Wednesday 21 March, 2012

புணர்ச்சி விதி..

No comments:

'புணர்ச்சி விதி' எங்களது இரண்டாவது முயற்சி. இம்முறை உயர் தொழில்நுட்பமான HD யில் படமாக்க முடிவு செய்து ஓரளவு பூர்த்தியும் செய்து விட்டோம். 'புணர்ச்சி விதி'யை பற்றி எழுத வேண்டியதன் அவசியமாக இரண்டு காரணங்கள்.


1 சில கேள்விகளுக்கான விளக்கங்கள்
2 எவரும் கவனிக்காத சில விஷயங்களை எடுத்துக்காட்ட வேண்டிய அவல நிலை

'அடையாறு கொலை வழக்கு' என்ற குறும்படம் ஷூட்டிங் தொடங்கி முதல் நாள் படப்பிடிப்புடன் லேப்டாப்பில் உறங்குகிறது. அதை தொடர முடியாமல் 'புணர்ச்சி விதி' ஆரம்பித்ததில் நானே நடிக்க வேண்டிய துர்பாக்கியசாலி ஆனேன்.

இப்படத்தை ஆரம்பித்த பொழுதே எங்களுக்குள்ள சட்டசிக்கலான 'பெண் கதாபாத்திரம்' எனும் வஸ்து இல்லாத குறையை, நிறையாக மாற்ற, 'பெண்ணில்லாமல் ஒரு கள்ளக்காதல்' என முடிவு செய்தோம். இயக்குனர் பாலா (அவரில்லை) என்கிற பாலமுருகன் ஷேர் ஆட்டோ என்று பேப்பரில் எழுதி விட்டு அதை நிஜத்தில் பிடிக்க பட்ட அரும்பாடு, குறும்பட உலகத்தில் இனி யாரும் படக்கூடாது. வெற்றிகரமாக ஒரு நாள் முழுக்க, டிரைவரின் முதுகெலும்பு முறிய, சின்னமலையை சுற்றி, சுற்றி ஒரு வழியாக படப்பிடிப்பை முடித்தோம். ஒரு இரவு மூன்று மணி வரை யாதவன் என்கிற அப்பாவி ஜீவன் எங்களுக்காக  Facebook ல் ஒரு பக்கத்தை தயார் செய்து கொடுத்தது.

எல்லாம் முடிந்து படத்தை வெளியிட்டு எதிர்பார்த்தபடியே, 'அதெப்படி டக்குன்னு திருந்துவான்? நல்ல கதையா இருக்கே' என்று பின்னூட்டுகள் குவிந்தன. இதே கேள்வியை பாலமுருகனிடம் கேட்ட பொழுது அவர் பதில், 'அவன் permenant ஆ திருந்துரானா தெரியாது. அன்னைக்கு அவனுக்கு தப்புன்னு படுது போய்டறான்.' எனக்கு அது convincing ஆக இருந்தது. படத்தில் கடைசிவரை கவனிக்காமல் விடப்பட்ட இரண்டு  விஷயங்கள்,

1. பாடல்கள் தந்த hint. ஒவ்வொரு பாடலும் கொஞ்சம் யோசித்த பிறகே வைக்கப்பட்டது. ஏனா தானோ என்று வைக்கப்படவில்லை. கார்த்திக் ஆட்டோவிலிருந்து இறங்கும் பொழுது

'மண்ணுக்கும் பொன்னுக்கும் அடிதடி தான்
 மண்ணுக்கு போகிற உலகத்திலே . ' 
பசிக்குது பசிக்குது தினம் தினம் தான்
தின்னா பசி அது தீர்ந்திடுதா?'

2. படத்தின் ஆரம்பத்தில் திரையிடப்பட்ட செய்யுள்.

'புள்ளி ஈற்று முன் உயிர் தனித்து இயலாது
மெய்யோடும் சிவணும் அவ்வியல்   கெடுத்தே'

இந்த செய்யுளில் முழுப்படத்தின் கதையையும் சொல்லிவிட நினைத்தோம். அதன் அர்த்தம் பின்வருமாறு. ஏற்கனவே ஒரு உயிருடன் உள்ள மெய்யுடன் (உடல்) மற்றொரு தனி உயிர் தனித்து இயலாது (சேராது) . அப்படி சேர்ந்தால் அது அந்த உயிர்மெய்யின் இயல்பை கெடுத்தே அமையும்.




நாங்கள் எடுத்ததிலேயே அதிக பொருட்செலவில் உருவான படம் (1000
ரூபாயை தாண்டிவிட்டது செலவு!). படம் எடுத்து, பார்வைக்கு விட்டு, இணையத்தில் நடந்த ஒரு போட்டியில் ஆதரவில்லாமல் விக்கித்தவித்து, குறும்பட விழா ஒன்றில் திரையிடப்பட்டு என பல்வேறு நிலைகளை தாண்டி அடுத்த குறும்பட விழாவிற்கு சுருக்கப்பட்டு சென்றிருக்கிறது. திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டாலே மகிழ்ச்சி!