Wednesday 10 October, 2012

ஆஸ்பத்திரி அவஸ்தைகள்..

6 comments:













வயிற்றில் வலியேதுமின்றி, ஆனால் விவரித்துக்கூறமுடியாதபடி  ஒரு 'uncomfort' பல நாட்களாக படுத்திக்கொண்டிருந்தது. ஒரு மாதம் விடுமுறை எடுத்து அல்செருக்கென மருந்துகள் எடுத்துக்கொண்டும், ஒன்னும் பேரவி ல்லை. கடைசி முடிவாக ஓர் 'Endoscopy' எடுத்து விடலாம் என விஜயா ஆஸ்பத்திரிக்குச்சென்றேன். அதில் ஆரம்பமாயின அவஸ்தைகள்.

முதலில் 'Endoscopy' எடுக்க வெறும் வயிற்றில் காலை எட்டு மணிக்கு சென்று பத்து மணி வரை காத்திருந்தோம். தண்ணீரை கொஞ்சம் உறிஞ்சுக்கொள்ளலாம். Endoscopy அறைக்குள் சென்றதும் இடது பக்கம் ஒருக்களித்து படுக்க சொன்னார்கள். வாய்க்குள் ஒரு கொழ கொழ மருந்தை விட்டார்கள். கலையிலிருந்து சாப்பிடாமல் இருந்தது வயிற்றை பிரட்டியது. பல்களுக்கு இடையில் ஒரு இடைச்செருகலை செருகி, வாயை மூட முடியாதபடி செய்து, தொண்டைக்குள் மின்சார விளக்குடன் கூடிய ஒரு குழாயை செலுத்தி வயிறு வரை அனுப்பினார்கள். ஒரு நிமிடமே அவர்கள் செய்த இந்த செயல், அகிலத்தையே வாயிலிருந்து வெளிக்கொண்டுவந்திட்டிருந்தது. அதோடு முடியவில்லை அவஸ்தை. Endoscopy மூலமாக பிரச்னை இருப்பதை மட்டுமே கண்டுபிடிக்க முடியுமெனவும், என்ன பிரச்னை என்பதை சரியாக கண்டுபிடிக்க இன்னும் சில பரிசோதனைகள் செய்யவேண்டுமெனவும், அதற்கு  மருத்துவமனையில் ஒரு நாள் தங்குமாறும் பணித்தனர். அவ்வண்ணமே நானும் பணிந்து அன்று மாலையே அனுமதிக்கப்பட்டேன்.

அன்றிரவே 'பொது பரிசோதனைகள்' என உடம்பிலுள்ள அனைத்து பாகங்கள், திசுக்கள், இரத்த நாளங்கள், சுரக்கும் திரவங்கள் என அனைத்தையும் உறிஞ்சி பரிசோதனை செய்தனர். மறுநாள் நான் முதல் பரிசோதனைக்கு போகும் முன்னர் பயிற்சி மருத்துவர் ஒருவர் வந்து எனக்கு நலம் விசாரித்து விட்டு, எனக்கு மஞ்சள்காமாலை இருக்கின்றதென சிரித்தவாறு சொன்னார். அதன்பிறகு, ஒரு நாள் பல நாட்களாகவும், ஒரு C.T. scan, C.T. scan, Barium meal X-ray test, Colonoscopy என நீண்டது. இப்பரிசோதனைகளில், சிறுகுடலில் வீக்கமும், பெருங்குடலில் சிறு சிறு புண்களும் இருப்பது தெரிந்தது.

