Wednesday 6 October, 2010

எந்திரன்..

எந்திரன்..- முதல் நாள் பார்க்கும் வசதி இல்லாமல், காத்திருந்து ஐந்தாம் நாள் டிக்கெட் விலை ஐம்பதாக குறைந்த பின் அருகில் உள்ள தியாகராஜா வில் நேற்று இரவு சென்றோம். சாரு நிவேதிதா "குப்பை படம்" என்று சொன்னதிலிருந்தே படம் ஓரளவு இருக்கும் என்று நம்பிக்கையுடன் சென்றேன். நம்பிக்கை பொய்க்கவில்லை. சிவாஜியை விட ஆயிரம் மடங்கு தேவலாம். 


ரஜினிக்கென்று எந்த வித சர்கஸ் அறிமுகமும் இல்லாமல், ஆர்ப்பாட்டமில்லாமல், ரசிகர்களின் "தலைவா" வுடன் தொடங்கியது படம். முதல் காட்சியில் இருந்தே படம் உயிர்பெற்று நகர்ந்தது. படத்தில் வரும் ரோபோவும். இயல்பாக கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வழங்குவதில் தான் எந்த வகையிலும், யாருக்கும் குறைந்தவரில்லை என்பதை ரஜினி நிரூபணம் செய்திருக்கிறார். வசீகரன் சிட்டியை அதாவது சிட்டி என்கிற ரோபோவை உருவாக்குகிறார். உலகிலயே மிக அதிநவீன humanoid      
வகை ரோபோ அது. கார் ஓட்டுகிறது, T.V. யை உடைக்கிறது, 'who is chellattha?" என்கிறது, சொன்னதை சொன்ன படி செய்து காமெடி செய்கிறது. அனால் உணர்ச்சி இல்லாமல் செய்கிறது. Evaluation இல் அதனால் fail உம ஆகிறது.


அதை ராணுவத்தில் பங்காற்ற வைப்பதற்காக உணர்ச்சி புகுத்த முயற்சிக்கிறார் வசீகரன். உணர்ச்சியே வினையாகிப்போய் முதாளிளியின் காதலியையே காதலிக்கிறது, கைபிடிக்க நினைக்கிறது. கையை பிடித்ததா என்பது தான் Climax (ஆங்... அத சொல்ல மாட்டேனே.. ).


முதல் பாதி முழுக்க சொதப்பல்களே இல்லாமல் பயணிக்கும் கதை, பின் பாதியில் அதை தவிர்க்க முடியாமல் திணறுகிறது. அதில் ஒரே ஆறுதல். ரஜினியின் வில்லத்தனம் (என்ன வில்லத்தனம்...) மட்டுமே. மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். "வசி.. மேஹ்ஹாஈ.. " என ஆடு போல் கத்தி கிளப்புகிறார். பாடல்களும், பின்னணி இசையும் மிகவும் சுமார். 
ஒளிப்பதிவும், CG உம், படத்தை தூக்கி நிறுத்துகின்றன. 


மொத்தத்தில் முதல் பாதி சுஜாதா பளபளக்கிறார்.. பின் பாதியில் ஷங்கர் பல்லை இளிக்கிறார்.. DOT..

1 comment:

  1. Awesome review. I am not going to write a review for enthiran because there is no need to have two reviews with same contents. If I write a review for this, that will contain all the above points except comment on Chaaru Niveditha's comment :-). I think this is the first time we have exactly same (100%) mindset about any movie.

    ReplyDelete