Monday 10 August, 2009

GU.. LU.. TE


என் அறை நண்பர் ஒரு தெலுங்கர். வெகு நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம். ஏன் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்களை "கொல்டி" என்று அழைக்கிறார்கள் என்று. அவரிடமே கேட்டு விட்டேன். அது போல் ஏதும் வார்த்தை தெலுங்கில் உள்ளதா என்று. அவர் சிரித்துக்கொண்டே சொன்னார் "ಲೆದು". ஆனால் அவருக்கு ஏன் தான்
"கொல்டி" என்று அழைக்கப்படுகிறோம் (உண்மையில் கேலி) என்று தெரிந்திருந்தது. பின் வருமாறு கூறினார்.
ஆங்கிலத்தில் தெலுங்கை உச்சரிக்க சொன்னார். சொன்னேன். "TE.. LU.. GU..".
தலைகீழாக உச்சரிக்க சொன்னார். "GU.. LU.. TE". வேகமாக..
"GU.. LU.. TE"
"GU.. L.. TE"
"GULTI".
"Thats கொல்டி" சொன்னார் பாந்தமாக!! "கொல்டி" என்று சீண்டப்படும் அவர்களை விட நாம் எந்த வகையிலும் உயர்ந்தவர்கள் அல்ல. மாறாக அவர்கள் (மன்னிக்கவும்) நம்மை விட பல விஷயங்களில் முன்நிற்கிறார்கள். 100 தமிழர்களில் எத்தனை பேரால் ஹிந்தி புரிந்து கொள்ள முடியும்? அவர்களில் 60 சதவிகிதத்தினர் புரிந்து கொள்வர். இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் ( அதாம்பா IIT) அதிகம் இடம் பிடிப்பவர்கள் அவர்களே..
நான் இருக்கும் மென்பொருள் துறையில் அதிகம் (இப்போது தெலுங்கர்கள் மன்னிக்கவும்) "கொல்டி" களே.
கடைசியாக "பஞ்சதந்திரம்" வசனம் ஞாபகம் வந்தது..
"'TE LU GU'.. 'GU LU TE' .. தாண்டா 'கொல்டி"..

2 comments:

  1. gu lu te dan telugu nu epavo therium ... but avangala perumai paduthi sonnadhu pudhu vishayam. nice. you have to note one point. i could see lot of guluti's (i am sorry telugu people :) ) migrating to tamilnadu from their home state. most of my neighbours and classmates are telugu. i rarely find tamil people :)

    ReplyDelete
  2. Aana enakku ippo than theriyum.. neeku telugu thelusa? maatladam osthuntha?

    ReplyDelete