Friday 4 December, 2009

Mechnocrats'08 -2

முதல் வருடம்:

முதல் பகுதி (தவற விட்டவர்களுக்கு)..

ஒன்று.. 


அன்று தான் பன்னிரெண்டாம் வகுப்பு பரிட்சைகள் முடிந்து வினாத்தாளையும், புத்தகங்களையும் குறிப்பாக உரை நூல்களையும், துணைவர்களையும் (Guide) கிழித்து வானத்தில் எரிந்து விட்டு சந்தோசமாக வீட்டில் வந்து படுத்தது போல் இருந்தது. கண்மூடி கனவு கலைவதற்குள் பொறியியல் நுழைவுத்தேர்வு எழுதி, அதன் தேர்ச்சி விவரங்கள் வெளியாகி, நூறு நீதமன்ற வழுக்குகள் பதிவாகி, ஒற்றைச்சாளர முறையில் கல்லூரித்தேர்வு நடந்து அதில் சரவணனுக்கு மதுரை தியாகராயர் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் இடம் கிடைத்தும் விட்டது.



தியாகராயர் பொறியியல் கல்லூரி - இந்தியாவிலயே மிகச்சிறந்த பொறியியல் கல்லூரி ... என்று சொல்ல முடியாவிட்டாலும், தமிழ்நாட்டில் உள்ள இருநூற்று சொச்சம் பொறியியல் கல்லூரிகளில் முதல் பத்திற்குள் வந்து விட பிரயத்தனம் செய்யும் கல்லூரிகளுள் ஒன்று. 2004 வருடத்திற்கான மாணவர் சேர்க்கை முடிந்து,அந்த மாணவர்கள் தங்கள் கல்லூரி வாழ்கையை தொடங்க வந்திருந்தனர். ஆகஸ்ட் 30. அவர்கள் அனைவரும் பிரிவு பிரிவாக கே.எஸ். கருத்தரங்கிற்குள் அனுப்பப்பட்டு, மந்திரிக்கப்பட்டு பின் வெளியே வந்து கல்லூரி உலா சென்றனர்.


சரவணன் நான்காவது பிரிவு மாணவர்களுடன் உள்ளே சென்றான். உள்ளே பிரின்சிபால் மற்றும் அந்தந்த பிரிவு துறை தலைகளும் மாணவர்களை நூறு ரூபாய் காந்தி தாத்தா போல் சிரித்து வரவேற்றனர். அடுத்த சில நிமிடங்களில் பிரின்சிபால் அபய் குமார் பேசத்துவங்கினார்.

"இன்னைக்கு என்ன நாள்?" அண்ணாமலை ரஜினி போல் கேட்டார்.

முதல் நாளே எதிர்பாராத கேள்வியினால் மாணவர்கள் திக்குமுக்காடி போயினர். சரியான பதில் தெரிந்தாலும் சொன்னால் தப்பாகிவிடுமோ என்ற தமிழனுக்கே உரிய பயம்.

"ஹா.. ஹா.. ஹா.. உங்கள் வாழ்கையின் பொன்னாள்" தனது மில்லியன் டாலர் கேள்விக்கான பதிலை அம்பலப்படுத்தினார் பிரின்சிபால்.

பின் அரைமணி நேரத்திற்கு எப்பிடி தங்கள் கல்லூரியில் படிப்பை தவிர மற்றதிலும் ஊக்குவிக்கிறார்கள், எந்த பிரிவில் படித்தாலும் கடைசியில் ஒரு மென்பொருள் பிரிவில் வேலை கிடைப்பது திண்ணம், மற்றும் பல திக்குமுக்காடும் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

கடைசியாக..

"மாணவர்களும், பெற்றோர்களும் கல்லூரியை பற்றி அறிந்து கொள்வதற்காக ஒரு உலா ஏற்பாடு செய்திருக்கிறோம். தவறாமல் அனுபவிக்கவும்." என்றார்.

முந்தைய பிரிவு மாணவர்களைப்போல் இப்பிரிவு மாணவர்களும் மந்திரிக்கப்பட்டு வெளியே வந்தனர்.

அதன் பிறகு மாணவர்களையும் பெற்றோர்களையும் கல்லூரியின் ஒவ்வொரு இடமாக அழைத்து சென்றார் அதற்கென நியமிக்கிப்பட்டிருந்த ஆசிரியர். மாணவர்களின் மனதில் 'இந்த வருடம் சேரும் பெண்களில் 10 சதிவிகிதமாவது அழகாக இருக்க வேண்டும்' என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. மாணவிகள் மனதில்..... மாணவர்கள் போல் இல்லை. ஒவ்வொருத்தர் மனதிலும் ஒவ்வொன்று. அதுக்கு தனி கதையே எழுதணும். வேண்டாம். கடைசியாக இயந்திரவியல் வொர்க் ஷாப் முன் நின்றனர். அதன் பொறுப்பாளர் அறுபத்தைந்து வயது மிக்க அமிர்தலிங்கம் பேச ஆரம்பித்தார்.

