Sunday 7 March, 2010

Mechnocrats '08 - 5


ஒரு சிறிய, மன்னிக்கவும் கொஞ்சம் பெரிய இடை வெளிக்கு பிறகு எழுதுவதால், கடைசி பகுதியை பார்க்க விரும்புபவர்கள் கீழ் உள்ள இணைப்பை பார்க்கவும்..

ஏழு

"ஐயோ அப்பா.." அலறினாள் கிருத்திகா. 

"ஏன் கத்தறே? அவர் அரை மைலுக்கு அந்த பக்கம் இருக்காரு. நீ கத்தற கத்துல வந்துரப்போறாரு.." சரவணன். 

"மச்சான் இவ கூட நின்னா நம்மளையும் போலி போற்றுவாணுக.. வா அடுத்து மூணு அவரும் வொர்க் ஷாப் தான். அதாவது ஒழுங்கா அட்டன்ட் பண்ணுவோம்" சொன்னவராரே கிளம்பினான் கணேஷ். சரவணனும் பின் தொடர்ந்தான் அரை மனதாக!

வொர்க் ஷாப் சிகப்பு ரோஜாக்கள் கமல் வீடு போல் இருந்தது. உள்ளே நுழைந்ததும் அறுபத்தைந்து வயது மதிப்பு மிக்க ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். 

"நீங்கள்லாம் ஏ செக்ஷனா?" முதியவர் கேட்டார்.

மாணவர்கள் ஆமாம் என்பது போல் தலையாட்டினர். 

"சரி. ஐ ஆம் அமிர்தலிங்கம். இன்சார்ஜ் ஆப் திஸ் வொர்க் ஷாப். ஈவன் ஆப்டர் ரெடைர்மென்ட் திஸ் இன்ச்டிடுஷுன் நீட்ஸ் மீ." பெருமையாக சொன்னார் தாத்த சாரி அமிர்தலிங்கம். 

"சரி உங்க எல்லாரையும் நாலு குரூப்பா பிரிக்கரேன். ஒன் பை ஒன் ஆ பௌண்டரி, பிட்டிங், போர்ஜிங் அப்புறம் வெல்டிங் எல்லாம் டெமோ பாருங்க. அடுத்த கிளாஸ் ல இருந்து பிரக்டிகல் ஆ பண்ணலாம்." 

சரவணன் இருந்த பிரிவு முதலில் பௌண்டரி இருந்த அறைக்கு சென்றது. 

"என் பேரு வெங்கடேசன். நான் தான் இங்க இன்சார்ஜ்.  பௌண்டரி நா மோல்ட் எடுக்கிறது. இதுக்கு முன்னாடி அருணா பௌண்டரி ல வொர்க் பண்ணிட்டிருந்தேன். இந்த மெல்டட் அலுமினியத்த எடுத்து மோல்ட் ல ஊத்தினா மாடல் ரெடியாயிரும். ஆனா பார்த்து ஊதணும். ஒரு தரவ என் கால் ல பட்டு தோல் உறிஞ்சிருச்சு. "

வெங்கடேசன் பௌண்டரி உடன் தன சோகக்கதையும் சொல்லிக்கொண்டே சென்றார். அவரை பார்த்து பரிதாபப்படுவதா சிரிப்பதா என தெரியவில்லை. 

நான்கு பிரிவுகளையும் பார்த்து விட்டு மாணவர்கள் அமிர்தலிங்கத்திடம் வந்தனர். 

"எல்லாரும் அடுத்த வாரம் ஒரு ஆப்சர்வஷுன் நோட் கொண்டுவந்திருங்க. அது போதும். ரிகார்ட் அப்புறம் பார்த்துக்கலாம்."

மாணவர்கள் உணவு இடைவேளைக்கு கிளம்பினர். 
"டேய் இன்னைக்கு நைட்டு சீனியர் ஏதோ மேட்ச் பத்தி பேசனும்னான்களே என்ன நு தெரியுமா உனக்கு?"  சரவணன்.

"அது ஏதோ ஹாஸ்டலுக்கு உள்ளையாம். எப்டியும் பைனல் இயர் தான் ஜெயிப்பான்கலாம்." கணேஷ்.

"நாம நல்ல விளையாடினாலும?" கேட்டன் சரவணன். 

நக்கலாக தலையை ஆட்டி சிரித்தான் கணேஷ்.

எட்டு 

'அப்புடப்புடு.. அப்புடப்புடு.. ...' 