முன்பெல்லாம் மருந்துகளையும், ஊசிகளையும் கண்டு பயந்திருப்பேன். இம்முறை பரிசோதனைகளுக்கு தயார்படுத்திக்கொல்லுதல் (எழுத்துப்பிழை அல்ல!) என்பதில் மிகவும் வெறுப்படைந்து விட்டேன். வயிற்றில் ஒரு சோதனை செய்ய வேண்டுமானால், காலை நான்கு மணிக்கு எழுப்பி லிம்காவில் ஒரு மருந்தை கலந்து குடிக்க சொன்னார்கள். வெறும் வயிற்றில் சோடா. அதுவே வயிற்றுக்குள் ஒரு உலக யுத்தம் நடப்பது போன்று இருக்கும். அது வயிற்றை சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று உடம்பில் உள்ள நீர்ச்ச்சத்தை எல்லாம் உறிஞ்சி எடுத்து விடும். அதற்கு பிறகு எப்போழுதடா பரிசோதனை செய்து முடிப்பார்கள் என்றாகி விடும். இந்த வேதனையில், ஒரு பரிசோதனைக்கு சென்று, இன்னும் வயிறு சுத்தமாகவில்லை, நாளைக்கு வாருங்கள் என்று வேறு கூறி விட்டார்கள். அடுத்தநாளும் அதே கொல்லுதல். போதுமடா சாமி!

எனக்கான வேதனைகள் இவையெனில், என் குடும்பத்தினருக்கு வேறு விதமாக. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பரிசோதனை, அதற்கான முடிவு, மற்றொரு பரிசோதனை. என்ன பிரச்சினை என்பதை எண்ணி தினமும் பதில் கிடைக்காமல் போக, என்னை விட நொந்து போய் இருந்தனர். பத்து நாட்கள் கழித்து முடிவாக, பெருங்குடலில் ஒரு சிறிய கட்டி எனவும், சோதித்து பார்க்கும் பொழுதே அகற்றி விட்டதாகவும் கூறி அனைத்து பிரார்த்தனைகளுக்கும் பலன் குடுத்தார் மருத்துவர்.

முதலில் பரிசோதனைகளை கண்டு வெறுப்பும், குழப்பமும், சந்தேகமும் வந்தாலும், முடிவாக பார்க்கும்பொழுது, உடலை ஒரு கணிதக்குழப்பம் போல் எண்ணி, படிப்படியாக முடிச்சுகளை அவிழ்த்து, இறுதியாக ஆதார பிரச்சினையை கண்டறிந்த சூட்சுமும், முறையும் புரிந்தன. ஒவ்வொரு பிரச்சனையயும்  இவ்வளவு செலவழித்து கண்டுபிடிக்க அனைவரிடமும் காப்பீடும், அல்லது ரொக்கப்பணமும் இருக்கமா என நினைக்கும்போழுது  நம் நாடு மருத்துவத்திற்கான முக்கியத்துவத்தை எவ்வளவு தூரம் அலட்சியபடுத்தியிருக்கிறது என புலப்படுகிறது. மருத்துவமனைகள் பணம் பிடுங்கவில்லை, மாறாக அரசாங்கங்கள் நமக்கான உரிமையை சுரண்டி, மருத்துவமனைகள் மீது வெறுப்பையும், காழ்ப்புணர்ச்சியையும் ஏற்படுத்திவிட்டு , அவைகள் லாவகமாக தப்பித்துக்கொள்கின்றன. நமக்கான சுய அனுபவத்தில் தான்  இது புலப்படுகிறது. அதற்கு முன் விழித்துக்கொள்ளு ங்கள். குறைந்த பட்சம் ஒரு நல்ல காப்பீட்டில் சேர்ந்து கொள்ளுங்கள். அதுவே முதற்படி. வாழ்க வளமுடன். 

Wednesday 21 March, 2012

புணர்ச்சி விதி..

No comments:

'புணர்ச்சி விதி' எங்களது இரண்டாவது முயற்சி. இம்முறை உயர் தொழில்நுட்பமான HD யில் படமாக்க முடிவு செய்து ஓரளவு பூர்த்தியும் செய்து விட்டோம். 'புணர்ச்சி விதி'யை பற்றி எழுத வேண்டியதன் அவசியமாக இரண்டு காரணங்கள்.


1 சில கேள்விகளுக்கான விளக்கங்கள்
2 எவரும் கவனிக்காத சில விஷயங்களை எடுத்துக்காட்ட வேண்டிய அவல நிலை

'அடையாறு கொலை வழக்கு' என்ற குறும்படம் ஷூட்டிங் தொடங்கி முதல் நாள் படப்பிடிப்புடன் லேப்டாப்பில் உறங்குகிறது. அதை தொடர முடியாமல் 'புணர்ச்சி விதி' ஆரம்பித்ததில் நானே நடிக்க வேண்டிய துர்பாக்கியசாலி ஆனேன்.

