Sunday 31 July, 2011

"an" Issue..

5 comments:
"an" issue.. - ஆங்கில தலைப்பில் ஒரு தமிழ் வலைப்பூ. எப்பொழுதும் பலருக்கு 'a' எங்கே பயன்படுத்துவது, 'an' எங்கே பயன்படுத்துவது என்ற குழப்பம் இருக்கும். இருக்கிறது. எல்லா இடத்திற்கும் 'an' பயன்படுத்துபவர்களையும் பார்த்திருக்கிறேன். என் அக்கா மகள் 'a honest man' என எழுதியதற்கு அவளின் வகுப்பு ஆசிரியை தவறு எனக்கூறி 'an honest man" என திருத்தி இருக்கிறார். "ஏன் மிஸ் தப்பு" என கேட்டதிற்கு, விளக்கம் தராமல், "அது அப்படித்தான்" எனக்கூறி திருப்பி அனுப்பியிருக்கிறார். எனக்கும் "an honest man" சரி என்பது தெரிந்தாலும், ஒரு திட்ட வட்டமான வரைமுறை புலப்படவில்லை. யோசித்துக்கொண்டே இருந்த பொழுது, தமிழ் மூலம் தீர்வு கிடைத்தது. அது சரி என நினைக்கிறேன். தவறெனில், திருத்தவும். 'an' பயன்படுத்துவதற்கு வார்த்தையின் தொடக்கம் 'a e i o u' வாக இருந்தால் மட்டும் போதாது. அது ஏற்கனவே தெரியும். வார்த்தையின் ஒலியின் மூலம் தீர்மானிக்க வேண்டும். அப்பொழுது தான் எந்த ஒலிகளெல்லாம் இதில் அடங்கும் என்பதில் குழப்பம். தமிழில் அதற்கு இணையான 'ஓர்' எங்கே பயன்படுகிறது என யோசிக்க, கிடைத்தது தீர்வு. அனைத்து உயிரெழுத்துக்களுக்கு முன்னும் 'ஓர்' பயன்படுத்துவோம். அதையே ஆங்கிலத்திற்கும் பயன்படுத்துவோம். வார்த்தையின் ஆரம்ப ஒலி, 'அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ' எனில் 'an' பயன்படுத்துங்கள். 'a e i ou' வில் ஆரம்பிக்காத சில உதாரணங்கள். 'An MLA', 'an honest man'. 'a e i o u' வில் ஆரம்பிக்கும் 'an' பயன்படுத்தக்கூடாத உதாரணங்கள். 'a university', 'a user', இதற்கு ஒரே ஒரு அடிப்படை தேவை, தமிழ், உயிர் மெய் எழுத்துக்கள் தெரிய வேண்டும். பல குழந்தைகளுக்கு தெரியவில்லை!

Saturday 23 July, 2011

தெய்வத்திருமகள்..

No comments:
தெய்வத்திருமகள்.. -  "I am sam" இன் சாம் கிருஷ்ணாவாக தமிழ்ப்படுத்தப்பட்டு, படம் தெய்வத்திருமகனாக இருந்து தெய்வத்திருமகளாக திரைக்கு வந்திருக்கிறது. Sean penn இன் உடல்மொழி, நடை உடை, பாவனை ஏன் சிகையலங்காரம் முதற்கொண்டு தமிழில் பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள். ஆங்கிலத்தில் நேர்க்கோட்டில் பயணிக்கும் கதை, இங்கு கொஞ்சம் முன் பின் மாறி பயணிக்கிறது. முதல் காட்சியில் கிருஷ்ணா நடுரோட்டில் இறக்கி விடப்பட்டு "நிலா நிலா" என கதறி மயங்குவதிலிருந்து தொடங்குகிறது படம். 

தன பெண்ணின் வாழ்க்கையை கணவனாக கெடுத்த மூளை வளர்ச்சி குன்றிய கிருஷ்ணா, தன பேத்தியின் வாழ்க்கையும் நாசமாக்கிவிடக்கூடாதென நினைத்து, நிலாவை கிருஷ்ணாவிடமிருந்து பிரிக்க நினைக்கிறார் அவரின் பணக்கார மாமனார். அதை எதிர்த்து கிருஷ்ணா தரப்பில் வழக்கு பதிவு செய்கிறார் அனுஷ்கா. வழக்கின் முடிவே படத்தின் முடிவு.

