Sunday 24 April, 2011

கோ..

கோ.. - வெள்ளிக்கிழமை செல்வதாக நினைத்து சனிக்கிழமை ரிசர்வ் செய்து, "இந்த படத்துக்கு, அதுவும் ஒன்பதே முக்கால் ஷோவுக்கு இவ்ளோ கூட்டமா??" என வியந்து, "டைட்டில் லேந்து பாத்துரணும்" என முண்டியடித்து போய்  உட்கார்ந்தோம். எழுத்து வித்தியாசமாக போடப்பட்டது. ஜீவா வை விட, கார்த்திகாவுக்கும், பியாவுக்கும் கைதட்டல் நிறைய கிடைத்தது. 

முதல் காட்சியிலயே பறந்து பறந்து போட்டோ எடுத்து, குற்றவாளிகளை பிடிக்கும், சமூக சேவக ஜீவா அறிமுகம். பின் கார்த்திகா, பியா அறிமுகங்கள். சில பல ஆபாச, இரட்டை அர்த்த வசனங்கள். பிறகு கதை சொல்லலாமா வேண்டாமா என்ற தயக்கம். அஜ்மலை வைத்து ஒரு வழியாக கதை என்ற வஸ்துவை ஆரம்பித்து, பிரகாஷ்ராஜ் ஒரு காட்சியில் ஸ்கோர் செய்து, பியா பாவமாக செத்து மடிய, இடைவேளை.பின்பாதியில் ட்விஸ்ட் என்கிற பெயரில் பல வித்தைகள் செய்து படத்தை ஒரு வழியாக முடிக்கிறார் ஆனந்த. 

ஆனந்த என்றாலே ஆபாசமாகவும், இரட்டை அர்த்தமாகவும் வசங்கள் கட்டாயமா என்ன? படத்திலயே அப்படி என்றால், திரைஅரங்கில் அதற்கு வரும் கவுண்டர்களுக்கு கேட்கவே வேண்டாம். திருப்பத்தை மட்டுமே நம்பி மற்ற அனைத்தையும் கோட்டை விட்டிருக்கிறார் ஆனந்த.

1 comment:

  1. i saw the film last week, i liked it da.. fast moving.. unnecessary twists irunthalum none of those were questionable.. quite a fast screen play ..

    ReplyDelete