இப்படத்தை ஆரம்பித்த பொழுதே எங்களுக்குள்ள சட்டசிக்கலான 'பெண் கதாபாத்திரம்' எனும் வஸ்து இல்லாத குறையை, நிறையாக மாற்ற, 'பெண்ணில்லாமல் ஒரு கள்ளக்காதல்' என முடிவு செய்தோம். இயக்குனர் பாலா (அவரில்லை) என்கிற பாலமுருகன் ஷேர் ஆட்டோ என்று பேப்பரில் எழுதி விட்டு அதை நிஜத்தில் பிடிக்க பட்ட அரும்பாடு, குறும்பட உலகத்தில் இனி யாரும் படக்கூடாது. வெற்றிகரமாக ஒரு நாள் முழுக்க, டிரைவரின் முதுகெலும்பு முறிய, சின்னமலையை சுற்றி, சுற்றி ஒரு வழியாக படப்பிடிப்பை முடித்தோம். ஒரு இரவு மூன்று மணி வரை யாதவன் என்கிற அப்பாவி ஜீவன் எங்களுக்காக  Facebook ல் ஒரு பக்கத்தை தயார் செய்து கொடுத்தது.

எல்லாம் முடிந்து படத்தை வெளியிட்டு எதிர்பார்த்தபடியே, 'அதெப்படி டக்குன்னு திருந்துவான்? நல்ல கதையா இருக்கே' என்று பின்னூட்டுகள் குவிந்தன. இதே கேள்வியை பாலமுருகனிடம் கேட்ட பொழுது அவர் பதில், 'அவன் permenant ஆ திருந்துரானா தெரியாது. அன்னைக்கு அவனுக்கு தப்புன்னு படுது போய்டறான்.' எனக்கு அது convincing ஆக இருந்தது. படத்தில் கடைசிவரை கவனிக்காமல் விடப்பட்ட இரண்டு  விஷயங்கள்,

1. பாடல்கள் தந்த hint. ஒவ்வொரு பாடலும் கொஞ்சம் யோசித்த பிறகே வைக்கப்பட்டது. ஏனா தானோ என்று வைக்கப்படவில்லை. கார்த்திக் ஆட்டோவிலிருந்து இறங்கும் பொழுது

'மண்ணுக்கும் பொன்னுக்கும் அடிதடி தான்
 மண்ணுக்கு போகிற உலகத்திலே . ' 
பசிக்குது பசிக்குது தினம் தினம் தான்
தின்னா பசி அது தீர்ந்திடுதா?'

2. படத்தின் ஆரம்பத்தில் திரையிடப்பட்ட செய்யுள்.

'புள்ளி ஈற்று முன் உயிர் தனித்து இயலாது
மெய்யோடும் சிவணும் அவ்வியல்   கெடுத்தே'

இந்த செய்யுளில் முழுப்படத்தின் கதையையும் சொல்லிவிட நினைத்தோம். அதன் அர்த்தம் பின்வருமாறு. ஏற்கனவே ஒரு உயிருடன் உள்ள மெய்யுடன் (உடல்) மற்றொரு தனி உயிர் தனித்து இயலாது (சேராது) . அப்படி சேர்ந்தால் அது அந்த உயிர்மெய்யின் இயல்பை கெடுத்தே அமையும்.




நாங்கள் எடுத்ததிலேயே அதிக பொருட்செலவில் உருவான படம் (1000
ரூபாயை தாண்டிவிட்டது செலவு!). படம் எடுத்து, பார்வைக்கு விட்டு, இணையத்தில் நடந்த ஒரு போட்டியில் ஆதரவில்லாமல் விக்கித்தவித்து, குறும்பட விழா ஒன்றில் திரையிடப்பட்டு என பல்வேறு நிலைகளை தாண்டி அடுத்த குறும்பட விழாவிற்கு சுருக்கப்பட்டு சென்றிருக்கிறது. திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டாலே மகிழ்ச்சி!

