Sunday, 9 August 2009

சுயநலம்..

என் சக ஊழியர் ஒருவர் மற்றொரு சக ஊழியரை ஏசினார் "You're a Selfish goose" (அவர்களுக்கு தமிழ் தெரியாது).
எதற்காக?
முன்தினம் தன் வேலை முடிந்ததும் எப்பொழுதும் கூட செல்லும் இவரிடம் சொல்லாமல் சென்றதற்காக. அது சரியா? உண்மையில் அவர் ஒரு சுயநல வாத்தா? ( selfish goose!!).














சுயநலம் - நல்லதா? கெட்டதா?


It depends..


ஒருதின விளையாட்டிலோ, ஒலிம்பிக் பந்தயமோ இந்தியா மட்டும் எல்லா போட்டிகளிலும் வென்று விட வேண்டும் என்று பகல் கனவு காண்போர் எத்தனை பேர் (including me..)? அது நல்ல சுயநலமா? கெட்ட சுயநலமா?

கார்கில் போரோ, குழாயடி சண்டையோ நம்மவர்கள் ஜெயிக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக இருக்கும். அது சுயநலமா?

எல்லோருள்ளும் சுயநலம் குடி கொண்டிருக்கிறது. அது "Selfish goose" ஆக மாறும்பொழுது தான் பிரச்சனை.

மற்றவரை பாதிக்காத எந்த ஒரு ஆசையும் சுயநலம் அல்ல என்று நான் கருதுகிறேன்.

Vivek வசனம் போல் உங்கள் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருந்தால் மிக நல்லது..

No comments:

Post a Comment