Saturday 23 July, 2011

தெய்வத்திருமகள்..

தெய்வத்திருமகள்.. -  "I am sam" இன் சாம் கிருஷ்ணாவாக தமிழ்ப்படுத்தப்பட்டு, படம் தெய்வத்திருமகனாக இருந்து தெய்வத்திருமகளாக திரைக்கு வந்திருக்கிறது. Sean penn இன் உடல்மொழி, நடை உடை, பாவனை ஏன் சிகையலங்காரம் முதற்கொண்டு தமிழில் பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள். ஆங்கிலத்தில் நேர்க்கோட்டில் பயணிக்கும் கதை, இங்கு கொஞ்சம் முன் பின் மாறி பயணிக்கிறது. முதல் காட்சியில் கிருஷ்ணா நடுரோட்டில் இறக்கி விடப்பட்டு "நிலா நிலா" என கதறி மயங்குவதிலிருந்து தொடங்குகிறது படம். 

தன பெண்ணின் வாழ்க்கையை கணவனாக கெடுத்த மூளை வளர்ச்சி குன்றிய கிருஷ்ணா, தன பேத்தியின் வாழ்க்கையும் நாசமாக்கிவிடக்கூடாதென நினைத்து, நிலாவை கிருஷ்ணாவிடமிருந்து பிரிக்க நினைக்கிறார் அவரின் பணக்கார மாமனார். அதை எதிர்த்து கிருஷ்ணா தரப்பில் வழக்கு பதிவு செய்கிறார் அனுஷ்கா. வழக்கின் முடிவே படத்தின் முடிவு.

விக்ரமும், மகள் நிலாவும் வரும் காட்சிகளும், யாரை யார் வளர்க்கிறார்கள் என்ற அழகான சந்தேகம் ஏற்படும் கனங்களும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. 
குழந்தை கேட்க்கும் அழகான கேள்விகளும், மனநலம் குன்றிய அப்பாவின் பதில்களும் கைதட்டல் பெறுகின்றன. 

இவர்களை தவிர திரைக்கதை என பார்க்கும் பொழுது, விஜய் கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறார். நிலா எங்கே என கேட்கும் கிருஷ்ணாவிடம், மேலே இருக்கிறாள் என அனுஷ்கா கூறும் காட்சி, எந்த வகையிலும் படத்திற்கு சம்பந்தம் உள்ளது போல் தெரியவில்லை. ஆங்கிலத்தில் அழகாக எடுக்கப்பட்ட வழக்குரை மன்ற காட்சிகள், தமிழில், விகரமன் படத்தில் வருவது போல் ஒரே பாடலில் சிக்கி தவிக்கின்றன. 

படத்தின் இடைவெளியில், என்னை கடந்து சென்றவர் சொன்னார், "பர்ஸ்ட் half   காமெடி செகண்ட் half செண்டிமெண்ட் மாப்ள". இவர்களையும் சமாளிக்க வேண்டுமெனில், "I am sam" ஐ இப்படி தான் எடுக்க முடியும் தமிழில்!

No comments:

Post a Comment