Saturday 4 May, 2013

சூது கவ்வும்..

No comments:
இதுவரை உலகத்திலேயே வராத கதை இல்லை. அனால் இது போன்ற கதைகளின் அட்சரப்பிரதியும் இல்லை. இயக்குனர் நலன், தனக்கே உரித்தான, எளிதில் கையாளக்கூடிய நகைச்சுவையை ஆதாரமாகக்கொண்டு ஒரு சாகசக்கதையை சுவாரஸ்யக்கதை ஆக்கி இருக்கிறார்.

மூன்று வேலை இழந்த/இல்லாத இளைஞர்கள், ஒரு கோடு போட்டு கடத்தல் செய்யும் மத்திம வயதுக்காரர். இவர்கள் நால்வரும் சந்தர்ப்பவசமாக இணைவதும், வசமாக பிரச்னையில் மாட்டிக்கொள்வதும் படத்தின் ஒன் லைன். விஜய் சேதுபதிக்கு, 40 வயது கதாப்பாத்திரம் நன்றாகவே பொருந்துகிறது. படத்தில் தோன்றும் அனைவரும் அவரவர் வேலைகளை செவ்வனே செய்வதால், எந்த மிகையும் இல்லாமல் கதை தர்க்க ரீதியாக தன்னைத்தானே சரி செய்து கொள்கிறது. அருமை நாயகமாக வரும், பல குறும்படங்களின் கதாநாயகனின், முகமும், உடல் மொழியும், கல்லூளிமங்கன் என்ற வார்த்தைக்கு கச்சிதமாக பொருந்துவதால் அந்த கதாப்பாத்திரமும் சுலபமாக கதியில் தன்னை இணைத்துக்கொள்கிறது. 

எதைச்சொன்னால் ரசிப்பார்கள், எதைச்சொன்னால் 'மொக்கை' என்பார்கள் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருப்பதே இயக்குனரின் பலம். தமிழ் சினிமாவின் வழக்கமான காட்சிகள் எதையும் வைக்காமல், அப்படியே வைத்தாலும் அதன் இறுதியில் ஒரு திருப்பத்தை வைத்து கைதட்டல்களை அள்ளுகிறார்.

திரைக்கதை என்பதன் சூட்சுமத்தை புரிந்து கொண்டிருந்தால் இரண்டாம் பாதி அலுப்பாக இருந்திருக்காது. நகைச்சுவை என்ற கேடயத்தை பயன்படுத்தினாலும், இரண்டாம் பாதி கொஞ்சம் இளிக்கவே செய்கிறது.

வித்தியாசமான பாத்திரப்படைப்பும், காட்சியமைப்பும், அதை ரசிகர்கள் தர்க்கரீதியாக யோசிக்க இடமும், நேரமும் தராமல் எடுத்தல் வெற்றி நிச்சயம் என நிரூபித்திருக்கிறார், நலன்.வாழ்த்துகள்..