"நான் இந்த வொர்க் ஷாப்பில 35 வருஷமா இருக்கேன். இருக்கற மிஷின் எல்லாம் பார்த்து பயப்பட வேணாம். உங்க பசங்களுக்கு ஒன்னும் ஆகாம நாங்க பார்த்துக்குவோம்".

"என் பொண்ணு கம்பியூட்டர் சயன்ஸ் குரூப்பு. அவளும் இதெல்லாம் பண்ணனுமா?" ஒரு அப்பா கேட்டார்.

"முதல் வருஷம் எல்லாரும் கண்டிப்பா கார்பெண்டரியும், பிட்டிங்கும் பண்ணனும்."

மாணவிகள் பேயறைந்த முகத்துடன் அந்த ராட்சத இயந்தரங்களை பார்த்து மிரண்டனர்.

"பொண்ணுங்கள்ள யாராவது மெகானிகல் இருக்கீங்களா?" கலவரத்தை அதிகப்படுத்தினார் அமிர்தலிங்கம்.

ஒரு பெண் தயங்கித்தயங்கி முன் வந்தாள்.

"உன் பேர் என்ன மா?" கேட்டார் அமிர்தலிங்கம்.

"மைத்ரேயி சார்."

"குட். ஆம் கிளாட் யு சோஸ் மெகானிகல். யு டோன்ட் வொர்ரி அபௌட் எனிதிங். வி வில் டேக் குட் கேர் ஆப் யு."

"எல்லாரும் சாப்டுட்டு மறுபடியும் ஆடிட்டோரியம் முன்னாடி அசம்பிள் ஆயிருங்க. அங்க இருந்து மதியம் கிளாசுக்கு போலாம்." அறிவித்து விட்டு பதில் எதிர்பார்க்காமல் கிளம்பினார் பொறுப்பு ஆசிரியர்.


இரண்டு.. 

கல்லூரி உணவகத்தில் கிடைத்ததை தின்று விட்டு, பாம்பாட்டியின் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல் பொறுப்பாசிரியரின் கட்டளைக்கு பணிந்து அரங்கத்தின் முன் ஆஜராயினர் மாணவர்களும் பெற்றோர்களும். பொறுப்பாசிரியர் கையில் ஒரு வெள்ளை காகிதத்துடன் வந்து சேர்ந்தார். மாணவர்களை குதிரைகளைப்போல் எண்கள் குடுத்து பிரித்தார்.

"47001 டு 47075 ஏ செக்ஷன் போங்க. "

"47076 டு 47150 பி செக்ஷன். "

........................................................................................

இப்படியாக அந்த வருடம் சேர்ந்திருந்த அனைத்து மாணவர்களையும் ஆறு செக்ஷன்களாக பிரித்து அனுப்பிவிட்டு பெருமூச்சு விட்டபடி தன அறைக்கு திரும்பினார்.

சரவணன் ஏ செக்ஷனில் போடப்பாட்டான். முதல் செமஸ்டர் என்பதால் அனைத்து பிரிவு மாணவர்களும் கலந்திருந்தனர். அனைவர் முகத்திலும் முதல் முறையாக சீருடை அணியாமல் வகுப்பறையில் அமர்ந்திருந்த சந்தோசம். கிட்டத்தட்ட ஏற்கனவே நிரம்பிவிட்ட வகுப்பறைக்குள் நுழைந்து, இரண்டு பேர் அமர்ந்திருந்த பெஞ்சில் மூன்றாவதாக நெருக்கி பிடித்து அமர்ந்தான் சரவணன்.

"ஹாய் ஐ ஆம் சரவணன்"

"ஐ ஆம் சக்தி முருகன்".

"ஜார்ஜ் ராஜ ரூபன்" என பெஞ்ச் மெட்டுகள் அறிமுகமாகிக்கொண்டனர்.

அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு ஆங்கிலம், மெகானிகல் மற்றும் எலக்ட்ரிகல் பாடங்களின் ஆசிரியர்கள் அறிமுகமாகி கழுத்தை அறுத்தனர். நாலு முப்பதிற்கு வகுப்புகள் முடிவடைந்தன. சரவணன் கிளம்ப எத்தனித்தான்.

"நீங்க Hosteller ஆ Day ச்சோழர் ஆ?" ஜார்ஜ் சரவணனிடம் கேட்டான்.

"Hosteller நீங்க?" திரும்பி கேட்டன் சரவணன்.

"நானும் Hosteller தான். நான் டி 25 . நீங்க எந்த ரூம்?" ஜார்ஜ்.

"என்னையும் டி 25 ல தான் போட்ருக்காங்க." சரவணன் மகிழ்ச்சியாக கூறினான்.

"அப்பா வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போவோம். இந்த Hostel ல ராகிங் ரொம்ப அதிகம் நு சொன்னாங்க." ஜார்ஜ் பயத்தை வெளிப்படுத்தினான்.

