Monday 21 December, 2009

சி(ரி)றப்பு தரிசனம்..

சி(ரி)றப்பு தரிசனம்.. -  சென்ற வியாழக்கிழமை (Dec 17, 2009) என் பெரியப்பாவினுடைய அறுபதாவது பிறந்த நாள். சஷ்டியப்த பூர்த்தியாக கோயம்பத்தூரில் கொண்டாடினோம். வார இறுதியாக வந்ததால் வெள்ளிக்கிழமையும் விடுமுறை எடுத்துக்கொண்டு அங்கயே தங்கி விட்டேன். அந்த சனிக்கிழமை கோயம்பத்தூர் கோனியம்மன் கோவிலுக்கு செல்லலாம் என முடிவு செய்து மாலை ஆறு மணியளவில் சென்றடைந்தோம். அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது சில முன்னேற்பாடுகள் இருப்பது.

கோவிலின் தர்மாதிகாரி என் பெரியப்பாவின் நண்பரின் நண்பர். அதனால் எங்களுக்கு வரவேற்பு பலமாக இருந்தது. சிறுது நேரத்தில் அவரே எங்களை அழைத்துக்கொண்டு சன்னதி சென்றார். வழக்கமாக மக்கள் தரிசிக்க இருக்கும் வரிசையிலயே மிக முன்னால், சன்னதிக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தோம்.

சிறிது நேரத்தில் நடை திறந்தவுடன் எங்களை அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு மிக அருகில் சென்று நிற்க அனுமதித்தனர். அதுவே ஆங்கிலத்தில் சொல்லுவது போல் embarassing ஆக இருந்தது. தீவாரதனை சமயத்தில் எங்கள் எழுவரின் ஆக்கிரமிப்பால் அம்மன் தரிசனம் கிடைக்காத பக்தர் ஒருவர் "தள்ளி நில்லுங்க.. மறைக்குது" என்று கத்தி விட்டார்.  அம்மனுக்கு ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்க ஆடை சூட்டியதை தரிசிக்க முடியாத ஏக்கம் அவருக்கு.

இது போன்று பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் மற்றவர்களை அழுத்தி சிலரை முக்கியப்படுத்துவது சரியா? இது இன்று நேற்று நடப்பதாக தெரியவில்லை. அதே சமயம் இது போன்ற சிபாரிசுகள் இல்லாமல் போனால் கோயில்களில் கிடைக்கும் ட்ரீட்மேண்டே வேறு மாதிரி இருக்கிறது. நான் சொல்லுவது அதிகப்பிரசிங்கித்தனமாக சிலருக்கு பட்டாலும் இந்த தரிசனம் சிறப்பு தரிசனம் என்பதை விட சிரிப்பு தரிசனமாகவே ஆகி விட்டது..

No comments:

Post a Comment