இடையில் ஏற்பட்ட உடல் நலக்குறையால் தொடர்ந்து எழுத முடியாமல் போய்விட்டது. என் நண்பர் சொன்னார் "மாமிசம் சாப்பிடும் உடம்பாயிருந்தா தாங்கிருக்கும். சைவம் நால தூக்கிருச்சு." எனில் ஏன் வம்சாவளியாக சைவத்தை கடைபிடிக்கிறார்கள். சைவம் சாப்பிடுபவர்கள் பல வருடங்கள் நோயின்றி வாழ முடிவது எப்படி?
பல காலங்களாக ஏன் நம் முன்னோர்கள் ஒரு சாரார் (சாதி குறிப்பிட விருப்பமில்லை) மட்டும் மாமிசம் சாப்பிட அனுமதிக்கவில்லை? மாமிசம் சாப்பிடுவதினால் உடம்பில் ஒரு வித தெம்பு உண்டாகும். முறுக்கேறும் தெம்பு. சண்டையிட தேவையான தெம்பு. அந்த சாராருக்கு தேவையற்ற தெம்பு. ஏன் ஏற்படுகிறது? மாமிசம் தயாரிக்க விலங்குகள் வெட்டப்படும் நேரத்தில் அவைகளுக்கு உண்டாகும் பயத்தினால் ஒரு வித எதிர்மறை அதிர்வுகள் ஏற்படும் (negative energy/vibrations). அவை உடம்பிற்குள் சென்றால் அதே ஏதிர்மறை அதிர்வுகள் நமக்குள்ளும் செல்லும் வாய்ப்புகள் அதிகம். அது நல்லதல்ல. சரி பின் ஏன் மருத்துவர்கள் மீன்களை பரிந்துரைக்கிறார்கள். மீன்கள் உயிருடன் இருக்கும் பொழுது வெட்டப்படுவதில்லை. இது அறிவியல் உண்மை.
இதே போல் இன்னொரு அறிவியலும் ஆன்மீகமும் ஒத்துப்போகும் விஷயம் தோன்றுகிறது. மகிஷாசுர வதம்குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் என்ன முக்கியம் என்றால் மகிஷாசுரன் வெட்டப்ப்படும்போழுது கீழே விழும் ஒவ்வொரு துளி ரத்தமும், மற்றொரு மகியை (செல்லமாக) உருவாக்கும். பின் எப்படி காளி அவனை காலி செய்தாள். அவன் வெட்டப்படும்பொழுது சிந்தும் ஒவ்வொரு துளி குருதியையும் பாத்திரத்தில் பிடித்து பருகி அது பூமியை அடையாமல் பார்த்துக்கொண்டாள். இதற்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம் என்றால், பல நூறு ஆண்டுகள் முன்னால் சொல்லப்பட்ட இந்த ரத்தத்திலிருந்து மற்றொரு மாதிரி உருவாக்கும் முறை இன்று தான் "Cloning" என்று அறிவியல் ஒத்துக்கொள்கிறது.
அறிவியல் பின்னோக்கியுள்ளதா? மதங்கள் பின்னோக்கியுள்ளனவா?
No comments:
Post a Comment