Sunday, 5 September 2010
மீண்டும் தூண்டில் கதைகள்..
மீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதாவின் முன்னுரையே படிக்க தூண்டியது. என் அண்ணன் நூலகத்திலிருந்து இரவல் வாங்கி, அதை நான் இரவல் பெற்று ரயில் பயணத்தில் படித்தேன். முதல் கதையான "செல் போன் பயனுள்ளவை" படித்தவுடன் தூக்கம் வருவது போல் இருந்தது. சுஜாதா அப்டியெல்லாம் மோசம் செய்ய மாட்டார் என்று தொடர்ந்தேன். மோசம் செய்யவில்லை. இரண்டாவது கதை "நுழைவுத்தேர்வு" கொஞ்சம் நம்பிக்கையூட்டியது. பிறகு "கொல்லாதே", "குரல்" , "கம்ப்யூட்டர் சாமியார்" முதலியவை ஒ...கே... ராகம். இதில் "கம்ப்யூட்டர் சாமியாரை" ஏற்கனவே படித்திருக்கிறேன். விகடனிலோ குமுதத்திலோ. "567" ஒரு நல்ல மாற்றமாக இருந்தது. எப்படி முடிப்பார் என எதிர்பார்த்து, O' Henry கதைகள் போல நன்றாகவே முடிக்கப்பட்டது. "அந்நியருடன் உரையாடல்" ஏமாற்றவில்லை. அடுத்த வந்த மூன்று கதைகளும் கொஞ்சம் ஏமாற்றம் தான். "பொன்வண்டு" நன்றாக ஆரம்பித்து கீழ்த்தரமாக முடிந்தது. "ஸ்டேடஸ்", "சென்னையில் மன்ஹாட்டன்" மிகவும் ஏமாற்றமாக இருந்தன. ஆனால் நாற்பத்தைந்து ரூபாய்களுக்கு கண்டிப்பாக ஏமாற்றமளிக்கவில்லை. இந்த வலை பூவை படித்தால் புத்தகத்தையும் படியுங்கள்..
Subscribe to:
Post Comments (Atom)
Great review and nice to see a book review after long time. I already read Thundil kathaikal but meendum thundil kathaikal, I didn't. The best thing in the review is you mentioned all the story names, because there are lot of sujatha's collection with different sets of short stories. I will definitely buy this book since it contains lots of unread stories.
ReplyDelete