மன்மதன் அம்பு.. மதன் அம்புவை சந்தேகித்து அனுப்பும் அம்பே மன்மதன் அம்பாக மாறுவது தான் "மன்மதன் அம்பு". மதனகோபால் ஆகிய மாதவன் சினிமா நடிகையான அம்புஜா என்கிற நிஷாவை (த்ரிஷா இல்ல நிஷா தன்.. படத்துல அதான் பேரு) தொழிலதிபர்களுக்கே உரிய பெரிய மனதுடன் காதலிக்கிறார். அதே பெரிய மனதுடன் சந்தேகிக்கவும் செய்கிறார். அதை நிரூபணம் செய்ய மேஜர் மன்னார் ஆன கமல்ஹாசனை France க்கு த்ரிஷாவை பின்தொடர செய்கிறார். ஒரு கட்டத்தில் கமல் த்ரிஷா எந்த கள்ள தொடர்பும் இல்லாதவர் என்பதை மாதவனுக்கு சுட்டி உணர்த்தும்போது த்ரிஷா வை புரிந்து கொள்ளும் மாதவன் கமலை மறந்து அவர் நண்பரின் புற்றுநோய் சிகிச்சைக்கு தரவேண்டிய பணத்தை தர மறுக்கிறார். சாம, தான, பேத, தண்டம் தோற்று போன நிலையில் தகிடு தித்தம் செய்கிறார் கமல். அதன் பிறகு.. இதுக்கு மேல கதை சொன்ன நல்ல இருக்காது. சொல்றதுக்கும் ஒன்னும் இல்ல.
கமல் படத்துக்கே உரிய பாணியில் அனைவரும் நன்றாக நடிக்கின்றனர். த்ரிஷா முதல் முதலாக நடித்திருக்கிறார். கடைசி முப்பது நிமிடங்கள் அரங்கமே சிரிப்பில் அதிருகிறது.
இவ்வளவு இருந்தும் திரைக்கதியில் ஏதோ இடிக்கிறது. அப்பொழுது தான் த்ரிஷா நல்லவர் என்று சொன்ன கமல், பணம் இல்லை என்றவுடன் தொடர்பு இருப்பதாக கூறுகிறார். மாதவன் உடனே நம்புகிறார். என்னால் நம்ப முடியவில்லை. அதுவும் கமல் படத்தில். இரண்டாம் பாதியில், நீலவானம் தொழில்நுட்ப ரீதியில் வியக்க வைத்தாலும், ஒன்பதே முக்கால் ஷோவில் கண் அயர வைக்கிறது. Censor கட்டிங்க தியேட்டர் கட்டிங்கா தெரியவில்லை இரண்டாம் பாதி அந்தலை சிந்தலையாக.
குறைகள் சில இருந்தாலும் கமல் என்ற நிறை அவ்விடத்தை நிரப்ப முயற்சி செய்கிறது. கமல் முயற்சியை ஒரு முறையாவது அரங்கத்தில் பார்ப்பது குறை அல்ல. தாராளமாக பார்க்கலாம்...
nice bala
ReplyDelete