Saturday 28 May, 2011

காதல் மதம்..

காதல் மதம்.. - காதலுக்கு கண்ணில்லை. மொழியில்லை. இனம் இல்லை. அனால் மதம் மட்டும் உள்ளதாகவே தோன்றுகிறது. காதல் எனும் தனி மதம் அல்ல. காதலிப்பவர்களின் மதம். பெரும்பாலும் ஆண்களின். சில சமயம் பெண்களின். உயிருக்கு உயிராக காதலிக்கிறோம் என்பவர் கூட இவ்விதியிலிருந்து பெரும்பாலும் தப்புவதில்லை. எனக்கு தெரிந்து மூன்று காதல் திருமணங்கள் மதம் மாறிய பிறகே நடந்திருக்கின்றன. 

இரு திருமணங்கள், காதலிக்கும் பெண் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பிறகே நடந்தன. ஒரு கல்யாணம், காதலித்த ஆண், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பிறகு நடந்தது. காதலித்த பொழுது யாரும் இதை யோசித்ததாக தெரியவில்லை. கல்யாணம் வரும் பொழுது, மதம் பெரும் பூதமாக உருவெடுக்கிறது. எதற்காக ஒருவர் இன்னொரு மதத்திற்கு மாறி காதலித்த பெண்ணை/ஆணை மணக்க வேண்டும். 

1. கல்யாணத்திற்கு பிறகு ஒரு குடும்பம் ஏற்கவில்லை என்றாலும், மற்ற குடும்பமாவது தன்னை அரவணைக்கட்டும் என்ற நினைப்பாக இருக்கலாம்.

2. பிறந்த பிறகு குழந்தையின் எதிர்காலம் இதனால் பாதிக்கப்படும்  என்ற எண்ணமாக இருக்கலாம். 

3. தன் துணைக்காக விட்டு கொடுக்கும் மனப்போக்காக இருக்கலாம். 

ஏதாக இருப்பினும், கட்டாயப்படுத்தி மதம் மாற்றி மணம் செய்து கொள்வது, ஒருவரின் சொந்த விருப்பு வெறுப்புகளை முடக்கி, அவரை ஆயுள் சிறையில் அடைப்பது போன்று உள்ளது. கமல் ஹாசன் போல் நாம் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் மதம் என்ற இடத்தை வெற்றிடமாக விட முடியாது. அதற்கான தைரியமும் நமக்கு கிடையாது. கட்டாய மத மாற்றத்தை இருவரும் மேற்கொண்டு காதல் மதம் புலம் பெயர்ந்து, மத யானைகளின் மதத்தை அடக்குவதே நம்மால் முடிந்த செயல். அதை செவ்வனே செய்வோம்..

1 comment:

  1. sari than balaji.. Petrorin(ethavathu oruvar kuda) samatham vendumendral ithu pola vendathvai gal natangthe therum..

    ReplyDelete