இசைத்தமிழ்.. - "இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை" என ஒரு பாடல் உண்டு. இன்று இசைத்தமிழ் உள்ளதா என வியக்கும் வண்ணம் மாறிவிட்டது. திரை இசை மட்டும் இசை இல்லை என்றாலும், அதுவே மக்களை சுலபமாக சென்றடையகூடிய ஒரு ஊடகம். அனால் இன்று திரை இசையில் நல்ல கற்பனை வளம் மிகுந்த தமிழை காண்பது அரிது.
"அன்பே உன்னால் என் மனம் பிரீஜிங்.. அடடா காதல் என்றும் அமேசிங்.. எச்கிசே (excuse me அடிக்க முடியவில்லை!!) லெட் மி டெல் யு சம்திங்.. நீ சிரித்தால் இ போன் ட்ரிங் ட்ரிங்.."
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மேற்கண்ட வரிகளில் அழகும் இல்லை, தமிழும் இல்லை. இதற்கான காரணமாக சில விஷயங்கள் தோன்றுகின்றன.
எத்துனை பேரால் இன்று தமிழ் பாடல்களை சரியாக அர்த்தம் கண்டு கொள்ள முடியும். பேச்சு தமிழ் முதல் சங்கத்தமிழ் வரை எதுவாகினும் அது தமிழாகப்பெரின் புரிந்து கொள்ள கஷ்டமாகவே உள்ளது. உதாரணமாக நறுமுகையே பாடலில் "புரவி" என்றொரு மொழி. அதற்க்கு இணையத்தை துவழாமல் எத்துனை பேரால் அர்த்தம் சொல்ல முடியும்? மிக மிக சாதரணமான வார்த்தைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதைவிட வெட்கக்கேடாக தமிழ் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் தான் தெளிவாகிறது.
அடுத்ததாக பாடகர்கள். "காதல் பிச்ச்சாசே.. காதல் பிச்ச்சாசே.. ஏதோ கருமம் பர்ர்ர்வைல்லை.. ". இது தன மிகவும் கேலி செய்யப்பட்ட பாடல். இதைவிட மோசமானவை நிரம்ப உள்ளன. "பூச்சட்டிகள் பூக்கிறதே.." பூச்செட்டி எப்படியடா பூக்கும்? தமிழ் அறிந்த பாடகர்களே உலகில் பிறப்பெடுக்கவில்லை என்பது போன்று எங்கும் எதிலும் உலகமயாக்கல். மற்ற மொழி பாடகர்களை பாட வைக்கலாம் தவறில்லை. தமிழ் கெடாமல் பார்த்து கொள்வது கடமை.
அற்புதமாக எழுதப்பட்ட பாடல்கள், உச்சரிப்பினால் கெடுவது வேதனையின் உச்ச கட்டம். தூய தமிழ் இல்லாவிடினும் குறைந்த பட்சம் தமிழிலாவது எழுதினால் பாடல்கள் உயிர்ப்புடன் இருக்கும். இந்த வலைப்போவை படிக்கும் அளவுக்கும் தமிழ் தெரிந்திருந்தால் தமிழ் உயிர்ப்புடன் இருப்பதாக நம்புவோம்.
No comments:
Post a Comment