Saturday, 28 November 2009

Mechnocrats '08 - 1




Mechnocrats '08.. - என் முதல் தொடர் கதை முயற்சி. என் முதல் கதையான முதல் வரியை அங்கீகரித்த அனைவருக்கும் அடுத்த தண்டனை. ஆனால் இம்முறை கண்டிப்பாக முழு கதையையும் படிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. எந்த வார்த்தை விளையாட்டும் கிடையாது. யாராவது ஒருவர் எந்த சமயத்தில் "நிறுத்து" என்றி கூறினாலும் அப்பொழுதே முடித்து கொள்கிறேன். அப்பிடியெல்லாம் சொல்லமாட்டிங்க னு எனக்கு தெரியும்! சரி கதையின் பெயர் என்ன ஆங்கிலத்தில்.. சிலருக்கும் ஆரம்பிக்கும்போதே புரிந்திருக்கும்.. ஒன்னும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை.. கல்லூரியில் எங்கள் இயந்திரவியல் மாணவர்களுக்கு நாங்களே சூட்டிக்கொண்ட நாம கரணம். இந்த கதைக்கு அது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். மேலும் தாமதிக்காமல் கதைக்கு செல்வோம்.


முடிவு:


சரவணனுக்கு அந்த மாணவர்களை பார்த்தால் பாவமாக இருந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு படித்து! சரி கல்லூரியில் இருந்தது இறுதி வருடம் வரும் வளாக நேர்காணலில் பங்குகொள்வதர்க்காகத்தானே! அதற்கு தடை வந்தால் நிச்சயம் யாருக்கும் அச்சம் ஏற்படத்தான் செய்யும். சரவணனுக்கு அதன் வலி நன்றாகவே தெரியும். அவனும் அதை அனுபவித்து, மீண்டு வந்தவன் தான். நேர்காணலை மட்டும் அல்ல வலியையும். கல்லூரி நிர்வாகம் அவன் முன் நின்றிருந்த மாணவர்களை நேர்காணலில் பங்கேற்க தடை செய்திருந்தது. சரவணனை போலவே.


"எதுக்கு உங்களையெல்லாம் இண்டர்வியு அட்டென்ட் பண்ண கூடாதுன்னு சொன்னாங்க ?" சரவணன்.


"..............."


"சொல்லுங்க பா. விஷயம் தெரிஞ்சாதானே நான் பிரின்ஸிபால பார்த்து பேச முடியும். ம்ம்.. ".


"வந்து.. மூச்சு திணறல் வந்திருச்சு சார். அதான்.." அமீர் சொன்னான்.


"அதுக்காக இண்டர்வியு அட்டென்ட் பண்ண கூடாதாமா?"


"மூச்சு திணறல் வந்தது எங்க ஜூனியருக்கு சார். நாங்க நாலு பேரும் அவன் முதுகுல ஏறி ஒக்காந்தோம். அதக்கூட தாங்க முடியல. பண்டிப்பய மூச்சு திணறி மயக்க மாயிட்டன். " என்று தன் ஜூனியரின் கையாலாகாத்தனத்தை நொந்து கொண்டான் மகேஷ்.


"ஏன்பா நீங்க நாலு பேருமா?"


"இன்னொருத்தன் எஸ்கேப் ஆயிட்டான்" இது பிரதீப்.


"ஏன்பா கடைசி வருஷம் இந்த மாறி விளையாட்டுத்தனம் பண்ணி வாழ்க்கைய கெடுத்துக்க பாக்குறீங்களே."


மூவரும் வேறு வழியில்லாமல் கேட்டுக்கொள்ளும் இடத்தில் இருந்ததால் தங்களைத்தாங்களே நொந்து கொள்ளும் தொனியுடன் சரவணனை பார்த்தனர்.


"சரி.. நான் பிரின்சிபால் கிட்ட பேசி பார்க்குறேன். அது வரைக்கும் யார் முதுகுலயும் ஏறாம இருங்க."


"ரொம்ப தாங்க்ஸ் சார்" மூவரும் சிரித்துக்கொண்டே விடை பெற்றனர்.


அவர்களைப்பார்த்த பொழுது சரவணனுக்கு தன்னை பார்ப்பது போல் இருந்தது. கடைசி வருடம் தான் செய்த சிறு தவறினால் (சிறு தவறா!!) சரி.. சரி.. கொஞ்சம் பெரிய தவறினால் தன் வாழ்க்கையே கிட்ட தட்ட முடிந்து விடப்பார்த்ததும் அதன் பிறகு நடந்த சம்பவங்களும் கண் முன் நின்றன. அன்று தான் அவன் கல்லூரியில் சேர்ந்தது போல் இருந்தது. அட ஆமாம். உண்மையாகவே அன்று தான் அவன் கல்லூரியில் சேர்ந்திருந்தான் நான்கு வருடங்களுக்கு முன்பு. காலச்சக்கரம் முன்னோக்கி சுழன்றது.


மீண்டும் கல்லூரி நாளை காலை ஒன்பது மணிக்கு...



4 comments:

  1. college la நம்ம பண்ண பிரதாபங்கள் தான் சுதர்ஷன்.. ஆனா பேரெல்லாம் மாத்திருவோம்.. அப்புறம். எல்லாம் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்த அல்ல.

    ReplyDelete