Tuesday 28 February, 2012

காதலில் சொதப்புவது எப்படி..

4 comments:
காதலில் சொதப்புவது எப்படி.. - வெகுவாக நான் எதிர்பார்த்த படம். கிட்ட தட்ட பாலாஜி (என் பேராக்கும்)  ஜெயிக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினேன். முதல் நாள் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். முடியாமல் அடுத்த வார இறுதியில் ஆர்வத்துடன் தியேட்டரில் சென்று அமர்ந்தேன். டிக்கெட் சுலபமாக கிடைத்துவிட்டது. எந்திரனே இரண்டாம் வாரம் காற்றாடியது. சமீப காலங்களில் தியேட்டர் நிரம்பி வழிந்தது 'கோ' விற்கு மட்டும். இதையல்லாம் மனதிலிருந்து அகற்றி விட்டு நிமிர்ந்தேன் படம் ஆரம்பித்தது. முதல் காட்சி குறும்படத்தில் வந்த அதே 'நீ சொல்லு நீயே சொல்லு'. குறும்படத்தில் இன்னும் அழகாக கையாளப்பட்டிருந்ததாக தோன்றியது. சரி ஆரம்பம் தானே என்று படத்தை தொடர்ந்தேன்.

திரைக்கதையின் ஆதார விதியாக, 'மக்களைக்குழப்பாதீர்கள்' என்பதை சொல்வார்கள். இப்படம் அந்த இடத்தில் சறுக்குகிறது. தொட்டதுக்கெல்லாம் 'Flash back'. கதைக்குள் கதைக்குள் கதை. அடுத்த காட்சி எங்கே நடக்கிறது என்பதில் குழப்பம். தீர்க்க முடியாமல் தவிக்கிறார் பாலாஜி மோகன்.

படம் முழுக்க இதற்காகத்தான் இந்தக்காட்சி என விளக்கம் தரும் வசனங்கள் அலுப்படிக்கின்றன. குறும்படத்தில் இருந்த 'smartness' இல்லை. மக்கள் இயல்பாக இல்லை. வெகு சிலரே கவர்கிறார்கள். ஆண்கள் கடைக்குள் புகுந்து பெண்கள் உள்ளாடை பிரிவில் அசடு வழிகிறார் ராகவேந்தர். சொதப்பல். பாடல்கள் படத்தை நிறுத்துகின்றன (தூக்கி அல்ல). பாலாஜி (இயக்குனர் அல்லாத பாலாஜி) வரும் காட்சிகள், உச்ச் கொட்ட வைக்கின்றன.

கடைசி பதினைந்து நிமிடங்களில் படத்தை மீட்டெடுக்க நினைத்து பாதி ஜெயிக்கிறார். மீதிப்பாதி, மன்னிக்கவும் சொதப்பிவிட்டார் பாலாஜி (இது இயக்குனர் பாலாஜி).


Friday 10 February, 2012

Midnight in Paris..

1 comment:
Midnight in Paris.. - Have you ever thought, Why was I not alive when Michalangelo was here. How did Leanardo Davinci look like? I should have been there to read the fresh copy when Sujatha shared his thoughts through books! The protagonist of Midnight in Paris, Gil, feels the same way. He thinks nobody here is capable of proof reading his fiction other than Mr. Hemingway. For us it may not be possible, but Gil hits good luck. When he's lost his way when going to back the hotel he's staying, at midnight, a group of people arrive and take him to a party. Bingo! there is Mr. Flitzgerald and in turn he introduces Gil to Hemingway and Picasso! But when Gil meets Adriana, his mind travels away from art and goes into love. They both pass time, share valuable moments and suddenly travels a generation back as Gil came there! What happens then fills the climax.

What's magical  about the movie is not its basic story line but the in depth message it portrays. You wish to be in past and feels that would have been a golden time. What if your models in the past think the same way! So it's an endless series of concentric circles and never ends. Present is not only a compulsion but a pleasant gift. Enjoy it!