"அப்டியா. வெளிய ராகிங் இந்த காலேஜ் ல கிடையாதுன்னு சொன்னாங்களே" அன்பே சிவம் சாமிநாதன் போல் சொன்னான் சரவணன்.

" Day scholar நா பிரச்னை இல்லையாம். Hosteller நா தாலி அத்துருவான்கலாம்." பீதியை அதிகப்படுத்தினான் ஜார்ஜ்.

சரவணன் பதிலேதும் கூற முடியாமல், வேறு வழியும் இல்லாமல் விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். மிகுந்த பயத்துடன்.

டி 25 எங்கே என தெரியாமல் இருவரும் முழித்து கொண்டு இருந்த போது இவர்களைப்போலவே, இவர்கள் வயதை ஒத்த ஒருவன் நின்று கொண்டிருப்பதை பார்த்த ஜார்ஜ் அவனிடம் சென்று அறிமுகப்படுத்தி கொண்டான்.

"ஹாய் ஐ அம ஜார்ஜ். நீங்க என்ன டிபார்ட்மென்ட்?" விளித்தான் ஜார்ஜ்.

"பைனல் இயர் " முறைத்தான் அவன்.

"நான் என்ன டிபார்ட்மென்ட் நு கேட்டேன்" தன் கேள்விக்கு பதில் வராததால் திருப்பி கேட்டான் ஜார்ஜ்.

பளாரென்று ஜார்ஜ் கன்னத்தில் ஒன்று விட்டான் அந்த மாணவன். பிறகு சொன்னான் "பைனல் இயர்"

இந்த முறை சரியான பதில் கிடைத்ததால் வாயை மூடிக்கொண்டான் ஜார்ஜ்.

"எந்த கிளாஸ் ரா?" அடிவாங்கிய ஜார்ஜைப்பார்த்து சிரித்தபடியே கேட்டன் மற்றொருவன்.

"ஏ" கன்னத்தை தடைவியபடி சொன்னான் ஜார்ஜ்.

"அண்ணன் சொல்லு அண்ணன் சொல்லு" என்றான் அவன்.

"ஏ கிளாஸ்னேன்" பயத்தில் உளறினான் ஜார்ஜ்.

"நீ டா?" சரவணனை பார்த்து கேட்டன் அவன்.

"நான்.. நானும் ஏ தான் அண்ணேன்" சரவணன்.

"அப்ப நாங்கலாம் லோ கிளாஸ் ஆ?" தன் மட்டமான ஜோக்குக்கு சுற்றியிருந்த தன் மூன்று கூட்டாளிகளுடன் சேர்ந்து சிரித்தான்.

சரவணனுக்கும் ஜார்ஜுக்கும் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

"சரி.. எத்தன மணிக்கு தூங்குவ?" கேட்டான் அவன்.

"பத்து.. பத்து மணிக்கு?" ஜார்ஜ்.

"நான் அவனைக்கேட்டேன்" சரவணனை முறைத்தான்.

"நான்.. நானும் பத்து மணிக்கு" பதிறினான் சரவணன்.

"சரி ரெண்டு பேரும் பதினோரு மணிக்கு சி 62 க்கு வந்து என்ன பாருங்க." சொல்லிவிட்டு பதில் ஏதிர்பார்க்காமல் நகர்ந்தான்.

சரவணன் இப்பொழுதே வீட்டுக்கு போய் விடலாம் என்று நினைத்த பொழுது மீண்டும் அந்த குரல்.

"டேய்.. வரல.. மவனே நாளைக்கு அத்துருவேன்...". சரவணனும், ஜார்ஜும் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

9 comments:

  1. Thanks Hari.. Eluthum pothae nenacchaen.. Aduttha chapter la innum neraya ragging irukku..

    ReplyDelete
  2. Hi good start and nice flow. Adapaavi George ah adi vanga vachiteye.

    ReplyDelete
  3. ஜார்ஜ் பேரு எனக்கு ரொம்ப பிடிச்ச பேரு தீபா.. இன்னொன்னு அவன காலேஜ்ல தான் யாரும் ராகிங் பண்ணல.. நம்மளாவது பண்ணுவோமே..
    எவனாவது கம்மன்ட் பண்ண மாட்டன பார்த்துட்டு இருந்தேன்.. ரொம்ப நன்றி..

    ReplyDelete
  4. a section ellam b6 hall nu sollave illayae..

    ReplyDelete
  5. Ellamae unmaya eluthittaa apuram katha suvaarasiyamaa irukkadhu bosu.. aanalum ungalukku gnapaga sakthi jaasthi..

    ReplyDelete
  6. ninaithaale inikum :) college memories.. proceed let me know ur college life...

    ReplyDelete
  7. To be steer clear, the point why I din't take me as lead in this story is quite simple that "I was not in Hostel".. So this is not my story.. But most of the incidents happened really.... to my friends..

    ReplyDelete