நாடோடிகள்- சமீபத்தில் நான் பார்த்த தமிழ் திரைப்படம். மையக்கரு இதுதான். காதலர்களை சேர்த்துவைக்கும் போது பட்ட கஷ்டத்திற்காக அவர்கள் பிரியும் போது கொதித்தெழும் நண்பர்களே நாடோடிகள்.
மேலோட்டமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் பார்க்கும் பொழுது நண்பர்களின் கோபம் சரியாக பட்டாலும், கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தால் அக்கோபம் அவசியமற்றது என்று புரியும். கால் உடைந்து, முகம் கிழிந்து, காது செவுடாகி சேர்த்து வைத்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக எந்த வகையிலும் மனம் ஒட்டாத இருவர் சேர்ந்து வாழவேண்டுமென்பது அபத்தம். பிறகு சசிகுமாரின் மாமாவிற்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்.
படத்தின் மற்றொரு எரிச்சல், மன்னிக்கவும், சசிகுமார் தான். மற்ற இரு நாடோடிகளுக்கும் வரும் அனாயசமான நடிப்பு சசிகுமாரிடம் missing. படத்தின் மிகப்பெரிய பலம் துணை நடிகர்கள். அனைவருக்கும் நடிப்பு மிக இயல்பாக வருகிறது. குறிப்பாக சசிகுமாரின் தங்கை, காதலி, அப்பா, அம்மா, மாமா ஆகியோர்.
தனித்தனி திரைத்துளிகளாக மின்னினாலும், மொத்தமாக பார்க்கும்பொழுது கதையின் இரண்டாம் பாகம் தேவையற்றதாகவே தோன்றுகிறது. முடிவும் முழுமையற்று இருப்பதால் பச்ச்..
particularly the above post text style resembles regular weeklies style. Pls try to write in your own style like other posts. Your other posts are really good. Keep Posting.
ReplyDeleteGood catch.. I suppose you are not talking about fonts.. Its about the style of writing.. May be theres a resemblance of weeklies.. Quite possible.. Will try to change..
ReplyDeletethx i am talking about fonts :-)
ReplyDelete