பாஸ் @ பாஸ்கரன்.. - ஆர்யா ஒரு பேட்டியில் சொன்னார் " டைரக்டர் சொன்னாரு 24 மணி நேரமும் பிசியா இருப்பீங்க ஆனா ஒரு வேலையும் பார்க்க மாட்டிங்க.. அதான் பாஸ்..". அதை அப்படியே அச்சு பிசகாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். இயக்குனரும், ஆர்யாவும். கமல் ஹாசனுக்கு பிறகு முழு நீள நகைச்சுவை திரைப்படம் செய்ய முயன்றதற்காகவே ஒரு சபாஷ். அதை கிட்ட தட்ட நடத்தியும் காட்டியதற்காக இன்னொரு சபாஷ். கதாப்பாத்திரங்களை அவர்கள் போக்கில் நடிக்க விடாமல் ஒரு characterization செய்ததற்கு மூன்றாவது சபாஷ்.
படத்தின் கதை பிரமாதமாக ஒன்றும் இல்லை.. ஒரு உதவாக்கரை. வழக்கம் போல் காதலிக்கிறார். காதலியின் அக்கா உதவாக்கரையின் அண்ணி. நாயகன் பெண் கேட்க அண்ணி என்ன வேலை உருப்படியாக செய்தி பெண் தர என கேட்க, தங்கையின் கல்யாணத்தை ஆறே மாதங்களில் தன செலவில் முடித்தால் பெண் தர தயாரா என்கிறார். ஆகட்டும் பார்க்கலாம் என்கிறார் அண்ணி. உ...ப்.. இதற்கும் மேல் படத்தில் கதை இல்லை. இதுவே அதிகம்.
கதை மேலே உள்ள பத்தி போல் dry ஆக இருந்தாலும், திரைக்கதை மற்றும் படமாக்கம் கதைக்கு உணர்ச்சியளித்து படத்தை நகர்த்துகின்றன. ஆர்யா, அவரின் அண்ணன், அம்மா, அண்ணி, நயனதாரா, சித்ரா லக்ஷ்மணன், மற்றும் குறிப்பிடும் வகையில் சந்தானம் என அனைவரும் செவ்வனே செய்திருக்கிறார்கள்.
"ஊர்ல பத்து பதினஞ்சு friend இருக்கிறவனெல்லாம் சந்தோசமா இருக்கான். ஒரு friend வச்சுக்கிட்டு நான் படுற கஷ்டம் இருக்கே அய்ய்யாய்யாய்ய்யு..." என அலுத்து கொள்வதிலிரிந்து "நண்பேண்டா" என மார் தட்டுவது வரை அசத்துகிறார் சந்தானம். பல காட்சிகளில் கவுண்டரை imitate செய்ய முயற்சிக்கிறார். பாவம் குரல் தடுக்கிறது.
மொத்தத்தில் இரண்டரை மணி நேரம் busy ஆக இருப்பீர்கள் ஆனால் ஒன்றும் உருப்படியாக நடந்திருக்காது.. ஆனால் மகிழ்ச்சியாக வெளியே வருவீர்கள்.. இந்த விமர்சனத்தை படித்து விட்டு சென்றால் வெளியே வந்து சொல்வீர்கள்
"நண்பேண்டா!! "
Other than those two dialogues ... Nanbaenn da and oorla 10,15 friend.... This movie didn't give anything more to audiene. I tried watching first half of movie before we did chat yesterday ... My review in one word "crap"
ReplyDelete"Comic opens the funny door but comedian opens the door funny" (Courtesy: Sydney Shelton). This is a movie by a comedian who did funny film making. I don't think this deserves to be a movie. This is 2.5 hrs of jokes with no film making sense. Everyone will laugh definitely but nothing apart from that (As you said). Climax made me feel like watching lollu sabha.
ReplyDeleteI didn't expect such a "crap" (Courtesy: Vignesh Venkat) from the maker of "Shiva manasula shakthi".