துடன் வந்து சேர்ந்தார். மாணவர்களை குதிரைகளைப்போல் எண்கள் குடுத்து பிரித்தார்.

"47001 டு 47075 ஏ செக்ஷன் போங்க. "

"47076 டு 47150 பி செக்ஷன். "

........................................................................................

இப்படியாக அந்த வருடம் சேர்ந்திருந்த அனைத்து மாணவர்களையும் ஆறு செக்ஷன்களாக பிரித்து அனுப்பிவிட்டு பெருமூச்சு விட்டபடி தன அறைக்கு திரும்பினார்.

சரவணன் ஏ செக்ஷனில் போடப்பாட்டான். முதல் செமஸ்டர் என்பதால் அனைத்து பிரிவு மாணவர்களும் கலந்திருந்தனர். அனைவர் முகத்திலும் முதல் முறையாக சீருடை அணியாமல் வகுப்பறையில் அமர்ந்திருந்த சந்தோசம். கிட்டத்தட்ட ஏற்கனவே நிரம்பிவிட்ட வகுப்பறைக்குள் நுழைந்து, இரண்டு பேர் அமர்ந்திருந்த பெஞ்சில் மூன்றாவதாக நெருக்கி பிடித்து அமர்ந்தான் சரவணன்.

"ஹாய் ஐ ஆம் சரவணன்"

"ஐ ஆம் சக்தி முருகன்".

"ஜார்ஜ் ராஜ ரூபன்" என பெஞ்ச் மெட்டுகள் அறிமுகமாகிக்கொண்டனர்.

அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு ஆங்கிலம், மெகானிகல் மற்றும் எலக்ட்ரிகல் பாடங்களின் ஆசிரியர்கள் அறிமுகமாகி கழுத்தை அறுத்தனர். நாலு முப்பதிற்கு வகுப்புகள் முடிவடைந்தன. சரவணன் கிளம்ப எத்தனித்தான்.

"நீங்க Hosteller ஆ Day ச்சோழர் ஆ?" ஜார்ஜ் சரவணனிடம் கேட்டான்.

"Hosteller நீங்க?" திரும்பி கேட்டன் சரவணன்.

"நானும் Hosteller தான். நான் டி 25 . நீங்க எந்த ரூம்?" ஜார்ஜ்.

"என்னையும் டி 25 ல தான் போட்ருக்காங்க." சரவணன் மகிழ்ச்சியாக கூறினான்.

"அப்பா வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போவோம். இந்த Hostel ல ராகிங் ரொம்ப அதிகம் நு சொன்னாங்க." ஜார்ஜ் பயத்தை வெளிப்படுத்தினான்.

"அப்டியா. வெளிய ராகிங் இந்த காலேஜ் ல கிடையாதுன்னு சொன்னாங்களே" அன்பே சிவம் சாமிநாதன் போல் சொன்னான் சரவணன்.

" Day scholar நா பிரச்னை இல்லையாம். Hosteller நா தாலி அத்துருவான்கலாம்." பீதியை அதிகப்படுத்தினான் ஜார்ஜ்.

சரவணன் பதிலேதும் கூற முடியாமல், வேறு வழியும் இல்லாமல் விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். மிகுந்த பயத்துடன்.

டி 25 எங்கே என தெரியாமல் இருவரும் முழித்து கொண்டு இருந்த போது இவர்களைப்போலவே, இவர்கள் வயதை ஒத்த ஒருவன் நின்று கொண்டிருப்பதை பார்த்த ஜார்ஜ் அவனிடம் சென்று அறிமுகப்படுத்தி கொண்டான்.

"ஹாய் ஐ அம ஜார்ஜ். நீங்க என்ன டிபார்ட்மென்ட்?" விளித்தான் ஜார்ஜ்.

"பைனல் இயர் " முறைத்தான் அவன்.

"நான் என்ன டிபார்ட்மென்ட் நு கேட்டேன்" தன் கேள்விக்கு பதில் வராததால் திருப்பி கேட்டான் ஜார்ஜ்.

பளாரென்று ஜார்ஜ் கன்னத்தில் ஒன்று விட்டான் அந்த மாணவன். பிறகு சொன்னான் "பைனல் இயர்"

இந்த முறை சரியான பதில் கிடைத்ததால் வாயை மூடிக்கொண்டான் ஜார்ஜ்.

"எந்த கிளாஸ் ரா?" அடிவாங்கிய ஜார்ஜைப்பார்த்து சிரித்தபடியே கேட்டன் மற்றொருவன்.

"ஏ" கன்னத்தை தடைவியபடி சொன்னான் ஜார்ஜ்.

"அண்ணன் சொல்லு அண்ணன் சொல்லு" என்றான் அவன்.

"ஏ கிளாஸ்னேன்" பயத்தில் உளறினான் ஜார்ஜ்.

"நீ டா?" சரவணனை பார்த்து கேட்டன் அவன்.

"நான்.. நானும் ஏ தான் அண்ணேன்" சரவணன்.

"அப்ப நாங்கலாம் லோ கிளாஸ் ஆ?" தன் மட்டமான ஜோக்குக்கு சுற்றியிருந்த தன் மூன்று கூட்டாளிகளுடன் சேர்ந்து சிரித்தான்.

சரவணனுக்கும் ஜார்ஜுக்கும் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

"சரி.. எத்தன மணிக்கு தூங்குவ?" கேட்டான் அவன்.

"பத்து.. பத்து மணிக்கு?" ஜார்ஜ்.

"நான் அவனைக்கேட்டேன்" சரவணனை முறைத்தான்.

"நான்.. நானும் பத்து மணிக்கு" பதிறினான் சரவணன்.

"சரி ரெண்டு பேரும் பதினோரு மணிக்கு சி 62 க்கு வந்து என்ன பாருங்க." சொல்லிவிட்டு பதில் ஏதிர்பார்க்காமல் நகர்ந்தான்.

சரவணன் இப்பொழுதே வீட்டுக்கு போய் விடலாம் என்று நினைத்த பொழுது மீண்டும் அந்த குரல்.

"டேய்.. வரல.. மவனே நாளைக்கு அத்துருவேன்...". சரவணனும், ஜார்ஜும் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.