Wednesday 28 July, 2010

மரணம்..

மரணம்.. - என் உடன் வேலை பார்ப்பவரின் தாயார் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்து விட்டார். திங்கட்கிழமை திருப்பதியில் வைத்து இறுதி சடங்குகள் நடந்தன. உடலை ஊர்வலமாக எடுத்து மயான பூமிக்கு சென்று சடங்குகள் செய்ய ஆரம்பித்தார்கள். அப்பொழுது என்னை வருத்தமடைய செய்த சம்பவங்கள் மூன்று.

ஒன்று - உடலை குழிக்குள் இறக்கும் முன்னர் தாயார் அணிந்திருந்த நகைகளையும், தங்கத்தையும் எடுத்தனர். உருவினர் என்றே சொல்ல வேண்டும். அவர் இறந்தது ஹைதராபாத். ஐஸ் பெட்டிடில் வைத்து உடலை திருப்பதி கொண்டு வந்ததி உடல் இருக்கமடைந்திருந்தது. அப்படி தங்கததை  எடுக்க வேண்டுமென்றால் முன்னதாகவே எடுத்திருக்க வேண்டும். அல்லது அப்படியே விட்டிருக்கலாம். மனிதர்களை விட மதிப்பு மிகுந்த பொருட்கள் நாட்டில் கூடிவிட்டன.

இரண்டு - சடங்குகளை முழுவதுமாக முடிக்க கூட இல்லை. ஒரு பக்கத்தில் அனைவரும் இயற்கையின் அழகையும், பக்கத்தில் உள்ள கட்டிடத்தின் கட்டுமானத்தையும் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். "Whatever happens life has to go on". ஆனால் அடுத்த நொடியே அல்ல. இறுதி சடங்கு முடியும் வரையாவது அமைதி காக்க வேண்டிய common sense கூட இல்லை.

மூன்று - இறந்தவரின் கணவரும், அவரது மாப்பிள்ளைகளும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். திடீரென கணவர் மட்டும் தனியே நடந்து சென்று கொண்டிருந்தார். மாப்பிள்ளைகள் இருவரும் புகை வண்டிகளாக பக்கத்து டீ கடையில் அலவலாகிக்கொண்டிருன்தனர். எப்படியும் அவருக்கு 65 வயதிருக்கும். அதுவும் இந்த சமயத்தில் அவரை தனியாக விட்டு விட்டு... சொல்வதற்கு ஒன்றுமில்லை. மனிதன் மாறிவிட்டான். மரத்தில் ஏறிவிட்டான்..

2 comments:

  1. I like the last two sentences...மனிதன் மாறிவிட்டன. மரத்தில் ஏறிவிட்டன.. THATS REAL!!!

    ReplyDelete
  2. very sad to here this!!!! - selfish people!!!

    ReplyDelete