சுவாமியும் சிநேகிதர்களும் - ஆர். கே. நாராயணன் அவர்களின் debut. மால்குடியின் பிறப்பிடம். இந்திய ஆங்கில எழுத்தாளர்களின் பிதாமகரின் முதல் நாவல். இப்படி பல பெருமைகளை கொண்ட இப்புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் என் அண்ணனால் கிடைத்தது. அவனுக்கு பிறந்த நாள் பரிசளிக்கலாம் என வாங்கினேன். மறுநாள் அனுப்ப வேண்டும். அந்த ஒரே காரணத்திற்க்காக அன்றே படித்து முடித்தேன். ஆனால் கடைசிவரை பரிசளிக்க முடியாமல் போனது வேறு கதை. ஒரே நாளில் படிப்பதென்றால் இரண்டு விஷயங்கள் எனக்கு தேவை.
1. தமிழில் இருக்க வேண்டும்.
2. விறு விருப்பாக இருக்க வேண்டும்.
ஆங்கிலப்புத்தகத்தை அதன் சுவை குன்றாமல் தமிழ்ப்படுத்தியதற்கு விகடன் பதிப்பகத்திற்கு நன்றி. என்ன தான் ஆங்கிலம் ஆனாலும் கதை நடப்பதென்னவோ ஆர். கே. அவர்களின் கனவு பூமியான மால்குடியில் தான். சுவாமி, ராஜம், மணி இந்த மும்மூர்த்திகளின் நட்பு, பகை, ஏமாற்றம், வெற்றி, குதூகலம் இவைகளின் கலவை தான் இப்புத்தகம்.
சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் நடக்கும் கதை. அக்கால கட்டத்தில் பள்ளி, மாணவர்களின் நடவடிக்கைகள், ஆசிரியர்கள், தந்தை மகன் உறவு, நட்பு இவைகளை இயல்பு மாறாமல் சித்தரிக்கும் புத்தகம்.
சுவாமியும் மணியும் முதலில் இருந்தே சிநேகிதர்கள். இடையில் வரும் ராஜம் சுவாமியிடம் முதலில் சண்டையிட்டாலும் பிறகு ராசியாவது மணிக்கு துளியும் இஷ்டமில்லை. சில நாட்களில் மூவரும் இணை பிரியா நண்பர்கள் ஆகின்றனர்.
பின் ஒரு காரணத்தினால் சுவாமி வேறு பள்ளிக்கு மாற்றப்படுகிறான். இதனால் அவனால் அவர்களின் கிரிக்கெட் அணியில் பிளவு ஏற்படுகிறது. மற்றும் பல சுவாரசியமான திருப்பங்களுடன் நகர்கிறது கதை.
சிறுவர்களின் சாகசங்கள் என்றாலும், அதன் மூலம் அவர் விளக்கும் விஷயங்கள் பல. எழுபது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட புத்தகம் என்று என்னால் சத்தியமாக நம்ப முடியவில்லை.
ஒரு நாளில் படித்துவிட வேண்டும் என்ற என் ஆசையை நிறைவேற்றிய ஆர்.கே. நாராயணன் அவர்களக்கு மீண்டும் நன்றி. என் அண்ணன் அதை இன்னும் படிக்க ஆரம்பிக்க கூட இல்லை. ஆனால் எடுத்தால் ஒரே நாளில் முடித்து விடுவான்.
அவன் மட்டுமல்ல நீங்களும் தான்.. Just try :)
finished that book tambi!
ReplyDeleteI agree to your review da! -- from this book only I came to know it is Maali who created the vikatan thatha !
try panren
ReplyDelete