Monday, 17 August 2009

தமிழ் இனி மெல்லச் சாகும்..


தமிழ் இனி மெல்லச் சாகும் - பாரதியின் வார்த்தைகள். கண்கூடாக கண்டேன் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த பொழுது. மதுரை ரயில் நிலையத்தில் மாலை ஆறு முப்பது மணிக்கு, அரை மணி நேரம் தாமதமாக (வழக்கம் போல) நான் செல்ல வேண்டிய வண்டி வந்தது. என்னுடைய இடத்தில் சென்று அமர்ந்தேன்.
அடுத்த நிறுத்தத்தில் ஆண்,பெண் பேதமில்லா பதினைந்து மாணவர்கள் (நினைக்கிறேன்) ஏறினார்கள். உரையாடல் முழுவதும் ஆங்கிலத்தில் தான். வேற்று மொழி பேசுபவர்கள் என்று நினைதேன். சற்று நேரத்தில் ஒருவன் கேட்டான் "மச்சா டிக்கெட் எங்க டா? " (நமீதா தம்பியா இருப்பான் போல). மற்றவன் சொன்னான் " அந்த bag ல தான் மச்சா இருக்கு " (இவுனுமோ)
தமிழர்கள் என்று தெரிந்தது. பின் ஏன் ஆங்கிலத்தில் பேசிக்கொள்ள வேண்டும். ஒருவேளை தங்கள் ஆங்கில பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள பழகலாம். ஆனால் அவர்கள் ஆங்கிலத்தில் வளர இன்னும் எதுவும் மிச்சம் இல்லாதது போல் தெரிந்தது. பிறகு தான் தெரிந்தது அவர்களால் இரண்டு நிமிடங்களுக்கு மேல் தமிழ் பேச முடியாது. மேலும் அவர்களால் தமிழ் சுத்தமாக படிக்க முடியாது. அவர்களை பார்த்து மிகவும் பரிதாபப்பட்டேன். எப்படி முறையான கல்வி கிடைக்காத ஏழை சிறுவனை பார்த்து பரிதாபம் வருமோ அது போல். இவர்களும் அவர்களும் சரிசமம் தான்.
எப்படி:? - இருவருக்குமே சரிவிகித கல்வி கிடைக்கவில்லை. ஆங்கிலம் கற்க முடியாதது மட்டும் குறை அல்ல. தாய் மொழி கற்க முடியாததும் குறை தான். இதற்கு காரணமாக எனக்கு இரண்டு விஷயங்கள் படுகின்றன.
1. அடிப்படை தமிழ் கல்வி கிடைக்காதது.
2. பெற்றோர்கள் தமிழை அவசியம் என்று நினைக்காதது.
ஆங்கிலம் எவ்வளவு அவசியமோ அதே அளவு தமிழும் அவசியம் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழனாக இருந்து கொண்டு தமிழ் எழுத பேச தெரியாதது வெட்கக்கேடு.
கடைசியாக ஒரு பெண் சொன்னாள்
"Charles, Shut the f*** up and sleep"
அதை நான் வழி மொழிகிறேன்..

3 comments: