Saturday 21 May, 2011

தேசிய விருதுகள்..

தேசிய விருதுகள்.. - இம்முறை தேசிய விருதுகளை கட்டோடு அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது தமிழ் சினிமா. ஆச்சரியம் கலந்த சந்தோசம். ஏகப்பட்ட விமர்சனங்கள். காதில் விழுந்த சில கீழே...

"சன் பிக்சர்ஸ் ஏதோ பண்டானுங்க மச்சான். இல்லேன எப்டி ஆறு அடிக்க முடியும்".

"என்னையா ஆடிருக்கான் அந்த பாட்ல.. டான்ஸ் மாஸ்டருக்கு நேசனல் அவார்டாம் நேர கொடும.."

எனக்கு எந்த வியப்பும் இல்லை. வாங்கியவர்கள் அனைவரும் தகுதியானவர்களே. தனுஷிற்கு புதுப்பேட்டை படத்தில் எதிர்பார்த்தேன். என்னவோ தவறி விட்டது. வெற்றிமாறன், முதல் படத்திலயே அனாயசமான இயக்கத்தை கொடுத்து அசத்தியவர். சரண்யா, இவருக்கு எந்த விளக்கங்களும் தேவை இல்லை. 

வருடா வருடம், பிச்சைக்காரனாகவும், வெட்டியானகவும், சகதியில் புரள்பவனாகவும் இருந்து தேசிய விருதை தட்டி செல்லும் கதாநாயகர்களுக்கிடயே, சாதரணமான எந்த கோளாறும் இல்லாமலும் இயல்பாக நடித்து விருது பெறலாம் என தனுஷ் நிரூபித்திருக்கிறார். 

தனுஷ் சன் பிக்சர்ஸ் படத்தில் நடித்ததினாலோ, ரஜினியின் மருமகன் என்பதாலோ இவ்விருதினை பெறவில்லை. அப்படியே மற்ற அனைவரும். தமிழர்கள் வளர்வதை பார்த்து சந்தோசப்படுவோம், சந்தேகிக்க வேண்டாம்.

5 comments:

  1. The best tamil commercial movie I had ever seen. Danush deserved this but he has to rethink about acting in so called commercial (masala is the better word) movies like mappilai, padikkathavan, etc.,

    ReplyDelete
  2. Yes.. Yes.. That's true.. Enna panrathu.. ellarukkum fame theva paduthu..

    ReplyDelete
  3. kp karupu ku kedachadhu correct dan... nee sonnadhu ritu.. pichaikaran, vettiyan apdi nadichu vangaradha vida.. idhula natural a asathi irundhan.. romba naal apram oru nalla movie paatha feel vandadhu andha movie patha apram

    ReplyDelete