Monday 11 October, 2010

கடவுள் உள்ளம்

கடவுள் உள்ளம்.. இணைக்கப்பட்டுள்ள புகைப்படம் bhookh.com எனப்படும் இணைய தளத்தின் வலைப்பக்கத்தில் உள்ளது. ஒவ்வொரு முறை நீங்கள் அதில் உள்ள "Give free food" என்ற பொத்தானை அழுத்தும் போதும் ஒரு குழந்தைக்கு உணவு கிடைக்கிறது. இதை எனக்கு அறிமுகப்படுத்தியவர் என் அலுவலகத்தில் முந்தைய project ல் என்னை வழி  நடத்தியவர். மிக அற்புதமான வாய்ப்பு. தினமும் உதவும் வாய்ப்பு. உணவு மட்டுமே போதுமா? இலவசமாக நம்மால் இது முடிந்தால், நம் சொந்த பணத்தில் ஏதேனும் பூர்த்தி செய்ய முடியுமா?

என் அண்ணன் நேற்று ஒரு ஆதரவற்றோர் (அனாதை என்பதை விட இது உசித்தமாக பட்டது) இல்லத்திற்கு சென்று அவர்கள் வேண்டும் என்று கேட்டதை வாங்கி தந்து விட்டு வந்திருக்கிறார். அவர்கள் அவருக்காக கடவுளை பிரார்த்தித்த பொழுது மிகவும் வேதனையாக இருந்தது என்றார். மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் இவர்களை இறைவன் அந்த மற்றவர்களை போல் வைக்கவில்லையே. அவர்களுக்கு உணவு பஞ்சமில்லை போலும். என் அண்ணனிடம் Fan, soap போன்ற இரண்டாவது வரிசை அத்தியாவசிய பொருட்களாக கேட்டிருக்கிறார்கள். நானும் ஒரு மாதம் முன்பு வெறும் பணமாக இருநூறு ரூபாய்கள் குடுத்தேன். போய் சேர்ந்திருக்கும். இருப்பினும் அவர்களுக்கு தேவையானதை பணத்தை விட பொருளாக குடுப்பது மேல் என படுகிறது. அது தோன்றும் அனைவருக்குமே கடவுள் உள்ளங்களே..

http://www.bhookh.com/ - இதை உங்கள் Homepage ஆக மாற்றி கொள்ளுங்கள்..

No comments:

Post a Comment