Saturday, 25 September 2010

Sankarabharanam..

No comments:
Sankarabharanam.. The movie I was longing for a long time (Madhava nee engayo poitada..). I came to my sisters house on a two week stay and guess what! Bingo.. Since travelling from T. Nagar to my office takes 2 hours, I have decided to convert it into 3GP and see it my mobile. Due to some technical difficulties, the audio video sync wasn't proper. So finally today saw it in PC in afternoon and didn't get sleep.

Movie started with the director saying enjoy the ocean of music with us. It really was. I do not like movies simply saying portraying art and forms of art by keeping film in a different direction. But this one is one of its kind and the one of the bests (like "Salangai oli").

A great Carnatic singer of his time is admired by a Vesi (the name used for prostitutes in olden days) recognises the woman's interest in music and gives her refuge when commits a crime. Due to unavoidable circumstances, she leaves the town. She comes back after 20 years and let her son do what she desired to do. Rest of the story is a visual treat.

I don't want to comment on anything as the film maker got the guts in that time to make such a movie. Film do has a few pros and cons. But don't want to zoom into it. See it.. Definitely you will not regret it.

Sunday, 19 September 2010

பாஸ் @ பாஸ்கரன்..

2 comments:
பாஸ் @ பாஸ்கரன்.. - ஆர்யா ஒரு பேட்டியில் சொன்னார் " டைரக்டர் சொன்னாரு 24 மணி நேரமும் பிசியா இருப்பீங்க ஆனா ஒரு வேலையும் பார்க்க மாட்டிங்க.. அதான் பாஸ்..". அதை அப்படியே அச்சு பிசகாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். இயக்குனரும், ஆர்யாவும். கமல் ஹாசனுக்கு பிறகு முழு நீள நகைச்சுவை திரைப்படம் செய்ய முயன்றதற்காகவே ஒரு சபாஷ். அதை கிட்ட தட்ட நடத்தியும் காட்டியதற்காக இன்னொரு சபாஷ். கதாப்பாத்திரங்களை அவர்கள் போக்கில் நடிக்க விடாமல் ஒரு characterization செய்ததற்கு மூன்றாவது சபாஷ்.

படத்தின் கதை பிரமாதமாக ஒன்றும் இல்லை.. ஒரு உதவாக்கரை. வழக்கம் போல் காதலிக்கிறார். காதலியின் அக்கா உதவாக்கரையின் அண்ணி. நாயகன் பெண் கேட்க அண்ணி என்ன வேலை உருப்படியாக செய்தி பெண் தர என கேட்க, தங்கையின் கல்யாணத்தை ஆறே மாதங்களில் தன செலவில் முடித்தால் பெண் தர தயாரா என்கிறார். ஆகட்டும் பார்க்கலாம் என்கிறார் அண்ணி. உ...ப்.. இதற்கும் மேல் படத்தில் கதை இல்லை. இதுவே அதிகம்.

கதை மேலே உள்ள பத்தி போல் dry ஆக இருந்தாலும், திரைக்கதை மற்றும் படமாக்கம் கதைக்கு உணர்ச்சியளித்து படத்தை நகர்த்துகின்றன. ஆர்யா, அவரின் அண்ணன், அம்மா, அண்ணி, நயனதாரா, சித்ரா லக்ஷ்மணன், மற்றும் குறிப்பிடும் வகையில் சந்தானம் என அனைவரும் செவ்வனே செய்திருக்கிறார்கள்.

"ஊர்ல பத்து பதினஞ்சு  friend இருக்கிறவனெல்லாம் சந்தோசமா இருக்கான். ஒரு friend வச்சுக்கிட்டு நான் படுற கஷ்டம் இருக்கே அய்ய்யாய்யாய்ய்யு..." என அலுத்து கொள்வதிலிரிந்து "நண்பேண்டா" என மார் தட்டுவது வரை அசத்துகிறார் சந்தானம். பல காட்சிகளில் கவுண்டரை imitate செய்ய முயற்சிக்கிறார். பாவம் குரல் தடுக்கிறது.

மொத்தத்தில் இரண்டரை மணி நேரம் busy ஆக இருப்பீர்கள் ஆனால் ஒன்றும் உருப்படியாக நடந்திருக்காது.. ஆனால் மகிழ்ச்சியாக வெளியே வருவீர்கள்.. இந்த விமர்சனத்தை படித்து விட்டு சென்றால் வெளியே வந்து சொல்வீர்கள்

"நண்பேண்டா!! "

Sunday, 5 September 2010

மீண்டும் தூண்டில் கதைகள்..

1 comment:
மீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதாவின் முன்னுரையே படிக்க தூண்டியது. என் அண்ணன் நூலகத்திலிருந்து இரவல் வாங்கி, அதை நான் இரவல் பெற்று ரயில் பயணத்தில் படித்தேன்.  முதல் கதையான "செல் போன் பயனுள்ளவை" படித்தவுடன் தூக்கம் வருவது போல் இருந்தது. சுஜாதா அப்டியெல்லாம் மோசம் செய்ய மாட்டார் என்று தொடர்ந்தேன். மோசம் செய்யவில்லை. இரண்டாவது கதை "நுழைவுத்தேர்வு" கொஞ்சம் நம்பிக்கையூட்டியது. பிறகு "கொல்லாதே", "குரல்" , "கம்ப்யூட்டர்  சாமியார்" முதலியவை ஒ...கே... ராகம். இதில் "கம்ப்யூட்டர் சாமியாரை" ஏற்கனவே படித்திருக்கிறேன். விகடனிலோ குமுதத்திலோ. "567" ஒரு நல்ல மாற்றமாக இருந்தது. எப்படி முடிப்பார் என எதிர்பார்த்து, O' Henry கதைகள் போல நன்றாகவே முடிக்கப்பட்டது. "அந்நியருடன் உரையாடல்" ஏமாற்றவில்லை. அடுத்த வந்த மூன்று கதைகளும் கொஞ்சம் ஏமாற்றம் தான். "பொன்வண்டு" நன்றாக ஆரம்பித்து கீழ்த்தரமாக முடிந்தது. "ஸ்டேடஸ்", "சென்னையில் மன்ஹாட்டன்" மிகவும் ஏமாற்றமாக இருந்தன. ஆனால் நாற்பத்தைந்து ரூபாய்களுக்கு கண்டிப்பாக ஏமாற்றமளிக்கவில்லை. இந்த வலை பூவை படித்தால் புத்தகத்தையும் படியுங்கள்..