Thursday 8 October, 2009

ஈரம்..



ஈரம் - சில வாரங்களுக்கு முன்பு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம். இரு வாரங்களாக என் அண்ணன் செல்ல வேண்டுமென பிரயத்தனப்பட்டு, சென்ற வாரம் தரிசனம் கிட்டியது. இருவரும் சென்னை சத்யம் திரையரரங்கிற்கு செல்ல மதியம் அனுமதிச்சீட்டு வாங்கிவிட்டோம். மதியம் மூன்று இருபதிற்கு படம் தொடங்கியது.
திகில் படங்களுக்கே உண்டான டாப் ஆங்கிள் ஷாட்டுடன் பூதாகரமாக ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் கதவை திறக்கும் காட்சி. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில், ஒரு பெண் மர்மமான முறையில் மாண்டு கிடக்கிறாள். அங்கு விசாரிக்க வரும் காவல் துறை அதிகாரி அவளின் முன்னாள் காதலன். அவளின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதை அந்த தீர்க்கதரிசி உணர்ந்து நம்மையும் உணரவைக்கும் இரண்டரை மணி நேர முயற்சி தான் "ஈரம்".
இதில் இயல்பாக எழும் கேள்வி படத்தின் பெயர் ஏன் "ஈரம்"? நெஞ்சில் ஈரம் இல்லாமல் பெண்ணின் மரணத்திற்கு காரணமானவர்களை, ஈரத்தாலேயே கொல்லும் பெண்ணின் கதை என்பதால் இந்த கவிதைத்துவமான பெயர்.
"கொலையும் செய்வாள் பத்தினி" என்ற மொழி இயக்குனரின் மனதில் ஆழ பதிந்ததால் ஏற்பட்ட விபரீதம் தான் ஈரம். அந்த பத்தினி தெய்வத்தின் பேய் கொலை செய்வதென்னவோ படம் பார்க்க வருபவர்களை.
வில்லனான பெண்ணின் கணவனுக்கு "இரண்டாம் கையான" எதுவும் பிடிக்காது என்பதற்காக, அதை அவரே படம் முழுக்க திரும்ப திரும்ப சொல்வது எரிச்சலை கிளப்புகிறது. கதாநாயகனின் குரல் அவரது தானா அல்லது "மொழி" ப்ரித்விராஜ் பேசியிருக்கிறாரா என்பது ஒன்று தான் படத்திலேயே புலப்படாத ஒரே மர்மமுடிச்சு.
படத்தின் ஒரே ஆறுதல் நந்தாவின் நடிப்பு. அப்பாவி கணவனாகவும், கொடூர கணவனாகவும் ஆச்சரியப்படுத்துகிறார். ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாராந்திர கூட்டத்திற்கு விசிட் அடிக்கும் சென்னை மண்டல காவல் துறை ஆணையர் , தன் மகள் குடிவரவேண்டிய வீட்டிற்கு வந்த ஒரே காரணத்திற்காக கதாநாயகியின் நடத்தையை அவதூறு பேசும் அண்டை வீட்டு மாமி போன்ற பாத்திரப்படைப்புகள் உயிர்ப்பில்லாமல் இருக்கின்றன.
இயக்குனர் ஷங்கரின் வித்தியாச முயற்சிகளில் விபரீதமாகிப்போன முதல் முயற்சி..

1 comment:

  1. Ya.. Bala, U r right..

    This is not a good movie or one to be appreciated.

    I too feel the same as being your anna mentioned in the review.

    I feel certain points / can be called quality concerns of the film:
    a) They didnot concern ABOUT holding your pulse beat as mandatory 4 a thriller / ghost movie
    b) nothing more seriously dealt on mounting pressure in the film
    c) Way of movement of movie is not enchanting. Probably, Even a normal director can outfit it
    d) Not expected from Shankar

    In this regard, I letter my appreciations to 13B - Yavarum nalum as one of my best movie watchd since I love Thriller Movies.

    Some of my movi experience in Thriller are,
    a) Dead Silence
    b) Prom Night
    c) Black Christmas
    d) Jeepers Creepers - 1 & 2
    e) Chain saw Massacre
    f) Messengers 1 (Dont watch 2)

    If you r a lover of Blood bleeding, watch the below:
    a) SAW - all Parts (JIGSAW Killer)
    b) RIGHT END WRONG TURN - 1, 2 & 3
    c) Friday the 13th Series
    d) HOSTEL - All Series

    All Flooded with blood..

    Ok. STopping it here.

    ReplyDelete