Monday 1 March, 2010

நாணயம்..

நாணயம்.. - படத்தின் முன்னோட்டத்தை தொலைக்காட்சிகளில் பார்த்தபோதே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனாலும் பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை. திருட்டு டி.வி.டி. யில் தான் பார்த்தேன். படம் முடிந்தவுடன் அதற்காக நொந்து கொண்டேன்.

ஆயிரத்தில் ஒருவனை நான்கு முறை தியேட்டர் சென்று பார்த்ததில் ஒரு முறை குறைத்து இப்படத்தை பார்த்திருக்கலாம் என்று தோன்றியது. படத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை யூகிக்க முடிந்த ஆனாலும் வித்தியாசமான திருப்பங்கள்.

பேங்க் ஆபிசர் எஸ்.பி.பி யை ஒரு தாக்குதலில் இருந்து காப்பாற்றுகிறார் பிரசன்னா. சொந்த தொழில் தொடங்க வங்கியில் கடன் வாங்க முயற்சிக்கும் பிரசன்னாவை தன வங்கியில் முதலில் சிறிது காலம் வேலை பார்த்து அங்கயே கடன் உதவி செய்து தருவதாக சொல்கிறார் எஸ்.பி.பி. ஒரு தருணத்தில் யாருமே கொள்ளை அடிக்க முடியாத  வங்கியை வடிவமைக்கிறார் பிரசன்னா. அதை அவரை வைத்தே கொள்ளையடிக்க  திட்டம் இடுகிறார் சிபி ராஜ். அதன் பின்புலம் என்ன? காரணம் என்ன?

கதையை விட திரைக்கதியில் மிகுந்த கவனம் செலுத்தும் கிறிஸ்டோபர் நோலன் முறையை பின்பற்றியிருக்கிறார் இயக்குனர். எந்த சமரசமும் இல்லாமல் கதைக்கு தேவையான நடிகர்களையும் கதாபாத்திரங்களையும் வைத்து எளிமையான முறையில் கதை சொல்லிய விதம் அபாரம்.

வங்கிக்கொல்லைக்கான நோக்கம் (motive) மேலோட்டமாக பார்க்கும் பொது சாதரணமாக தெரிந்தாலும், கொஞ்சம் deeepppp ஆ யோசிச்சு பார்த்த சரின்னு தான் படுது.

தமிழ் சினிமாவில் மற்றுமொரு நல்ல முயற்சியை தவற விட்டு விடாதீர்கள்.. அப்புறம் ஒங்க இஷ்டம்..

1 comment: