Saturday, 10 October 2009

அது.. இது.. எது..


அது.. இது.. எது.. - விஜய் தொலைக்காட்சியில் வரும் ஒரு நிகழ்ச்சியின் பெயர். இன்று (சனிக்கிழமை) இரவு, வழக்கம் போல் டி.வி. ரிமோட்டுடன் சண்டையிட்டு அது பிராணனை விடும் சமயம் விஜய் தொலைக்காட்சியில் வந்து நின்றது.
அதில் அது.. இது.. எது.. நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. சிவகார்த்திகேயனை (கலக்க போவது யாரு.. நிகழ்ச்சியில் வென்ற அவரேதான்) பார்த்தவுடன் மாற்ற நினைத்தேன். ரிமோட் ஒத்துழைக்கவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் மாற்ற வேண்டிய அவசியமில்லாததை உணர்ந்தேன்.
நிகழ்ச்சியில் மூன்று பிரபலங்கள்,மூன்று சுற்றுகள்.
முதல் சுற்று:
இரண்டு தொழில்முறை நேர்த்தியாளர்கள் (Professionals..), ஒரு தொழில்முறையல்லாதவர் (Amaetur). மூவரும் பிரபலங்கள் முன் தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். பிரபலங்கள் அவர்கள் மூவரில் யார் பொய்யானவர் என கண்டுபிடிக்கவேண்டும்.
இரண்டாம் சுற்று:
நகைச்சுவையாளர்கள் தங்கள் திறமையை காண்பிப்பார்கள். பிரபலங்கள் சிரிக்காமல் மழுப்ப வேண்டும்.
மூன்றாம் சுற்று:
பிரபலங்கள் மூவரும் ஒரு கதை சொல்வார்கள். அதில் மூன்று பொய்கள் மறைந்திருக்கும். பார்வையாளர்களில் ஒருவர் அதை கண்டறிய வேண்டும்.
பிரபலங்களுக்கு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தரப்படும் ஆயிரம் புள்ளிகள், அவர்களின் ஒவ்வொரு சரிவிற்கும் நூறு நூறாக குறைக்கப்படும்.
சமீபத்தில் நான் பார்த்த் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பேயில்லாமல், பிசாசில்லாமல் சிரிக்கவும், விறுவிறுப்பாகவும் தோன்றிய நிகழ்ச்சி.
So Pals.. Give it a shot..

No comments:

Post a Comment