தெலுங்கில் ஓடிக்கொண்டிருந்த பாட்டை மொழி புரியாவிட்டாலும் ஜெனிலியா சகதியில் புரள்வதற்காக பார்த்துகொண்டிருந்தான் ஒரு சீனியர்.
'இலாகா.. இலாகா.இலாக.. .......' சரவணன் படியேற ஏற சத்தம் ம்மியானது.  

"டேய் பர்ஸ்ட் இயர் லாம் இங்க அசம்பில் ஆகுங்கடா" ஒரு வேட்டை வெளியை நோக்கி கை காண்பித்தான் ஒருவன். அனைவரும் மந்தை ஆடுகள் போல் அவ்விடத்தில் கூடினர். 

ஹாஸ்டல் ரெப்ரசண்டேடிவ் பேசினான். "டேய் மேட்ச் நடக்கபோறது உங்களுக்கெல்லாம் முன்னாடியே தெரிஞ்சிருக்கும். ஆளுக்கு அம்பது ரூவா கட்டி டீம் ல சேந்துக்கங்க. டீம் பேரு நாங்கதான் வைப்போம் என்ன! மச்சான் இந்த வாட்டி எந்த டீம் டா அ.கூ.ஆ. பா ?" அணி பெயர்களை நினைத்து சிரித்தான்  அவன்.

"அதென்ன டா அ.கூ.ஆ. பா?" சரவணன் வியந்தான்.

"என்ன எழவோ எவனுக்கு தெரியும்?" ஜார்ஜ் நொந்து கொண்டான். 

"அப்புறம் முக்கியமான விஷயம். நீங்க யாரும் ஜெயிக்க கூடாது. எப்டியும் விட மாட்டோம்." மறுபடி பலமாக சிரித்தான் ரெப்பு..
"அவ்ளோ தான் டா போலாம். நாளைக்கு ஒவ்வொரு ரூமுக்கு ஒருத்தன் காச கலக்ட் பண்ணி என்கிட்டே கொடுத்ருங்க.. இப்போ போலாம்"

நிம்மதி பெருமூச்சுடன் எழுந்த சரவணனை ஒரு குரல் திருப்பியது. 

"டேய் எங்க போற?" கண்ணம்மாவின் தம்பி கேட்டான்.

"ரூமுக்கு னேன்." பரிதாபமாக சொன்னான் சரவணன். 

"இப்பவே பொய் என்ன பண்ண போற?"

"நெறைய வரையனும் னேன். இ.டி. ல. "

"எனக்கும் தான் வரையனும். சரி ரூமுக்கு வா.. ரெண்டு சீட் தரேன் வரைஞ்சு காலைல குடுத்துரு என்ன?"

முழித்தான் சரவணன். "இன்னா டா ...!!" குரலை உயர்த்தினான் கண்ணம்மா தமையன். 

"சர்ணேன் குடுங்க". 

இரவு முழுவதும் கிட்ட தட்ட மூன்று மணி வரை அவனுடைய மற்றும் கண்ணம்மாவின் பாலைப்போன தம்பியினுடைய படங்களையும் போட்டு முடித்தான். காலை எட்டு முப்பதிற்கு வழக்கம் போல் எழுந்து, சிற்றுண்டி உண்ணாமல் கிளாசுக்கு சென்றான். முதல் இரண்டு மணி நேரமும் இஞ்சினியரிங் டிராயிங் எனப்படும் இ.டி. 

கண் சிவக்க ஹாலுக்கு சென்றவன் பக்கத்தில் கிருத்திகா. 

"நீ எங்க இங்க?" ஆச்சரியமாக கேட்டான் சரவணன்.

"இன்னைக்கு  வளனரசு வரலாம். அதனால ரெண்டு கிளாசையும் ஜவகரும் சிவகுமாருமே பார்த்துக்கறாங்க. எல்லாம் டிராயிங்கும் முடுச்சிட்டியா?" கிருத்திகா

"உம்ம்ம். ஒரு வழியா." என சீட்டை திறந்தான்.

"என்ன டிரயிங்க்லாம் வேற மாறி இருக்கு!" சந்தேகமாக கேட்டாள் கிருத்திகா.

திருப்பி பார்த்த சரவணனிற்கு அதிர்ச்சி. கொண்டு வந்திருந்தது கண்ணம்மா தம்பியுடைய ஷீட்டுகள்.

1 comment:

  1. கலக்கல் டா மச்சான் ... ப்ரின்சி வந்தத சப்பையா முடிச்சுட்டியே னு வருத்தப்பட்டேன் ... அப்புறம் மறுபடியும் சூடான மேட்டர்-அ எறக்கி அசத்திட்ட ... Good going !! :)

    ReplyDelete