Thursday, 13 August 2009

स्वदेस (ஸ்வதேஸ்)..

ஸ்வதேஸ் - நம்நாடு என்று பொருள் கொண்ட இந்த படத்தை இலவசமாக பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது (அட பதிவிறக்கம் (அதாவது download) பண்ண print தான் பா).


ஆனால் இரண்டு நாட்களாக பார்க்க வேண்டி இருந்தது (படம் கொஞ்சம் பெருசு). மூன்று மணி நேரம் பெரிய திருப்பங்கள் ( சடார்னு police ஆ மாறுவது, climax ல மூக்கில் இருந்து குருதி கொட்டுவது) இல்லாமல் , அதே சமயம் அலுப்பு தட்டாமல் கதையை நகர்த்த முடியுமா? முடியும் என்று நிரூபிக்கிறார் அஷுதோஷ் க்வாரிக்கர் (அவர் தான் டைரடக்கர்..) . ஆங் லகான் எடுத்தாரே அவரே தான் (அப்டி சொன்னா தானே நம்ம சிவகாசிக்கு புரியும்).

படம் நாசாவில் துவங்குகிறது. கதையின் நாயகன் மோகன் 'Global Precipitation Measurement' project இன் மூளையாக இருக்கிறார். தன் சிறுவயதில் தன்னை பார்த்துக்கொண்ட 'காவேரியம்மா' வை வயதான காலத்தில் கவனிக்காமல் விட்டதற்காக வருந்தி இந்தியா செல்கிறார். அதை தொடர்ந்து அவர் பார்க்கும் இந்தியாவும், அதன் நிலைமையும் காட்சிகளாக விரிகின்றன.

இந்தியாவில் இன்னமும் இத்தகைய கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று காட்டும் போது பாராட்டுகளை அள்ளுகிறார். சும்மா எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஒரே காட்சியில் நாட்டை திருத்தவில்லை மோகன். அவன் வந்த நோக்கம் - தன் காவேரியம்மவை தன்னுடன் அழைத்து செல்ல. ஆனால் அங்கு அவனுக்கு கிடைக்கும் அனுபவம், அவன் மனதை மாற்றுகிறது.

நாயகியின் பாத்திரமும் நாயகனுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் படைக்கப்பட்டிருக்கிறது. காவேரியம்மவை மோகன் கூட்டிக்கொண்டு சென்று விடக்கூடாதென்று தவறாக வழி சொல்லும் இடம் சுவாரசியமானது.

கிராமத்தியே, ஒரே காட்சியில் சொர்க்க பூமியாக மாற்றும் சினமாத்தனம் இல்லாமல், மின்சாரம் உற்பத்தி செய்து, உதாரணமாக இருக்கும் போது தனித்து தெரிகிறார் இயக்குனர்.

மொத்தத்தில் இயல்பும் தர்க்கமும் மீறாத 'சிவாஜி - The Real Boss'..










1 comment:

  1. swadesh is really a fantastic movie. i watched it 2 years back and that movie is still in my best list of movies. Balaji's thirai paarvai for this movie is nice :)

    ReplyDelete