மரணம்.. திருமணம்.. - என் சக ஊழியரின் பாட்டி சென்ற வாரம் இறந்து விட்டார். அவர் இறந்து இரண்டு வாரங்கள் முடிவதற்குள், அவருடைய கணவராகப்போகிறவர் வீட்டில் கல்யாணத்தை முடிக்க எத்தனிக்கிறார்கள். அதற்கும் காரணம் இருக்கிறது. அதை இங்கு விளக்க விருமபவில்லை. ஏனெனில் நான் கருத்துக்கேட்க விரும்பும் விஷயம் அதுவல்ல.
அவருடைய தந்தைக்கு தொலைபேசியில் அழைத்து இந்த மாதிரி.. இந்த மாதிரி .. என்று விளக்க, வழக்கம் போல் எல்லா தந்தையரும் செய்யும் விஷயத்தை அவரும் செய்தார். உடனடியாக ஒரு ப்ரோஹிதரை (மந்திரம் சொல்லி சுப துக்க நிகழ்வுகளை பூரணப்படுத்துபவர்) அணுகி, அம்மா இறந்த இரண்டு வாரத்தினுள் மகள் கல்யாணத்தை பற்றி யோசிக்கலாமா? அது முறையா? என வினவியிருக்கிறார். ப்ரோஹிதர் "அதில் எந்த தவறும் இல்லை. பேஷா பண்ணலாம். புண்ணியம் பாட்டியை போய் சேரும்" என்றிருக்கிறார்.
எனக்கு எழுந்த கேள்வி இது தான். எனக்கு தெரிந்து வீட்டில் ஒருவர் இறந்துவிட்டால் ஒரு வருடத்திற்கு எந்த பண்டிகையும் கொண்டாடமாட்டர்கள். ஆனால் கல்யாணம் - எந்த தடையும் இல்லை. இதை நான் முன்பே கண்டிருக்கிறேன். உங்களில் பலரும் கண்டிருக்கலாம்.
இது ஏன்? எப்படி செய்யலாம்? சரியா தவறா? - உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். மூன்று தினங்களில் என் கருத்தை நான் சொல்கிறேன்.
மூன்று தினங்கள் முடிந்து முழுக்கு போட்டாச்சு. ஹரியைத்தவிர வேறு யாரும் கருத்து சொல்ல விரும்பவில்லை. நன்றி. என்னுடைய கருத்தும் ஹரியை ஒத்தது தான். முன் காலத்தில் இப்படி சூழ்நிலைகளை அவர்கள் சந்தித்திருக்க வேண்டும். அதனால் பின் வரும் சந்ததியினருக்கு ஏற்ற வாறு திருத்தி எழுதியிருக்க வேண்டும். மற்றொரு காரணமும் படுகிறது. மரணம் நீங்கினால் ஜனனம். கல்யாணமும் ஜனனத்தைத்தானே கொண்டு வரப்போகிறது!
1. The reason would be 'a marriage should not be delayed because of a human beings death!'
ReplyDelete2. I agree to it
no comments :)
ReplyDelete