விக்ரமும், மகள் நிலாவும் வரும் காட்சிகளும், யாரை யார் வளர்க்கிறார்கள் என்ற அழகான சந்தேகம் ஏற்படும் கனங்களும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. 
குழந்தை கேட்க்கும் அழகான கேள்விகளும், மனநலம் குன்றிய அப்பாவின் பதில்களும் கைதட்டல் பெறுகின்றன. 

இவர்களை தவிர திரைக்கதை என பார்க்கும் பொழுது, விஜய் கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறார். நிலா எங்கே என கேட்கும் கிருஷ்ணாவிடம், மேலே இருக்கிறாள் என அனுஷ்கா கூறும் காட்சி, எந்த வகையிலும் படத்திற்கு சம்பந்தம் உள்ளது போல் தெரியவில்லை. ஆங்கிலத்தில் அழகாக எடுக்கப்பட்ட வழக்குரை மன்ற காட்சிகள், தமிழில், விகரமன் படத்தில் வருவது போல் ஒரே பாடலில் சிக்கி தவிக்கின்றன. 

படத்தின் இடைவெளியில், என்னை கடந்து சென்றவர் சொன்னார், "பர்ஸ்ட் half   காமெடி செகண்ட் half செண்டிமெண்ட் மாப்ள". இவர்களையும் சமாளிக்க வேண்டுமெனில், "I am sam" ஐ இப்படி தான் எடுக்க முடியும் தமிழில்!

Thursday 21 July, 2011

திரைக்கதை எழுதுவது எப்படி..

2 comments:
திரைக்கதை எழுதுவது எப்படி.. - சத்தியமாக நன் சொல்லப்போவதில்லை. அமரர் சுஜாதாவின் பன்முகத்தில் சினிமாவைப்பற்றிய அவரின் புரிதலையும், எதையும் ஒரு நேர்த்தியுடனும், நவீனத்தனத்துடனும் அணுகும் அவரது லாவகத்தையும் எடுத்துரைக்கும் மற்றுமொறு படைப்பு. அதை படித்த பின் எனக்கு ஏற்பட்ட வியப்பை இங்கு பகிர்ந்து கொள்ள போகிறேன். 

பல நாட்களாக இணையம் இணக்கமாகததால் படித்த மறுநொடியே தோன்றிய எண்ணம் இப்பொழுது தான் நனவாகிறது. திரைக்கதை என்பதை நம் இயக்குனர்கள் (இங்கேது தனியாக திரைக்கதையாளர்கள்!) எவ்வளவு தூரம் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள் என காட்டுகிறார். திரைக்கதை என்பது எவ்வளவு சுருக்கமாக, நுணுக்கமாக இருக்க வேண்டும் என்பதை விவரிக்கிறார்.

வசனம் மட்டும் திரைக்கதை அல்ல. அதை வெளிப்படுத்தும் விதம், நேரம், காலம், இடம் அனைத்தையும் விவரிப்பதே திரைக்கதை என்பதையும், காமிரா கோணத்தையும், நடிகர்களின் ஆடை வடிவமைப்பும் திரைக்கதையாளனின் வேலை இல்லை என்பதினையும் தெளிவு படுத்துகிறார். 

சுருக்கமாக சொல்ல, நூற்றிருபது பக்கங்கள் எழுதுங்கள், முப்பது பக்கங்கள் முன் கதை, அடுத்த அறுபது பக்கங்கள் அதன் விளைவுகள், கடைசி முப்பது பக்கங்களில் முடிவை நோக்கிய பயணம். அனைத்து இயக்குனர்களும் இவரை பின்பற்றி விட்டால் தோல்வியே இருக்காது என சொல்லமுடியாவிட்டாலும், தோல்விகள் குறையும். நான்  பின்பற்ற போகிறேன். :)