Sunday 15 May, 2011

அழகர்சாமியின் குதிரை..

அழகர்சாமியின் குதிரை.. - முதல் முறையாக தேவியில், அதிகம் செலவழித்து பார்த்தேன். இரண்டு அழகர்சாமிகள், இரண்டு குதிரைகள். ஒருவர் சாமி, மற்றொருவர் ஆசாமி. இருவரின் குதிரையும் தொலைகின்றன. ஆசாமியின் குதிரை சாமியின் குதிரை ஆகிறது. ஆசாமி என்ன ஆனார். குதிரை திரும்ப கிடைத்ததா? இதை வைத்து கதை சொல்ல மெனக்கிட்டிருக்கிறார் சுசீந்திரன். 

வித்தியாசமான கதை களத்தை தேர்வு செய்தத்திற்கு, சுச்சென்றநிர்க்கு ஒரு சபாஷ். அனால் சினிமா என்பது கருக்கதை மட்டும் அல்ல. அதை எப்படி சொல்கிறோம் என்ற கதை சொல்லும் கலையும் சேர்ந்தது என்பதை முந்தைய இரண்டு படங்களில் நன்கு புரிந்து வைத்திருந்த இயக்குனர் இப்படத்தில் அந்த இடத்தில் சொதப்பியிருக்கிறார். ஒரு இடத்தில் நன்றாக இருப்பது போல் தோன்றும் கதையின் போக்கு, மறு நிமிடமே நொடிக்கிறது.

நகைச்சுவையும் பெரிதாக எடுபட்டது போல் தெரியவில்லை. அங்கு அங்கு சிரிக்க சில வசனங்கள் இருந்தாலும், "Laugh Out Loud" moments இல்லை எனவே சொல்ல வேண்டும். மூட நம்பிக்கைகளை சாடுகிறார், சாமியார்களை கிண்டல் செய்கிறார், தவிர படத்தில் கவினிக்க வேண்டிய விஷயங்களை பார்க்க முடியவில்லை.

இது நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் என கேள்விப்பட்டேன். அப்படியெனில் சுசீந்த்ரனும்  அம்முயற்சியில் தோற்றிருக்கிறார். 

4 comments:

  1. i found the film to be decent.. a madurai side film without violence was good to see... music was good.. few jokes were timely but as u pointed out they just dont keep u laughing for long.. a decent family film where it all ends well.. that is it..

    ReplyDelete
  2. it's wonderful life padam parthu review eluthu da..

    ReplyDelete
  3. You saw it?? Beauty of a movie.. My all time favorite..

    ReplyDelete
  4. i saw it da.. really liked the movie.. i knew u would have seen it..

    ReplyDelete