Saturday 19 June, 2010

ராவணன்..

ராவணன்.. - மணிரத்தினத்தின் சமீபத்திய வெளியீடு. இப்பொழுது தான் திருவான்மியூர் தியகராஜாவில் ஈவினிங் ஷோ முடித்துவிட்டு வருகிறேன். ரோஜாவை போன்ற கதைக்களம். மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியீடு. விக்ரம், அபிஷேக், ஐஸ்வர்யா போன்ற நட்சத்திர குவியல். இவ்வளவு இருந்து படம், தெலுங்கில் என் நண்பர்கள் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு சொற்றொடர் போல் "அன்த சீன லேது லே..".


விக்ரமின் தங்கையின் வாழ்கையை சீரழித்து, சீர்குலைத்த போலீஸ் அதிகாரியின் மனைவியை கடத்தி கொல்ல நினைத்து, மயங்கி, விடுவித்து, செத்துமடிவதே கதைச்சுருக்கம். 


அனுமன் போல் காத்திக் தூது செல்வதிலும், திரும்பி வந்த ஐஸ்வர்யாவை  ப்ரித்வி சந்தேகிப்பதிலும் ராமாயணம். கதையை தள்ளி வைத்து விட்டு ஒரு படைப்பாக பார்த்தல், பல விஷயங்களை பாராட்ட தான் வேண்டும். இந்தியாவில் இப்படி இடங்கள் உள்ளனவா என்று அதிசயிக்கும் வகையில் இட தேர்வு. ஊசி கூட நுழையாத இடத்திற்குள்ளும் நுழைந்த கேமரா. மலை வாழினரின் உடை, நடை பாவனை. பல காட்சிகள் எடுக்கப்பட்ட இடம் மற்றும் விதம். இவை அனைத்துமே தமிழ் சினிமாவிற்கு புதிது. 


இருந்தும் கதாபத்திர வடிவில் உள்ள குழப்பம் நம்மையும் கொல்கிறது. ரோஜாவில் இருந்த தெளிவு இல்லை. சில இடங்களில் "இருவர்" பின்னணி இசை பல்லை இளிக்கிறது.  


சென்ற வாரம் பார்த்த சிங்கத்தை விட இராவணன் மேல் என்றாலும், "ஏதோ மிஸ்ஸிங்" என சொல்ல, நினைக்க வைக்கிறது..

5 comments:

  1. +1 ... நான் புதுசா ஒன்னும் எழுத தேவை இல்லை. :) i guess i can redirect it directly here if i wanna write something bout this. :)

    ReplyDelete
  2. Short and nice review. See my view about this in my blog.

    ReplyDelete
  3. Deepan's blog.. http://sevivazhiseithi.blogspot.com/
    Really better than this one. Has a deep contentful review. Do see it..

    ReplyDelete
  4. Singam , ravanan both are different line...thiraikathayil singam is far better that ravanan(my comments)...thookam than vanthuchu ravanan parkayil!!!

    ReplyDelete